ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்ட மனோரமா மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல்களை அவர்தம் குடும்பத்தினருக்கும் பர்ந்த தமிழ் சமூகத்துக்கும் தெரிவித்துகொள்கிறேன். தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்த அனைவரும் அறிந்த முகம் மனோரமா. சுமார் 1300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா வரலாற்றின் இன்றியமையாத அங்கமாகவே மாறிப்போனவர் அவர். அவரது தமிழ் சினிமா பங்களிப்பு வெறுமே நகைச்சுவை காட்சிகளில் வந்து சென்றது மட்டுமல்ல. அவரது கலாச்சார பங்களிப்பும், அதன் விளைவுகளும் தமிழ் கலாச்சார சூழலில் நாம் […]
ஆச்சி என்று – அதாவது அம்மா எனும் பொருளில் – அனைவராலும் அழைக்கப்பட்ட மனோரமா அவர்கள் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தி திரைப்பட ரசிகர்களையும் அவரை அறிந்தவர்களையும் உலுக்கியிருக்கும். பள்ளத்தூர் இவரது சொந்த ஊர் என்பதாய் மிகச் சிறு வயதிலேயே பள்ளத்தூரில் வசித்து வந்த என் ஒன்றுவிட்ட அக்காள் வாயிலாகக் கேள்விப்பட்டதுண்டு. பள்ளத்தூர் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது பாட்டுப் போட்டிகளில் முதல் பரிசு வாங்கியவர் அவர் என்பதும் என் அக்காள் மூலம் அப்போதே தெரியும். […]
ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பும்போதே அன்று மாலையில் தூண்டில் போடச் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.பசியாறினேன். காலையிலேயே தோசைக்கு ருசியான கோழிக்குழம்பு. உண்ட களைப்பில் நன்றாக தூக்கம் சுழற்றியது. வேப்ப மரத்து காற்றில் திண்ணையில் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டேன். மதிய உணவின்போதுதான் அம்மா எழுப்பினார். அவ்வளவு தூக்கம். எந்தக் கவலையும் இல்லாத நிம்மதியான தூக்கம். பிறந்த மண்ணில் படுத்தாலே தனிச் சுகம்தான். காலையிலிருந்து கோகிலத்தைக் காணவில்லை. ஒருவேளை வயல்வெளிக்கு வேலை செய்ய போயிருப்பாள். அவள்தான் விடியலிலேயே என்னிடம் […]
பஞ்சப்படிக்காக 1984ல் திருப்பூரில் 127 நாட்கள் நடந்த பனியன் தொழிலாளர்களின் எழுச்சிமிக்கப் போராட்டத்தை திருப்பூரின் எந்த எழுத்தாளரும் இது வரை ஏன் எழுதவில்லை. அதை ” பனியன் “ நாவலாக திருச்சியில் உள்ள தி.வெ.ரா. ஏன் எழுதியுள்ளார் என்பதுதான் முதலில் மனதில் வந்தது.தொழிலாளர்களின் போராட்டம், சிரமங்கள், வெற்றி என்ற வகையில் இதை சோசலிச எதார்த்த வகை நாவலாகக் கொள்ளலாம்.திருப்பூரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் நிகழ்வுகளின் தொகுப்புகளும் அடுக்கப்பட்டுள்ள அளவில் இதை ஒரு டாக்கு நாவல் என்றும் சொல்லலாம். […]
ஜோர்டான் நாட்டின் மலைபிரதேசங்களை நூறு கோடி ரூபாய் செலவில் 3டி யில் காட்டவெனவே ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. ரிட்லீ ஸ்காட்டின் மார்ஷியன் திரைப்படத்தை பார்த்துவிட்டு மார்ஸ் கிரகம் இப்படியெல்லாமா இருக்கிறது! என்று நீங்கள் ஆச்சர்யப்பட தேவையில்லை. கையில் கொஞ்சம் பணம் இருந்தால், ஜோர்டான் நாட்டுக்கு செல்லுங்கள். அங்கே தான் இந்தப்படத்தில் வரும் பெரும்பாலான மலைப்பாங்கான இடங்களை கொண்டு படமெடுத்திருக்கிறார்கள். மார்ஷியன் படத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. கேஸ்ட் […]
என்னடா ஆள் டல்லா இருக்கே…? – கேட்டான் மதிவாணன். இருக்கையில் அமர்ந்து தன் வேலைகளை எப்போதும் மும்முரமாகச் செய்து கொண்டிருக்கும் கண்ணனுக்கு இன்று என்னவோ வேலையே ஓடவில்லைதான். இது நாள்வரை தான் கதை எழுதி எந்தப் புண்ணியமுமில்லையோ என்று தோன்றியது. சுமதி தன் கதைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது அவனை வெகுவாக உறுத்தியது. வெறும் செய்தித்தாள் படிப்பவள் அவள். தினசரி காலையில் அந்த செய்தித்தாளை அவள் கையில் கொடுத்தால் போதும். சோறு தண்ணி வேண்டாம் அவளுக்கு. சமையலைக் […]
(மிதிலா விலாஸ் தொடரின் அத்தியாயங்கள் 14லிருந்து 18 வரை பதிவு பெறாமல் விடுபட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறோம். வாசகர்களும், ஆசிரியரும் மன்னிக்க வேண்டுகிறோம். விடுபட்ட அத்தியாயங்கள் சென்ற வாரமும் , இவ்வாரமும் வெளியாகியுள்ளன.– ஆசிரியர் குழு.) தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அபிஜித்துடன் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் போவதற்குள் அவள் தந்தை அதுவரையில் ரகசியமாக உறவு வைத்திருந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். “அபிஜித்! நீ மட்டும் என்னைக் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு ஒன்பது மணியாகிவிட்டது. சித்தார்த்தா திரும்பி வந்தான். சமையல் அறையில் பாட்டியுடன் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்த மைதிலியை பார்த்ததும் திகைத்துப் போனவனாய் நின்றுவிட்டான். “வா சித்தூ! உனக்காகத்தான் காத்திருக்கிறோம். பாட்டி உனக்காக பாயசம் செய்திருக்கிறாள்” என்றாள் மைதிலி எதிர்கொண்டு அழைத்தபடி. “அந்தம்மாதான் செய்தாங்க சித்தூ! வாவா. பாயசம் ரொம்ப மணக்கிறது. இவ்வளவு அருமையான பாயசத்தை நாம் இதற்கு முன் சாப்பிட்டது இல்லை” என்றால் அன்னம்மா […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஆனால்.. சித்தார்த்தாவை பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை. இனிமேல் தன்னுடைய யோசனைகளை எல்லாம் அவனைப் பற்றித்தான் இருக்க வேண்டும். இந்த பத்தொன்பது வருடங்களாக சித்தார்த்தா துரதிர்ஷ்டவசமாக இழந்த சந்தோஷம், ஆயிரம் மடங்காய் தாயின் அன்பு வடிவத்தின் அவனுக்கு கிடைக்க வேண்டும். கடவுள் உயிருக்கு உயிரான நினைவுச் சின்னத்தை பத்திரமாக தன்னிடம் ஒப்படைத்து இருக்கிறார். கண்ணின் இமைபோல் அதனை பாதுகாக்க வேண்டும். அவள் உடல் மிதிலாவிலாசில் தரிக்கவில்லை. […]