தாயை இழந்த சோகத்தை, பகையாக நெஞ்சில் ஏற்றி வளரும் இளம்பெண்ணின் கதையை சிரிப்புக் கார்னிவலாக தந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். காவல் அதிகாரி ரவிகுமாரின் ஒரே மகள் காதம்பரி. தந்தைக்கு ரவுடி கிள்ளிவளவனோடு ஏற்பட்ட பகையால் தன் அம்மாவை இழக்கிறாள் காதம்பரி. அந்த அதிர்ச்சியில் அவளது செவிகள் உணர்வு இழக்கின்றன. அழகின் மொத்த உருவமாக வளரும் அவள் மேல் காதல் கொள்ளும் பாண்டிக்கு அவள் அவன் காதலை ஏற்க வைக்கும் ஒரே நிபந்தனை, கிள்ளிவளவனை கொல்ல […]
நாம் எழுப்பிய சுவர்களுக்குள் பத்திரமாயிருக்கிறோம் மூடிய கதவுகளுக்குள் அந்தரங்கத்தை உணர்கிறோம் புனையும் ஆடையில் ரசனையைக் காட்டுகிறோம் பயணிக்கும் வாகனத்தில் அந்தஸ்தத்தை வெளிப்படுத்துகிறோம் பயணங்களை முடிவு செய்வதில் அதிகாரத்தை சுமையை மறுதலிப்பதில் சுதந்திரத்தை சுமையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பழக்கப்பட்ட குதிரைக்கும் போர் முனையில் ஆயுதபாணிக்கும் இல்லை சத்யானந்தன்
பார்க்காதே என்கிறாள் கண்டிப்பான குரலில் அம்மா. கண் இருண்டு போய்விடும் எனப் பயம் சொடுக்கும் அதிர்வில் கண்மூடிச் சொல்கிறாள் அக்கா. மழைகூட இரண்டாம் பட்சமாய்ப் போகச் செய்யும் அந்த மின்சாரப் பாம்பை எப்படித்தான் பார்க்காமல் இருக்கமுடியும்? இடியின் அபஸ்வர பய லயம் சேர்ந்த ஒளித்தெறிப்பு மனதிற்குள் நிரப்பும் அபூர்வ சங்கீதத்திற்காகவே மழைப்பொழுதுகள் மங்கலாக இருக்கையில் எப்படித் தவிர்ப்பது மின்னல் பார்ப்பதை? தகதகக்கும் தங்க வாள் வானைத் துண்டாக்கிப் பிரபஞ்ச ரகஸ்யங்களைக் […]
வரும் 30 /10/2015 மாலை. 5.30 மணி அளவில் ரஷ்ய கலாச்சார மையத்தில் லா.ச.ரா-வின் நூற்றாண்டு விழா மற்றும் புத்தக வெளியீடு. அனைவரும் வருக!