படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_37.html நண்பர்களே, அக்டோபர் மாத பேசாமொழி இணைய இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யா பற்றிய யமுனாவின் கட்டுரை, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவில் பி.கே. நாயர் பேசியதன் தமிழ் வடிவம், இயக்குனர் புவனாவின் நேர்காணல், கோர்ட் திரைப்பட இயக்குனரின் முக்கியமான நேர்காணல், தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்ட 15 சிறந்த திரைப்படங்களின் பட்டியல் என இந்த இதழும் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பகிரவும். இந்த இதழில்: ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் […]
பாராட்டாகத்தான் உனைப் பட்டாம்பூச்சி என்றேன். தாவும் குணமென்று சொன்னதாய் நீ கோபம் கொண்டிருக்கிறாய். ஒருகால் பெயரை மாற்றி வண்ணத்துப் பூச்சியென்று உனைச் சொல்லியிருந்தால் உன் கோபம் சிவப்பு நிறம் கொண்டிருக்காது ஓவியம் தரித்துக்கொண்ட உயிர் நீ என சந்தோஷமடைந்திருக்கலாம். ஆனால் நீ ஒன்றும் அதைப்போல பூச்சி அல்ல. ஒரு பறவை நீ முட்டை புழு என அதன் பரிணாமம் போலன்றி நீ ஜனித்ததிலிருந்தே வண்ணங்கள் கொண்டிருக்கிறாய். இலை செடி மலர்கள் எனத் தாவரங்களைச் சுற்றியே வாழ்க்கை சுழல்கிறது […]
இதுநாள் வரைக்கும் இத்தனை சீரியஸா நீ எதையும் டிஸ்கஸ் பண்ணினதில்லையே? என்னாச்சு உனக்கு? என்றான் கண்ணன். கூடவே ஏதேது, போகிற போக்கைப் பார்த்தா நீ என்னையே கூடத் தப்பா நினைக்க ஆரம்பிச்சிடுவ போலிருக்கே…என்றான். அதற்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை. பதில் எதுவும் சொல்லாத ஒப்புதலா இது? அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் இவனும் யோசிக்க ஆரம்பித்தான். மனைவி என்ற வித்தியாசமில்லாமல் எல்லாவற்றையும் அவளிடம், ஆண் சார்ந்த, பெண் சார்ந்த என்று கூடப் பார்க்காமல் அவ்வப்போது விவாதித்தது தவறோ […]
திருமாலின் பெருமையை யாராலும் அளவிட்டுக் கூற இயலாது. அந்தப் பெருமை இப்படித்தான் என்று அறுதியிட்டும் சொல்ல முடியாது. மேலும் அவருக்கு உவமை கூற உலகில் எதுவுமே இல்லை. அதனால் நம்மாழ்வார் அவரை “உயர்வற உயர்நலம் உடையவன்” என்று அருளிச்செய்கிறார். அதாவது அவருடைய உயர்வின் முன்னால் மற்ற உயர்வுகள் எல்லாம் அற்றுப்போகும் அளவுக்கு அளவிட முடியாத பெருமை கொண்டவர் அவர். உவமையே காட்ட இயலாப் பெருமை கொண்டவர் அவர். இந்த உலகின் உள்ள எல்லா ஆத்மாக்களையும் […]
நவ ரத்தினங்கள் போல் ஒன்பது கட்டுரைகளைக் கொண்ட செறிவான நூல் டாக்டர் எச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் என்ற நூல். பயணமும் இலக்கியமும் ஒன்றோடு ஒன்று பிணைந்த ஒன்று…பயணமே அனுபவமாய் கலைச் சித்திரமாய் இதயத்தில் ஆழமாய் பதிந்து ரத்த நாளங்களில் பிரவாகமெடுத்து அழகான இலக்கியமாய் படைக்கப் படுகிறது.. எழுத்துக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட ‘யாத்ரி’ நாகார்ஜூன் எனப்படும் எழுத்துலகப் போராளியின் இலக்கியப் படைப்புக்கள் பற்றிய கட்டுரை நாகார்ஜூன் என்ற ஆளுமையைப் பற்றி […]
சிறு பிள்ளைகளுக்கு கைகளிலும் கால்களிலும் சிரங்குகள் தோன்றி அதிகம் சொரிந்துகொண்டிருப்பார்கள். முன்பெல்லாம் கிராமப்புறங்களில் இது அதிகமாகக் காணப்பட்டது. சுகாதரமற்றச் சூழல் முக்கிய காரணமாகவும் கருதப்பட்டது. குறிப்பாக பள்ளி விடுதிகளில் தங்கிப் படிக்கும் பிள்ளைகளிடையே இதை அதிகம் காணலாம். அவர்கள் விடுமுறையில் வீடு திரும்பியதும் வீட்டிலுள்ளவர்களுக்கும் இது பரவுவது வழக்கம். இதை Scabies என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழில் சொறி சிரங்கு என்றாலே போதுமானது. இது சார்காப்டீஸ் ஸ்கேபி ( Sarcoptes Scabiei ) என்ற […]
இடம்: சென்னை பயிற்சிக் கட்டணம் : ரூபாய் 3500 முன்பதிவுக்கு : 98406-98236 தமிழ் ஸ்டுடியோவின், படச்சுருள் மாத இதழுக்கு நிதி திரட்டும் விதமாக ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் மற்றும் ஒளிப்பதிவாளர் ஞானம் சுப்ரமணியன் இருவரும் இணைந்து இரண்டு நாள் திரைப்பட ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை நடத்திக்கொடுக்கவுள்ளனர். பயிற்சிப் பட்டறையின் முதல் நாளில், ஒளிப்பதிவு சார்ந்த விஷயங்கள் யாவும் கோட்பாட்டு ரீதியில் விளக்கப்பட்டு, இரண்டாம் நாள்., திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் கேமராவைக் கொண்டு செய்முறைப் பயிற்சியாக, […]
ஸ்ரீராம் செக்ஸ் எஜுகேஷன் தான் மையம். அதைச் சுற்றி வாத்தியார்கள் மாணவர்களிடம் காட்ட வேண்டிய கண்டிப்பின் அளவீடு குறித்து பேசியிருக்கிறார்கள். ‘ஏன்டா கிஸ் பண்ணின?’ என்று கேட்கிறாள் டீச்சரான ராதிகா. ‘… உங்களையும் கிஸ் பண்ணுவேன் மிஸ்’ என்கிறான் பையன். ராதிகா கோபத்தில் அறைந்துவிடுகிறாள். பையன் மயங்கி சரிகிறான். இங்கிருந்து பதற்றம் தொற்றிக்கொள்கிறது. பையனின் மாமன் ஒரு பொதுவுடைமைவாதி. கத்தி ஆர்பாட்டம் செய்கிறான். எல்லோரையும் கேள்வி கேட்கிறான். ராதிகா தலைமை ஆசிரியரின் வற்புறுத்தலுக்கு பயந்து ஊரைவிட்டு ஓடுகிறாள். […]