முள்வெளி – அத்தியாயம் -7

This entry is part 10 of 40 in the series 6 மே 2012

அந்த உணவகத்தில் திறந்தவெளி மேல் மாடிப் பகுதியில் சண்முக சுந்தரம் நுழைந்த போது ஒரு இளம் பெண் கை கூப்பி வரவேற்றாள். “ஐ யாம் கலா. லதாம்மாவோட செக்ரட்டரி” “காட் ப்ளெஸ் யூ” அவள் தலை மீது கை வைத்து ஆசி கூறினார். லதாவின் காரியதரிசிகள் அடிக்கடி மாறியதால் முகத்தையோ பெயரையோ நினைவு வைத்திருக்க வேண்டி இருக்கவில்லை. “மாத்தித் தானே ஆவணும். எத்தனை விவகாரம்” என்று பெற்ற பெண்ணைப் பற்றி கசப்புடன் அவள் தாய் உதிர்த்த சொற்கள் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11

This entry is part 9 of 40 in the series 6 மே 2012

  தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று     காணி நிலம் வேண்டும் –  பராசக்தி பாட்டு கலந்திடவே  – அங்கேயொரு பத்தினிப் பெண் வேணும் – பாரதியின் கவிதைக்கு ஓர் பத்தினி[ப் பெண் வேண்டுமாம். அச்சம் மடம் நாணம் இவைகளைத் தூக்கி எறியச் சொன்னவன்தான் இதையும் சொல்கின்றான் பத்தினிப் பெண்ணிற்கு நம்மிடையே ஓர் காப்பியமே இருக்கின்றது. அதைப் பார்ப்போம்.   உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் […]

தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !

This entry is part 8 of 40 in the series 6 மே 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணீர்த் துளிகள் நிற்காது சொட்டக் காரண மாகுது என் மனதே ! அதைப் புரியா திருப்பதும் என் மனதே ! திரிகிறேன் உலகில் அறிவிலா மனதுடன் ! அந்த மனதை விட்டு விலக நினைத்தால் வெட்டி விடு ! நியாயமா அது கண்மணி மாற்றவனை நீ மனதில் வைத்திருப்பது ? யார் அறிவது அடுத்தவன் மனதை ? ஆத்மாவின் தாகம் அழுகிறது கடுமையாய் ஓலமிட்டு! […]

மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்

This entry is part 7 of 40 in the series 6 மே 2012

ஒரு இந்தியன் என்னும் அடையாளம் நம்மால் அண்மைக் காலத்தில் ஊடகங்கள் முன் வைத்த வழியில் மட்டுமே புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. அது மிகவும் எளிமையானது. தேசியக் கொடி, தேச வரைபடம், மூன்று தேசியப் பண்டிகைகள் என்னும் அளவு எளிமையானது. இதே போல் காந்தியடிகள் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் என்னும் அளவில் மட்டுமே அவரைப் பற்றிய புரிதல் இருக்கிறது.இந்தியன் என்னும் அடையாளத்தை இவ்வளவு எளிமைப் படுத்துவது சிறுபிள்ளைத்தனமானது. தொன்று தொட்டு இந்திய நிலப்பரப்பில் அன்னிய படையெடுப்பை ஒரு […]

பில்லா 2 இசை விமர்சனம்

This entry is part 6 of 40 in the series 6 மே 2012

முழுக்கப்புதிதாகவும் , முன்னெப்போதும் கேட்டிராத இசைக்கோவைகளுடனும் களமிறங்கியிருக்கிறார் யுவன் இந்த பில்லா-2வுக்கென. முதலிலேயே சொல்லிவிடுகிறேன் பாடல்கள் முழுக்க இளைஞர்களை கவரவைக்க வேணுமென்ற முயற்சியிலேயே பின்னப்பட்டிருக்கிறது.இதுவரை கேட்டிராததாக இருக்க வேணுமென்ற முயற்சியில் ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறார் யுவன். அதே முயற்சி பின்னணி இசையிலும் இருக்கும் என்றே நம்புவோம். பில்லா-1 ல் அவருக்கு சில அழுத்தங்கள் இருந்ததென்பது உண்மைதான். ரஜினி பாடியவற்றை மீளக்கொண்டு வந்தே ஆகவேண்டுமென்று , படமே ரீமேக் என்பதால் , இருப்பினும் தீம் ம்யூஸிக்கில் கலக்கியிருந்தார்.அதில் பாடல்கள் அனைத்தும் […]

தங்கம் 5- விநோதங்கள்

This entry is part 5 of 40 in the series 6 மே 2012

தங்கத்தால் என்னனென்ன பொருட்கள் செய்யலாம்? தோடு, வளையல், அட்டிகை, ஒட்டியாணம், மோதிரம், வங்கி, காப்பு இவையெல்லாம் தான் நாம் அறிந்தவை. ஆனால் மற்ற நாட்டவர்கள் அதை பல்வேறு விதமாக பயன்படுத்த முயல்கிறார்கள். அவை பெரும்பாலும் விளம்பரத்திற்கென்றாலும், செய்திருக்கும் பொருட்கள் விசித்திரமானவை. சென்ற ஆண்டு 2011 முடிவில் வந்த கிறிஸ்துமஸ் விழாவிற்காக ஜப்பானைச் சேர்ந்த தனாகா என்பவர், ஒரு தங்க கிறிஸ்துமஸ் மரத்தையே உருவாக்கியிருந்தார். அவர் டோக்கியோவின் முக்கிய வணிகச் சந்தையான கின்சாவில் சிறந்த நகைக்கடையை வைத்திருப்பவர். 12 […]

குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்

This entry is part 4 of 40 in the series 6 மே 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க கால மக்கள் பல்வேறு சடங்கு முறைகளைக் கொண்டிருந்தனர். அச்சடங்குகள் அவர்களது நம்பிக்கைகளின் வாயிலாகவே தோன்றியிருக்க வேண்டும்.  சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை பழந்தமிழ் மக்களின் பல்வேறு விதமான நம்பிக்கைகளை எடுத்துரைக்கிறது. குறிசொல்லல் தெய்வத்தின் அருள் பெற்ற ஒருவர், மற்றொருவரின் சிக்கலுக்குத் தீர்வுகூறும் வகையில் அமைவதே குறிசொல்லலாகும். ‘‘தெய்வத்தின் அருள்பெற்று தன்வயமிழந்த நிலையில், ஒருவர் மற்றொருவரின் சிக்கலுக்குத் தீர்வு கூறுவதே குறிசொல்லல் எனப்படும். இதனை ‘அருள்வாக்கு’ […]

ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “

This entry is part 3 of 40 in the series 6 மே 2012

பாராட்ட வேண்டிய விசயம் ஒன்றிருக்கிறது இந்தப் படத்தில்! பண்டி சரோஜ்குமாரின் “ அஸ்தமனம்” படத்திற்குப் பிறகு, இந்தப் படமும் 90 நிமிடம் தான். ஆனால் சினிமாவின் எந்த அத்தியாவசியத்தையும் களைந்து விடவில்லை இதன் இயக்குனர். நான்கு பாட்டுகள், இரண்டு சண்டைகள் எல்லாம் உண்டு இந்த நேரத்திற்குள். சபாஷ்! சூரியா( தருண் ஷத்திரியா) கட்டணக் கொலையாளி. அதனால் பெரும் பணம். கார், பங்களா என்று வசதியாக வாழ்பவன். கூடுதல் தகுதி, அவன் ஒரு அனாதை. கன்னியாகுமரியில் போட்டோ ஸ்டூடியோ […]

சயந்தனின் ‘ஆறாவடு’

This entry is part 2 of 40 in the series 6 மே 2012

‘ஆறாவடு ’ சயந்தனின் ‘ஆறாவடு’ என்கிற நல்ல நாவலின் வரவுபற்றி ஊடகங்களில் அறிந்தபோதும், அவ்வப்போ நினைவூட்டப்பட்டபோதும் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் நான் நாவலைப்படிக்கும்வரையில் மேற்கொண்டு பிரதி பற்றிய விமர்சனங்களைப் படிப்பதில்லை என்று இருந்தேன். என்இயல்பான மெத்தனத்தால் இப்போதுதான் நாவல் எனக்குக் கிடைத்தது. (நான் கேட்டதால் சயந்தனே எனக்கொருபிரதியை அனுப்பிவைத்தார்.) என் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வீண்போகவில்லை. அத்தனை நம்பிக்கை தருகிறது பிரதி. (அநேகமான சில குறிப்புகளில் தொனிப்பதுபோல) ‘எமக்குத்தெரியாத என்னத்தை இவர் புதிதாகச் சொல்லிவிட்டார்’ என்றகோணத்தில் பிரதியை அணுகுவது […]

ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “

This entry is part 1 of 40 in the series 6 மே 2012

‘ அலைபாயுதே ‘ வின் நவீனப் பிரதியைப் பார்த்தது போலிருக்கிறது. அத்தனை இளமை! இரண்டரை மணிநேரப் படம் போனதே தெரியவில்லை. இன்னொரு மணிரத்னம் in the making! வெல் டன் ஆண்ட்ரூ! கார்த்திக் ( ஷிவ் பண்டிட்) அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவன். மலர் ( மானஸி பரேக் ) என்கிற கருணைமலர் எஸ் ஆர் எம்.. கார்த்திக், படிக்கும் காலத்தில், பழகும், இரண்டு பெண்கள், சோனா, காயத்ரி. முதலாவது மக்கு. இரண்டாவது புத்திசாலி என்று தன்னை […]