சாவடி

This entry is part 22 of 22 in the series 16 நவம்பர் 2014

காட்சி 1 காலம் காலை களம் வெளியே மேடை இருளில். பின்னணியில் திரை ஒளிர்கிறது. முதல் உலக யுத்தக் காட்சிகள். போர்க்காலச் சென்னை (1914) காட்சிகள் நகர்கின்றன. வர்ணனையாளர் குரல் : மனித குல வரலாற்றில் உலக நாடுகள் இரண்டு தொகுதிகளாக அணிவகுத்துப் போர் புரிந்த முதலாவது உலக யுத்த காலத்தில் இந்தியா நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. அப்போது பாரதம், பிரிட்டீஷ் காலனியாதிக்கத்தில் இருந்த அடிமை நாடு . இங்கிருந்தும் ஆயிரக் கணக்கான ஏழை எளியவர்கள் யுத்தத்துக்குப் போனார்கள். […]

தொடுவானம் 42. பிறந்த மண்ணில் பரவசம்

This entry is part 1 of 22 in the series 16 நவம்பர் 2014

  42. பிறந்த மண்ணில் பரவசம் பளபளவென்று விடிந்தபோது புகைவண்டி சிதம்பரம் வந்தடைந்தது. நன்றாகத் தூங்கிவிட்ட அண்ணன் திடீரென்று விழித்துக்கொண்டார். ” சிதம்பரமா? ” என்றார். ” ஆம் என்று கூறிய நான் பெட்டியை வெளியே இழுத்து இறங்கத் தயாரானேன். அண்ணனும் இறங்கிவிட்டார். நேராக தேநீர்க் கடைக்குச் சென்று சுடச் சுட சுவையான தேநீர் பருகினோம். அங்கு வீசிய காலைக் குளிர் காற்றுக்கு அந்தச் சுடு தேநீர் இதமாக இருந்தது. பத்து வருடங்களுக்கு முன் நான் பார்த்துச் […]

காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. – ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’

This entry is part 2 of 22 in the series 16 நவம்பர் 2014

-ராமலக்ஷ்மி இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணமும் மகாபாரதமும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒருவகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. கட்டுரைகள் ஒரு நேர்கோட்டில் விளக்கங்களுடன் நகர்ந்து செல்பவை. அவற்றையே கற்பனை கலந்து காட்சி விவரிப்போடு புனைவாக வடிப்பது ஒரு எழுத்தாளனின் திறமைக்கான சவால் என்றே சொல்லலாம். பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய […]

பட்டிமன்றப் பயணம்

This entry is part 3 of 22 in the series 16 நவம்பர் 2014

வளவ. துரையன் திருக்கனூருக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தப் போயிருந்தோம். 1970 முதல் 1980 முடிய வாராவாரம் ஞாயிறு மாலைகளில் பட்டி மன்றம்தான் பேசுவோம். பேசுபவர்கள் ஏழு பேர் என்றால் எங்களுடனேயே கேட்பதற்கும் நான்கைந்து பேர் வருவார்கள். வளவனூர் கடைத்தெருவில் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு எங்கள் கூட்டத்தைப் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே “ஜமா இன்னிக்கு எந்த ஊரு போவுது?” என்று கேட்பார்கள். அப்பொழுது இலக்கிய வெறி பிடித்து அலைந்த காலம்; எல்லாரும் பேச்சுப் பயிற்சி பெற்ற காலம். […]

பூசை

This entry is part 4 of 22 in the series 16 நவம்பர் 2014

-எஸ்ஸார்சி அவன் ரேஷன் கடையில் சாமான்கள் வாங்கச்செல்வது ஏப்போதேனும் ஒருதடவைதான்.அனேகமாக பக்கத்து வீட்டு முத்துலச்சுமிதான் எப்போதும் சாமான்கள் அவனுக்கும் சேர்த்து வாங்கி வருவாள்.ஒரு நாள் ரேஷன் கடைக்காரர் முத்துலச்சுமியிடம்’ கார்டுகாரங்க யாரோ அவுங்க ரேஷன் கடைக்கு நேரா வரட்டும் இந்த கார்டுக்கு சாமானுங்க தர்ரது எல்லாம் அப்புறம் பாக்கலாம் இண்ணைக்கு இந்த கார்டுக்கு சாமான் தர முடியாது’ என்று சொல்லியதாக அவனிடம் சொன்னாள். முத்துலச்சுமி ஒன்றும் சும்மா போய்வருபவளும் இல்லை எங்கு போகச்சொன்னாலும் அதில் ஒரு கணக்கு […]

ஆனந்த பவன் நாடகம்

This entry is part 5 of 22 in the series 16 நவம்பர் 2014

வையவன் காட்சி-13 இடம்: ஆனந்த பவன் நேரம்: மத்தியானம் மூன்று மணி உறுப்பினர்: சுப்பண்ணா, ரங்கையர், சாரங்கன். (சூழ்நிலை: ரங்கையர் கடையடைப்புக்காகச் சாத்தப்பட்டிருக்கிற இரும்புக் கதவுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். ஹோட்டல் வெறிச்சோடியிருக்கிறது. தெருவைப் பார்த்து அமர்ந்திருக்கும் ரங்கையரிடம் பேச வருகிறார் சுப்பண்ணா) சுப்பண்ணா: கடையடைப்பு ஆறு மணியோட முடிஞ்சுடுமா அண்ணா? ரங்கையர்: (திரும்பிப் பார்த்து) இப்பவே முடிஞ்சாப்லதான்! மாருதி கேப்ல, உப்புமா கெடைக்கறதுண்ணு தெருவிலே பேசிண்டு போனா… சுப்பண்ணா: பெரியண்ணாவுக்கு இதெல்லாம் பிடிக்காதேண்ணா. ரங்கையர்: […]

அந்திமப் பொழுது

This entry is part 6 of 22 in the series 16 நவம்பர் 2014

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி ​ அந்திமப் பொழுதென்கிறாய் உன் முகம் கண்டு விடியும் என் வாழ்வினைப் பார்த்து. ​​. அன்பினால் வருடி உயிரினால் பிரசவித்தாய் காதல் பொழுதுகளை. ​​. பார்க்காதிருந்தும் பேசாதிருந்தும் கூடாதிருந்தும் நேசத்தின் வேர் ​வாடி யிருக்க வில்லை. ​.​ ஒரு வார்த்தையில் துளிர்விட்ட கண்ணீரும் நம் நேசத்தின் சாரலையே உலகில் தூவிச் செல்கிறது ​.​ இப்பொழுது பேசு காதலின் உயிரூட்டத்தை ஊடலின் உயிரோட்டத்தை அந்திம எண்ணத்தை தள்ளி வை. உன்னோடு ஒருகால் என் வாழ்வும் அத்தமிக்கக் […]

தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு

This entry is part 7 of 22 in the series 16 நவம்பர் 2014

காதலைப் பற்றிப் பாடாத கவிஞர் எங்காவது, எவராவது உள்ளாரா ? காதல் தவிப்பு களில் நெஞ்சுருகாத கவிஞர் யாராவது உண்டா ? மானிட வாழ்வுக்குக் காதல் எவ்விதமான நெருக்கத் தொடர்பு கொண்டுள்ளது என்பதை என் நண்பர் கவிஞர் புகாரி காட்டுகிறார் ஒரு கவிதையில். தாவிடும் ஆசைகள் கூத்தாடும்! இன்பத் தவிப்புகள் சிக்கியே நாளோடும் ! மானிடம் பூத்தது, காதலுக்காய்! அந்த மன்மத ராகங்கள் வாழ்வதற்காய் ! அடடா! இந்த வரிகளும், வார்த்தைகளும் நடனமாடி எப்படித் தாளங்கள் போடுகின்றன […]

வே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை

This entry is part 8 of 22 in the series 16 நவம்பர் 2014

இளம் பாடலாசிரியர் வே. பத்மாவதியின் முதல் கவிதைத் தொகுதி கைத்தலம் பற்றி. அவர் என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்றவர். மென்பொறி வல்லுநர். ஆனாலும் சிங்கை மணற்கேணி நடத்திய போட்டியில் முதல் பரிசு வென்று சிங்கை சென்று வந்தவர். பல தொலைக்காட்சிகளிலும் கவிதை வாசிப்பதும் புத்தக விமர்சனமும் செய்து வருகிறார். சிறந்த பேச்சாளர். பல்வேறு பத்ரிக்கைகளில் கதைகள் கவிதைகள் எழுதி வருகிறார். லேடீஸ் ஸ்பெஷலில் நாட்டுப்புறப் பாடல்களை கிராமங்களுக்கே சென்று தொகுத்து வழங்கியது அருமை. இனி இவருடைய […]

ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்

This entry is part 9 of 22 in the series 16 நவம்பர் 2014

(1) ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும் ஒரு விநோதமான இரவு. முதல் யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. நடு யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும் மறுபடியும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. கடைசி யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும் மறுபடியும் மறுபடியும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. விடியலில் […]