என்சிபிஎச் வெளியீடு மெய் வருத்தக் கூலி தரும் : ஸ்டாலின் குணசேகரன் கட்டுரைகள்

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் ஸ்டாலின் குணசேகரன். ஈரோடு புத்தகக் கண்காட்சியின் முக்கியத் தூண். பொதுவுடமைகட்சி சார்ந்து இயங்குகிற முக்கிய நிர்வாகி. இவரின் பேச்சுக்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை ஈர்க்கும். அவை பெரும்பாலும் காற்றில் கரைந்த பேரோசையாக கரைந்து விடும். ஆனால் அவற்றில் சிலவற்றை புத்தகமாக்கும் பதிவில் இந்நூல் வெளிவந்திருக்கிறது..கோவை வானொலி , சென்னை வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட 55 உரைகள் ( 5 நிமிட உரைகள் ) சிறுகட்டுரைகளாக்கப்பட்டிருக்கின்றன. அவை வலியுறுத்தும் விசயங்களாக சமூக அறம் சார்ந்தவற்றை […]

2014 அக்டோபர் 19 செவ்வாய்க் கோளைச் சுற்றி விரையும் முதல் அபூர்வ வால்மீன்

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Oq8lEKAY_fI http://mars.nasa.gov/comets/sidingspring/ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TWm7NKmH2nQ&list=PLdSLqn6BE3c-DutO_TRs_98xDn7MuO8Zb   வால்மீனின் தலை வெளியேற்றும் வால் தூசி முகிலில் செவ்வாய்க் கோள் குளித்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  இந்த அபூர்வ, அற்புத விண்வெளிக் காட்சி நிகழ்வது மில்லியனில் ஒரு நேர்ச்சி !  இக்காட்சியை தற்போது சுற்றும் விண்ணுளவிகள், நாசாவின் மேவன் [MAVEN] இந்தியாவின் மங்கல்யான் படமெடுத்துப் பதிவு செய்யும்.  அத்துடன் விநாடிக்கு 30 மைல் [50 கி.மீ.] வேகத்தில் வெளியேறும் புல்லட் […]

பல்துறை ஆற்றல் மிக்க செயற்பாட்டாளர் காவலூர் ராஜதுரை

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

பல்துறை  ஆற்றல்  மிக்க  செயற்பாட்டாளர்   காவலூர்  ராஜதுரை       அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  அனுதாபச்செய்தி கலை ,  இலக்கியம்,  வானொலி,  தொலைக்காட்சி,  சினிமா,  நாடகம், மற்றும்  விளம்பரம்  முதலான   துறைகளில்  தனது  ஆற்றல்களை வெளிப்படுத்தி    நீண்ட காலமாக  இயங்கிய  காவலூர்  ராஜதுரையின் மறைவு   ஈடுசெய்யப்பட வேண்டிய  இழப்பு  என்று  அவுஸ்திரேலியா தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  சார்பில்  அதன்  நடப்பாண்டு தலைவர்  டொக்டர்  நடேசன்  வெளியிட்டுள்ள  அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியில்   மேலும்  தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமது […]

சங்க இலக்கியத்தில் பயிர்ப் பாதுகாப்பு

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்​கோட்​டை-1. Mail: Malar.sethu@gmail.com சங்க காலத்தில் உழ​வே முதன்​மையான ​தொழிலாக விளங்கியது. வளமார்ந்த மருதநில மக்கள் ஏ​னைய மக்க​ளைவிட நாகரிகத்தில் ​மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். உழவர் உழத்தியர்,    க​டையர், க​டைசியர் என்னும் ​சொற்கள் உழவர்கள் குறித்து ஆளப்படும் ​சொற்களாகும். க​டையர் என்பார் வயல்களில் ​வே​லை​செய்யும் ​தொழிலாளர்கள் என்று கருதலாம், இவர்கள் நிலமற்ற எளிய மக்களாக இருத்தல் ​வேண்டும். இவர்களின் வாழ்க்​கை​யை ​பெரும்பாணாற்றுப்ப​டை(206-246), மது​ரைக்காஞ்சி(246-270), ம​லைபடுகடாம்(10-105) முதலிய […]

புதிய திசையில் ஒரு பயணம் – திலகனின் புலனுதிர் காலம் –

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

பாவண்ணன் எல்லாக் காலங்களிலும் கற்பனையும் அபூர்வமான சொற்கட்டும் அழுத்தமான எளிய வரிகளும் கவிதையை வசீகரமாக்கும் சக்தியுள்ள அழகுகளாகவே உள்ளன. புதிய கவிஞராக அடியெடுத்துவைத்திருக்கும் திலகனின் மொழி அந்த அழகை வசப்படுத்தும் முயற்சியில் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருப்பதற்குச் சாட்சியாக அவருடைய தொகுதி அமைந்திருக்கிறது. திலகனின் கவிதைப்பயணம் முயல்களை வேட்டையாடி வெற்றிகொள்ள நினைக்கிற பயணமல்ல. யானையை வசப்படுத்த நினைக்கிற பயணம். அந்த ஆர்வத்தையும் வேகத்தையும் அவருடைய கவிதைகள் புலப்படுத்துகின்றன. கற்பனைக்கு ஈடுகொடுப்பதுபோல அவருடைய சொற்கள் நீண்டும் மடங்கியும் புன்னகைத்தும் சீற்றமுற்றும் இரட்டைமாட்டுவண்டிபோல […]

உன் மைத்துனன் பேர்பாட

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

வளவ. துரையன் உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய் கந்தங் கமழும் குழலி கடைதிறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். இது ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரம். இதற்குமுன் பதினேழாவது பாசுரத்தில் நந்தகோபர், யசோதை, பலராமன் ஆகியோரை ஆயர்பாடிப் பெண்கள் எழுப்பினார்கள். கண்ணனை முன்னிட்டு அவர்களை […]

பட்டுப் போன வேர் !

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி உன் எண்ணங்களால் ஏன் தீண்டுகிறாய் நீ யாரோ வென ஆன பிறகும். தூயதான அன்பை திருப்பினாய் வேண்டாம் போவென அழிச்சாட்டியமாக. கண்ணீரும் தவிப்பும் கூக்குரலும் அழுகையும் உன் ஜீவனைத் தீண்ட வில்லை ! அதன் மெய்த்தன்மையை சோதித்து வலிகளால் பதியவிட்டாய் நாட்களை. உனக்கான தோர் இடமென்று கிழிசலை முன் எறிந்தாய் அது எனக்கான தாகக் கொள்வ தெப்படி ? மீண்டும் வந்து நில் நட்பினால் சிருங்காரிப்பேன் என்பாயோ – அது காதலில் கரைந்த பிறகு. […]

ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-9

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

வையவன் காட்சி-9 இடம்: ஒரு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம். பாத்திரங்கள்: ஆனந்தராவ், ஆனந்தலட்சுமி, ரங்கையர். (சூழ்நிலை: ஆட்டோவிலிருந்து ரங்கையர், ஆனந்தராவ், ஆனந்தலட்சுமி மூவரும் இறங்குகின்றனர். ஆட்டோ டிரைவர் ஆனந்தலட்சுமியின் பெட்டி படுக்கையை எடுத்து கீழே வைக்கிறார்) ஆனந்தராவ்: ரங்கா அந்த போர்ட்டரை கூப்பிடு. ரங்கையர்: போர்ட்டர் எதுக்குண்ணா? பெட்டியை நான் எடுத்துக்கறேன். படுக்கை சின்னதாத்தானே இருக்கு. மன்னி எடுத்துக்கறா! ஆனந்தராவ்: இதிலே வந்து நீ சிக்கனம் பார்ப்பே! (கை தட்டிக் கூப்பிடுகிறார்) போர்ட்டர்… போர்ட்டர்… இங்கே வா! […]

தந்தையானவள். அத்தியாயம் 5

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

பட்டுவாடா செய்யப்படவேண்டிய கருவூல பில்களை சரிபார்த்துவிட்டு ராஜேஸ்வரி கணினியில் பதிவு செய்யத் தொடங்கினாள். ராஜேஸ்வரியின் பணியின் நேர்த்தி குறித்து மேலதிகாரிகள் அவளை பாராட்டாமல் இருந்ததில்லை. கற்றுக் கொள்ளும் தொழிலை கவனமாகவும், திறமையுடன் கற்றுக் கொண்டால் பெண்கள் அவர்களது பால்நிலை காரணமாக இழிபடத்தேவையில்லை என்றுதான் அவளுடைய சீனியர் கிருஷ்ணமூர்த்திசார் சொல்லி கொடுத்தது. வார்த்தையை வளர்ப்பது அவளிடம் அறவே இல்லை என்பதால் அனாவசிய பேச்சிற்கு இடமில்லை. கடைநிலை ஊழியர்களிலிருந்து உயரதிகாரிகள் வரை அவள் வெறும் ராஜேஸ்வரி இல்லை. ராஜேஸ்வரி மேடம். […]

வாழ்க்கை ஒரு வானவில் 25.

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

ஜோதிர்லதா கிரிஜா சேதுரத்தினம் வழக்கம் போல் அலாரம் இல்லாமலே ஐந்தரை மணிக்கு எழுந்துகொண்டு காலைக்கடன்களை முடித்த பின் காப்பி போட்டான். ரமணி கண்விழித்த போது ஆறரை மணி ஆகிவிட்டிருந்தது. மேசையருகே அமர்ந்து காப்பி குடித்த போது, “நீங்களே தினமும் காப்பி போட்டுப்பீஙளா?” என்று ரமணி சேதுரத்தினத்தை விசாரித்தான். “ஆமா. காலை ப்ரேக்ஃபாஸ்டும் நானே பண்ணிடுவேன். இட்டிலி அல்லது தோசை. சில சமயம் பம்பாய் ரவை அல்லது கோதுமை ரவை உப்புமா. சின்ன வயசுலேர்ந்தே சமையல் பண்ணிப் பழக்கம். […]