அணுப்பிணைவு மின்சக்தி நிலையத்தை கதிரியக்கக் கழிவின்றி நிதிச் சிக்கனத்தில் இயக்கலாம்.

This entry is part 24 of 24 in the series 1 நவம்பர் 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   +++++++++++++++ https://youtu.be/b-LCfx9v4YQ https://youtu.be/cDXqikzUwBU https://youtu.be/yhKB-VxJWpg https://youtu.be/oeGijutBSx0 https://youtu.be/H3F42s_MsP4 https://youtu.be/XRtMayvnLoI https://youtu.be/COqIhbDphhs https://youtu.be/PtSJH_UiRdk https://youtu.be/fK7kLuoxsx4 https://youtu.be/UlYClniDFkM ++++++++++++++++ பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டவர் ஐன்ஸ்டைன் கணிதச் சமன்பாடு மூலம் ! பிளவு சக்தி யுகம் மாறி பிணைவு சக்தி நுழையப் போகுது கதிரியக்கக் கழிவின்றி புவி விளக்கேற்ற  ! இயல்பாகவே தேய்ந்து மெலியும் ரேடியம் ஈயமாய் மாறும் ! யுரேனியம் சுயப் பிளவில் ஈராகப் பிளந்து வெப்பசக்தி உண்டாகும் ! […]

அவன், அவள். அது…! -8

This entry is part 1 of 24 in the series 1 நவம்பர் 2015

( 8 )       இன்றைக்கு சப்ஜெக்ட் பெண்களைப் பத்தி, பொதுவா லேடீஸ் பத்தி என்னென்ன அபிப்பிராயம் தோணுதோ, நிலவுதோ அதையெல்லாம் எடுத்து வைக்கலாம். ஓ.கே…! ஓ.யெஸ், ஐ ஆம் ஆல்வேஸ் ரெடி…. நிறைய ஆண்களோட மனசைக் கெடுக்கிறதே இந்தப் பெண்கள்தான். இதைப்பத்தி நீ என்ன சொல்றே? ஒரு ஆணினுடைய வெற்றிக்குப் பின்னாலே நிச்சயம் ஒரு பெண் இருப்பான்னு சொல்வாங்க…அதே போல பல ஆண்களுடைய தோல்விக்கும் குற்றங்களுக்கும் பின்னாலேயும் ஒரு பெண்தான் இருப்பாள்னு நான் சொல்றேன். பெரும்பாலுவும் […]

இந்தியாவின் கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்கள் மோதியின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்

This entry is part 2 of 24 in the series 1 நவம்பர் 2015

துஃபாயில் அகமத்     சென்ற செப்டம்பரில் தலை நகர் டெல்லிக்கு அருகே உள்ள தாத்ரி ஊரில்,  முகம்மது அக்லக் என்பவர் பசுமாட்டைக்  கொன்று அதன் மாமிசத்தை தின்றார் என்ற வதந்தியில் ஒரு வெறிக்கும்பல் அவரை அடித்து கொன்றது.   1970களிலும் 1980களிலும் பாரதிய ஜனதா கட்சி என்ற ஒன்று  இல்லாத சூழ்நிலையிலும் பசுமாட்டைக்  கொல்வது தடைசெய்யப்பட்டுத்தான் இருந்தது. அந்த குற்றச்சாட்டுகளின் பெயரில் போலீஸ்காரர்கள் வீடுகளை சோதனையிட்டதும் நடந்திருக்கிறது.   பசு இறைச்சிக்  கலவரங்கள் நவீன இந்தியாவுக்கு […]

ஆல்பர்ட் என்னும் ஆசான்

This entry is part 4 of 24 in the series 1 நவம்பர் 2015

அக்டோபர் மாத காலச்சுவடு இதழில் சுந்தர ராமசாமியின் நட்பு தனக்களித்த அனுபவங்களைப்பற்றி முகம்மது அலி எழுதிய கட்டுரை (இதயத்தால் கேட்டவர்) வெளிவந்துள்ளது. கட்டுரையுடன் முகம்மது அலிக்கு சுந்தர ராமசாமி எழுதிய நான்கு கடிதங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 1985 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் கொடைக்கானலில் நடைபெற்ற சிறுகதைப்பட்டறையில் கலந்துகொண்ட நினைவுகளின் பதிவை சு.ரா. எழுதியிருக்கிறார். பட்டறையில் கலந்துகொள்ளும்படி அழைத்தவர் ஆல்பர்ட் என்பதால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகத் தெரியப்படுத்துகிறார். சு.ரா. போன்ற ஆளுமை மதித்த ஆளுமையாக ஆல்பர்ட் விளங்கியிருக்கிறார். நாகர்கோவில் […]

செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை

This entry is part 8 of 24 in the series 1 நவம்பர் 2015

தமிழன்பு நிறை செய்தியாளர்களே, வணக்கம். இந்தச் செய்தியை நாளைய தங்கள் நாளிதழில் அல்லது ஊடகத்தில் ‘இன்றைய நிகழ்ச்சி ‘ பகுதியிலோ அல்லது நடைபெறப் போகும் செய்தியாகவோ வெளியிட்டுச் செம்மொழியின் சிந்தனைக்குச் சிறகு கட்டுவீர்கள் என்று நபுகிறேன்…வேண்டுகிறேன். தமிழன்புடன் முனைவர் சு.மாதவன் , தலைவர், செசிபே , புதுகை

தொடுவானம் – 92. பெண் தேடும் படலம்

This entry is part 10 of 24 in the series 1 நவம்பர் 2015

” எங்கே தேடுவேன். எங்கே தேடுவேன்? உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்? ” இந்தப் பாடலை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் ” பணம் ” படத்தில் பாடுவார். விடுதி நாள் விழாவுக்கு விருந்தினராக ஒரு பெண்ணை எங்கே தேடுவேன் என்ற மனநிலையில்தான் அந்த இரண்டு நாட்களும் கழிந்தன.  இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. இன்னும் துணை தேடிக்கொள்ளாமல் இருக்கும் பதினைத்து மாணவிகளிடம் ஒவ்வொருவராகக்கூட அணுகிப் பார்க்கலாம். ஆனால் தன்மானம் தடை போட்டது! […]

ஆயிரங்கால மண்டபம்

This entry is part 5 of 24 in the series 1 நவம்பர் 2015

    ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காலாக ஆயிரங்கால் மண்டபத்தை நம் நெஞ்சங்களில் கட்டி அதிலேயே அடங்கிப் போனார் ஆச்சி மனோரமா   அமீதாம்மாள்

நெத்தியடிக் கவிதைகள்

This entry is part 9 of 24 in the series 1 நவம்பர் 2015

    பத்து ஆண்டுகளாக என்னால் சாதிக்க முடியாததை ஒரு மூட்டைப்பூச்சி சாதித்து விட்டது   என் கணவர் புதுக் கட்டில் வாங்கிவிட்டார்   *****   ‘ஓவர் ஸ்டே’ இங்கு பிரம்படிக் குற்றம் ஓடிவிடுங்கள் புகைமார்களே ***** என்றோ கொடுத்த பத்து வெள்ளியை கொடுப்பார் என்று நானிருக்க மறந்திருப்பேன் என்று அவர் இருக்க இன்றுவரை அந்தப் பத்து வெள்ளியை அவர் தரவுமில்லை நான் பெறவுமில்லை அது கடனா? இனாமா? பிச்சையா? திருட்டா? ————— தெரியாது   […]

இளைஞர்களுக்கு இதோ என் பதில்

This entry is part 11 of 24 in the series 1 நவம்பர் 2015

  நவநீ வாழ்ந்து முடித்துவிட்ட களைப்பு, எல்லா திசைகளிலிருந்தும் கல்லெறி பட்டது போன்ற விரக்தி, தம்மைச்சுற்றிலும் கடன் தொல்லை, வறுமை, பணிப்பளு, பெருந்தோல்வியடைந்துவிட்டது போன்றதொரு பிரம்மை… இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவையும் தாங்க முடியாமல், சகித்துக்கொண்டு ஏதோ வாழ்க்கை ஓடுகிறது. எங்களுடைய சிரமம் யாருக்கு புரியப் போகிறது என தாங்களாகவே தங்கள் மீது சுய பச்சாதாபப்பட்டுக்கொண்டு வலம் வருகிறவர்கள் முக்கால் வாசி இன்றைய இளைய தலைமுறைகள், குறிப்பாக டீன்ஸ் என்று சொல்லக்கூடிய பள்ளி, கல்லூரி இளைஞர்-இளைஞிகளே […]