Nandu 2 அரண்மனை அழைக்குது

This entry is part 45 of 45 in the series 2 அக்டோபர் 2011

சில விஷயங்கள் ராத்திரியில் ரொம்ப அழகாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன்களைச் சொல்கிறேன். சும்மா கிடக்கிறவனையும், கிடக்கிறவளையும் சங்கீதம் இசைக்கச் சொல்லியோ கவிதை எழுத வைத்தோ உசுப்பேற்றுகிற சமாசாரங்கள் காதலும் இந்த மாதிரியான அழகும் அமைதியுமான பழைய கட்டிடங்களும். இப்போது வெள்ளிக்கிழமை ராத்திரி பத்து மணி. இது எடின்பரோ வேவர்லி ஜங்ஷன். கூட்டம் குறைவாக, விஸ்தாரமான ஏழெட்டுப் பிளாட்பாரங்களாக விரிந்து நீண்டிருக்கும் இங்கே லண்டன் போகிற ரயிலை எதிர்பார்த்து மர பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறேன். எனக்கு இடது பக்கமாக நண்பர் […]

உண்மையான நாடகம் இரகசிய விளையாட்டுகளில்தான்

This entry is part 44 of 45 in the series 2 அக்டோபர் 2011

டி ஜே எஸ் ஜார்ஜ் (இந்தியன் எக்ஸ்பிரஸ்) கடந்த வாரம் காங்கிரஸ் முகாம் பீதியில் இருந்தது. திகிலடைந்த காங்கிரஸ் தலைவர்கள் சிறகுகள் பிடுங்கப்பட்டு நிர்வாணமான கோழிகள் போல அங்கும் இங்குமாக பதறியடித்துகொண்டிருந்தார்கள். முன்னாள் அமைச்சர் ராஜாவை சிறையில் தள்ளிய அதே 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் அரசின முக்கிய தூண்களில் ஒன்றான சிதம்பரத்தை நேரடியாகவும் வெளிப்படையாகவும் அதிகாரப்பூர்வமாகவும் சம்பந்தப்படுத்தப்பட்டதுதான் வெளிப்படையான காரணம். இத்தனைக்கும், சிதம்பரம் காங்கிரஸ் வட்டாரங்களில் ஒரு பிரபலமான தலைவர் அல்ல. தன்னுடைய சொந்த நலன், […]

பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்

This entry is part 43 of 45 in the series 2 அக்டோபர் 2011

மு. இராமனாதன்   [2010ஆம் ஆண்டில் இலக்கியச் சிந்தனை அமைப்பின் சார்பாக மாதந்தோறும் வாசக-விமர்சகர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற பன்னிரண்டு சிறுகதைகளை திரு. மு இராமனாதன் மதிப்பீடு செய்து, 2010ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுத்ததது- சதுரங்கம், எழுதியவர்: ஆனந்த் ராகவ். பன்னிரண்டு சிறுகதைகளின் தொகை நூல் ‘சதுரங்கம்‘ எனும் தலைப்பில் 15.4.2011 அன்று நடந்த இலக்கியச் சிந்தனையின் 41ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பட்டது. நூலில் இடம் பெற்றிருக்கும் மு. இராமனாதனின் மதிப்புரை கீழே] பேராசிரியர் கா. சிவத்தம்பி […]

Request to preserve the Tamil cultural artifacts

This entry is part 42 of 45 in the series 2 அக்டோபர் 2011

vanakkam. Thousands of art forms this earth gave birth to. And if one says performing arts and folk arts are foremost among them , it certainly is not an exaggeration .one can even say  that they are the greatest gifts mother earth gave its sons. Though in the modern era , performing arts and folk […]

முன்னணியின் பின்னணிகள் – 7 சமர்செட் மாம்

This entry is part 41 of 45 in the series 2 அக்டோபர் 2011

தமிழில் எஸ். சங்கரநாராயணன் >>> ஆச்சர்யமான விஷயம். அல்ராய் கியருடன் நான் விருந்து சாப்பிட்ட ரெண்டு மூணு நாளில் எனக்கு எட்வர்ட் திரிஃபீல்டின் விதவையிடமிருந்து ஒரு கடிதம் –   பிரியமான நண்பரே, கடந்த வாரம் ராயுடன் நீங்கள் எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். அவரைப் பற்றி மனப்பூர்வமாய் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதாய் அறிய மகிழ்ச்சி. அடிக்கடி அவர் உங்களைப் பற்றி என்னிடம் பேசுவார். உங்கள் எழுத்துத் திறமையை அவர் பெரிதும் வியந்து போற்றிவந்தார். […]

பஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி

This entry is part 40 of 45 in the series 2 அக்டோபர் 2011

விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி   கௌட ராஜ்ஜியத்தில் புண்டரவர்த்தனம் என்ற நகரம் ஒன்றிருந்தது. அங்கே இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவன் தச்சன்; இன்னொருவன் நெசவாளி. இருவரும் தத்தம் வேலையில் நிபுணர்கள். அதனால் அவர்கள் தொழிலிலே சம்பாதித்த பணத்திற்குக் கணக்கு வழக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் மென்மையான வேலைப்பாடுகளுள்ள, விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தினர். பூ, தாம்பூலம் அணிந்து அலங்கரித்துக் கொண்டனர். கற்பூரம், அத்தர், கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்களை உபயோகித்தனர். பகலில் ஒன்பது மணி நேரம் […]

வானம் வசப்படும்.

This entry is part 38 of 45 in the series 2 அக்டோபர் 2011

மண் பயனுறவேண்டும் வானகம் இங்கு தென்படவேண்டும் என்பது மகா கவி பாரதியின் கவிதை வரிகள். எப்போது வானகம் மண்ணில் தென்படும்? யாருக்கு அது தென்படும்? என்பது போன்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு சிந்திக்க முயன்றால் விடை கிடைப்பது திண்ணம். பாரதியின் மேர்க் கூறிய கவிதை வரிகள் அகில உலகிர்க்குமான சிந்தனையாகும். ிதே கூற்றினை சங்க கவிஞர் கணியன் பூங்குன்றனாரும் ஓர் உலக நோக்கில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என பாடுதலை பார்க்கிறோம். இன்று ஓர் உலக […]

மூன்றான வாழ்வு (சீவனைச் சிவமாக்கும் கெவனமணி மாலிகாவின் விளக்கம்)

This entry is part 37 of 45 in the series 2 அக்டோபர் 2011

உயிர்கள் பிறக்கின்றன. இருக்கின்றன, இறக்கின்றன. பிறந்த பின்பு உயிர்கள் இருக்கின்றன. இருந்தபின்பு இறக்கின்றன. இறந்தபின்பு உயிர்கள் என்னாகின்றன? மீண்டும் பிறக்கின்றனவா? முன் பிறவியைவிட உயர்வான பிறவியில் பிறக்கின்றனவா… அல்லது முன்பிறவியை விட தாழ்வான பிறவியில் பிறக்கின்றனவா…..அதே பிறப்பில் மீண்டும் பிறக்கின்றனவா… இப்படிப் பதில் தெரியாத, அறியமுடியாத கேள்விகள் பலப்பல. பிறவியே இல்லாத நிலை வந்துவிட்டால் இருப்பே இல்லாத நிலை, இறப்பே இல்லாத நிலை வந்துவிடும். இறப்பே இல்லாத நிலை வந்துவிட்டால் மீண்டும் பிறக்கவே முடியாது. பிறவியே இல்லாத […]

பயனுள்ள பொருள்

This entry is part 36 of 45 in the series 2 அக்டோபர் 2011

மத்திய தரைக் கடலில் நீல வண்ணத்து நீரைக் கிழித்துக் கொண்டு வந்த அந்தக் கப்பல் அலெக்ஸாண்டிரியா துறை முகத்தை வந்தடைந்தது. கப்பலில் ஒரு வெள்ளைக்காரர் வாயில் வந்த படி ஏதோ திட்டிக்கொண்டே வந்தார். அவர் பேச்சில் அடிக்கடி அரை நிர்வாணப் பக்கிரி என்ற வார்த்தை அடிப்பட்டுக கொண்டிருந்தது. அப்பப்ப! அவரது தொனியின் தோரணையில் தான் எவ்வளவு வெறுப்பு மண்டிக் கிடந்தது. யாரைப் பற்றி அவர் அப்படிப் பேசுகிறார்? அதே கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த இந்திய நாட்டுப் […]

மூன்று கவிதைகள் – பத்மநாபபுரம் அரவிந்தன்

This entry is part 35 of 45 in the series 2 அக்டோபர் 2011

காத்திருப்பு குற்றங்களுக் கெதிராக உயர்த்தப்படும் சாட்டைகள் விளாசப் படாமலேயே மெதுவாய்த் தொய்கின்றன.. இடக்கையால் பெருந்தொகை வாங்கிக்கொண்டு சட்டங்கள் தன்னிருப்பை சுருக்கவும் விரிக்கவும் கரன்சிப் பகிர்வுகள் தலையசைத்து நடக்கிறது .. நியாயங்களின் பாதைகளில் முள்வேலிப் போட்டு அராஜகப் பெருஞ்சாலை விரிகிறது … ஏதோ நினைவுகளில் அழுத்தப் படுகிறது வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தான்கள் உள்ளேப் போவதும், வெளியே வருவதுமாய் நகர்கிறது ஐந்தாண்டு… காட்டப்படும் சொத்துக் கணக்குகள் யாருக்குமே குடவோக் குறையவோ இல்லை உட்பூசல்களும், வெளிப்பூசல்களுமாய் உதிர்ந்து கொண்டிருகிறது நாட்கள் […]