உலகமே இருண்டு போய் ஏதோ அதள் பாதாளத்தினுள் அனைவரும் தத்தளிப்பது போல ஒரு படபடப்பு. நாட்கள் சில உருண்டோடியது புரிந்தது. மீண்டு எழ வேண்டியது அவசியம்தான். அடித்துப் போட்டது போன்று உடலும், மனமும் ரணமாகிக் கிடந்தது. வெகு நேரம் கழித்துதான் இரவு தூக்கம் வந்தது…. அன்றாட வழக்கம் போலவே அன்றும் விடியலிலேயே விழித்துக் கொண்டவள், கண்ணைத் திறக்காமல் அப்படியே எழுந்து படுக்கையிலேயே அமர்ந்து கொண்டு தன் தாயாய் இருந்து அன்பு சொரிந்த அந்த அழகு அக்கா முகத்தை […]
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிகள் கிடைக்கும் என்பதில்லை வரும் தோல்விகளைக் கண்டால் துவண்டுவிடக் கூடாது என் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிகளும் தோல்விகளும் எதிர் கொண்டிருக்கின்றேன். வெற்றி கிடைத்த பொழுது தன்னிலை மறந்ததில்லை. எடுத்துவைக்கும் அடிகளை எச்சரிக்கையுடன் கவனச் சிதறல்களின்றி எடுத்துவைப்பேன். தவறுகளும் செய்வதுண்டு. அதனைப் படிப்பினையாக எடுத்துக் கொண்டு என்னைத் திருத்திக் கொள்வேன். இப்பகுதியில் நான் எழுதப் போகும் விஷயங்கள் இப்பொழுதே என் மனத்தை வருத்துகின்றது. ஆனால் என் […]
செகந்திராபாத் நகரத்தைப் பற்றி வேலை நிமித்தமாய் அங்கு செல்வதற்கு முன் அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலமே அறிந்திருந்தேன்.அவரின் ஏராளமான சிறுகதைகள், 18வது அட்சக் கோடு நாவல்,மாபூமி போன்ற திரைப்படங்கள்,தெலுங்கானா போராட்டக் கதைகள் ஆகியவையே செகந்திராபாத் பற்றின விபரங்களை மனதில் விதைத்திருந்தன. வெளிமாநில தமிழ்ச்சஙகளின் செயல்பாடுகளை ஓரளவு இலக்கிய இதழ்களின் செய்திகள் மூலம் அறிந்திருந்தேன். அதற்கு முன் நாலைந்து ஆண்டுகளாக எனது சிறுகதைகள், கவிதைகள் கணையாழி, தீபம், தாமரை இலக்கிய இதழ்களில் வெளிவந்திருந்தன. தமிழ் புத்தகக்கடைகள், தமிழ் அமைப்புகள் , […]
மானுடம் போற்றுதும் மானுடம் போற்றுதும் இருக்கின்றார் இவர்களெல்லாம் இவ்வுலகில் என்பதினால் மானுடம் போற்றுதும் எம் மானுடம் போற்றுதும். இன்னாரைப் போல நீயும் இதெல்லாம் செய்ய வேண்டும் இப்படித்தான் வாழ வேண்டும் என்றெல்லாம் அடையாளம் காட்ட நம்முடன் யார் இருக்கிறார்கள்:? அரசியலாகட்டும் சமூக வாழ்வியலாகட்டும் ஆன்மிகமாகட்டும்\ ஊடகங்களாகட்டும் கல்வி துறையாகட்டும் எங்கேயும் எவருமி;ல்லாமல் இருக்கின்ற வெற்றிடம் நம்மைப் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. சரியானவர்களுக்கு/தகுதியானவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதை விட ஆபத்தானது தவறானவர்களுக்கு/ தகுதியில்லாதவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது என் […]