நிரந்தரம்

This entry is part 2 of 2 in the series 4 மே 2025

ஆர் வத்ஸலா மறுபடியும் அவன் மௌனம் நீளுகிறது காத்திருந்து கோபித்துக் கொண்டு அவனை சபித்து பின்  நாக்கை கடித்து கன்னத்தில் போட்டுக் கொண்டு அவன் தரப்பு சாக்குகளை- அவன் அம்மாவுக்கு உடம்பு சுகமில்லை அவன்‌ நண்பனுக்கு பெரிய பிரச்சினை அவனுக்கு மனச் சோர்வு- இப்படி ஏதாவது  கற்பித்துக் கொண்டு  பின்  சலித்து  அழுது சூளுரைக்கிறேன் ‘இன்றோடு  அவன் உறவை துண்டித்துக் கொள்கிறேன் நிரந்தரமாக’ என்று தயவு செய்து கேட்காதீர்கள் யாரும் எத்தனையாவது முறையாக என்று 

சொல்வனம் 341 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

This entry is part 1 of 2 in the series 4 மே 2025

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 341ஆம் இதழ், 30 ஏப்ரல், 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இதழும், சென்ற இதழைப் போலவே திரு.பாலாஜி ராஜு-வின் விசேஷ ஆசிரியத்துவத்தில் கவிதை இதழாக மலர்ந்திருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: ‘சொல்வனம்’ எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! பதிப்புக் குழு கட்டுரைகள் கவிதைகள் சிறப்பிதழ் சொல்வனம் கவிதைகள் சிறப்பிதழ் பாலாஜி ராஜு இலக்கியம்/புத்தக அறிமுகம் கரானா – மறையும் சுவடுகள் – ஹிந்துஸ்தானி இசை […]