Posted inகவிதைகள்
தீட்சண்யம்
க.தூயவன் பெருமரம் ஒன்றை நனைக்கும்வரை அது மழையாகத்தானிருந்தது கிளைதொட்டு இலைதொட்டு மலர்தொட்டு காம்புதொட்டு கனிதொட்டு நுனிதொட்டு பச்சையத்தில் வழிந்தோடி வேர்தொட்டு மண்தொட்ட பிறகு சர்வ நிச்சயமாய் அது மழையாய் மட்டும் இல்லை.. க.தூயவன்