மலர்த் தோட்டத்தினுள் அந்த மலர்ப் பதுமை மெதுவாக நடந்தாள்! குவளையும் முல்லையும்! கனகாம்பரமும் செண்பகமும்! செவ்வந்தியும் செங்காந்தளும்! நீலோத்பலமும் நாகலிங்கமும்! சம்பங்கியும் ரோஜாவும்! எத்தனை மலர்கள்! தோட்டத்திலுள்ள மலர்களைச் சொல்லவில்லை! இவ்வளவும் வனப்புமிக்க அவள் பொன்னுடலில் பூத்திருக்கின்றன! தன் மேனியில் இத்தனை மலர்கள் பூத்திருக்க அவளுக்கு இன்னும் ஆசையைப் பாருங்கள்! மங்களகரமான மஞ்சள் நிறங்காட்டும் சூரிய காந்தியைப் பறித்துக் கொண்டு, “நீ என் முகத்திற்கு இணைதானோ?” என்று கிண்கிணிக் குரலில் கேள்வி எழுப்ப, “இணையெப்படி யாகும் இனியவளே!” […]
கோ. கண்ணன் இருள் சுவை ஒளி ஊடகத்தின் ஊடாய் உலாவிடும் நேசத்துக்கு ுரியோரே! இருள் உபாசகன் ும்மை முன் நிருத்தி எழுப்பிடும் ஒற்றைக் கேள்வி இதோ! நல்லிருளைச் சுவைத்ததுண்டா நீவீர்? நகைப்புக்கு உரியதல்ல இருள். நாச் சுவை ஆறினும் நனி இனியது; நவரசம் ஒன்பதினும் நளினம் பொலிவது. அச்சத்தின் குரியீடல்ல இருள்; ஆன் பெண் அந்தரங்க மோகன ாலாபனையின் அரங்கிசை வேளை அது. வெறுக்கத் தக்கதல்ல இருள்; இறை காட்சிப் பாதையாம் …. மோனவெளியின் முடிவுரா எல்லையது […]
சத்யானந்தன் கூண்டிலிருந்த ஒரு கிளி விடுதலையாக புத்தர் எப்படி வழி வகுத்துக் கொடுத்தார் என்பது பற்றி ஒரு புராணக் கதை உண்டு. ஷென் குவாங்க் என்னும் துறவியைத் தான் முதன் முதலாக புத்தர் சீன தேசத்தில் சந்தித்தார். அப்போது தொடக்கத்திலேயே ஷென் கோபப் பட்டு புத்தரின் கேள்விகளால் எரிச்சலுற்று ஒரு சங்கிலியால் புத்தரின் முகத்தில் அடிக்க புத்தரின் பற்கள் விழுந்து விட்டன. (பின்னாளில் ஷென் அவரது சீடரானார்) புத்தர் அங்கிருந்து வெளியேறி ஒரு கோயிலின் மதிலை நோக்கியபடியே […]
_ ரமணி நாளைய விடியலுக்குள் நான் இறந்துபோகலாம் எனில் இக்கணமே என் கடைசி ஸ்வாசம் நிகழ்ந்து விடட்டும். அடுத்தவர்களை விட அதிகமாயும் நிறைய பேரைவிடச் செழுமையாயும் வாழ்ந்த பிறகு மரணத்தின் நியாயம் புரியாமலில்லை. கணேசன் வெறும் முப்பத்தெட்டு வயதிலேயே மரித்துப்போனான்! எனக்கோ கூடுதலாய்ப் பன்னிரண்டாண்டுகள்! இன்னுமொரு நாள் இல்லை அதிகமாய் ஒரு மணி நேரம் என்பது கூட நியாயமற்றதே! நான் ஒன்றும் என்னை உருவாக்கிக் கொள்ளவில்லை. வாழ்க்கையே எனக்கொரு பரிசுதான்! மரணவேளையைச் சிலர்மட்டுமே தேர்ந்து கொள்ள முடிகிறது! […]
(ரெ.கார்த்திகேசு) இருபது மாணவர்கள் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் வேன்டன்பர்க் வழக்கமாக தாமதமாக வருபவர்தான். ஆனால் பத்து நிமிடத்துக்கு மேல் தாமதமாகாது. பதினைந்து நிமிடம் வரை பேராசிரியர் வரவில்லையென்றால் மாணவர்கள் கலைந்து செல்லலாம் என்ற விதி உண்டு. இருந்தும் மாணவர்கள் காத்திருந்ததன் காரணம் வேன்டன்பர்கின் வகுப்பு சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். அதை எதிர்பார்த்துத்தான்…! அமெரிக்காவின் மிசௌரி பல்கலைக் கழகத்தில் பரவெளி ஆய்வு மையத்தின் ஆய்வுக் கூடத்தில் காத்திருந்த மாணவர்கள் இருபது பேரும் பரவெளிக் கோள்களில் கனிம வளங்கள் பற்றி […]
“என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம் எல்லா அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு இன்றளவும் நீடித்திருப்பதே ஒரு பேரதிசயம்” என்றெழுதுகிறார் மலர்மன்னன். எல்லாருக்கும் அந்தப் பேரதிசயத்தின் மூல காரணம் தெரியவேண்டுமென அவாவினால் இக்கட்டுரை இங்கு வரையப்படுகிறது. பேரதிசயத்தின் காரணம் இந்து மதத்தின் தொன்மையன்று. அதன் லிபரல் நேட்சரே. எவர் என்ன சொன்னாலும் நாம் கண்டு கொள்ள மாட்டோம் என்ற உணர்வே காரணம். மேலும், இம்மதத்தின் ‘இதுதான் கொள்கை; இதைத்தான் ஏற்றுக்கொள்ள […]
தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும் இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி என்னை சிறையிலிட்டுக் கொண்டேன் வெளியேற முடியா வளி அறை முழுதும் நிரம்பி சோக கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில் மூடியிருந்த யன்னலின் கதவுகளைத்தட்டித் தட்டி நீரின் ரேகைகளை வழியவிட்டது மழை – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
இல்லாத எல்லைக்குள் சொல்லாத சொல்லைத் தேடும் யாத்ரீகனின் கைவிளக்கு எண்ண ஊடல்களின் சொற்கூடல் கடக்கும் காலனின் நிழல் கனவுக் கடலை கடக்கும் தோனி சிந்தனை நிலங்களடியில் கணக்கற்ற கனிகளின் எதிர்காலம் தேக்கியிருக்கும் ஒற்றை விதை வாழ்வின் அர்த்தம் வேண்டும் வார்த்தை யாகம் கவிஞனின் இருப்பின் சாட்சி அனைத்துமளித்த அகிலத்துக்கு அவனது நினைவுப் பரிசு ஒரு வாழ்க்கையில் ஓராயிரம் வாழ்வை வாழத் துடிக்குமவன் பேராவலின் நீட்சி. […]
வெற்றியின் நொடிகளை கொண்டாடலாம் தோல்வியின் நொடிகளை தேற்றலாம் முடிவுகள் அறிவிக்கும் முன்புள்ள, மனதை கவ்வி முறுக்கும் நொடிகளை என்ன செய்வது? ஜெயிக்க வைக்க சொல்லி ஜபிப்பதா? ஆசீர்வதிப்பாரோ , மாட்டாரோ என்ற நிழல் தடுக்கி இடறுகையில் – கண்களை இடுக்கி வேகம் கூட்டி ஜபித்தாலும் மனக்கரைசல் திப்பிகளாய் தங்குவது நிற்பதில்லை சரித்திர நாயகர்களின் சாதனைகளின் நினைவுகளை துணைக்கு அழைத்தாலும் இறுகி விடுகிற நொடிகளில் ,உள்இறங்காமல் ஒழுகி ஓடி நழுவுகிறது நம்பிக்கைகள்.. மண்டை ஓட்டை அடைகாத்து என்னவாக போகிறது […]
இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் டர்னிப் இலைகள் கருகிப் போயிருந்தன ஜன்னல் எரிந்து கொண்டிருந்தது. அறையைப் புகை நிறைத்தது. ரத்தச் சிவப்பாயிருந்த ஒரு ரோஜாவின் இதழைப் பிய்த்துச் சாப்பிட்டேன் புகைபோக்கியில் புகைக்குப்பதில் ரத்தம் வந்து கொண்டிருந்தது. ஸ்தாரே மெஸ்தோ’வின் தெருக்களில் ஒரு கசாப்புக்காரனிடம் இரந்து பெற்ற ஒரு ராத்தல் மாட்டிறைச்சி மெல்லக் காய்ந்து ஈக்கள் மொய்த்துக்கிடந்தது. எழுதுவது என்பதே ‘இயற்கையான வகையில் வயோதிகத்தை அடைவதாகும்’ என்று கஃப்கா என் காதுகளில் ஓதிக்கொண்டே எழுதியவற்றை தானே […]