நினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை.

This entry is part 24 of 45 in the series 2 அக்டோபர் 2011

ஒவ்வொரு முறையும் நேரிலோ., தொலைபேசி மூலமோ ஒருவரை பேட்டி அல்லது நேர்காணல் எடுக்க பலமுறை முயலவேண்டி இருக்கும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என கடைசியில் வாகை சூடலாம். சில முடியாமலும் போகும்.  ”என் மனைவி” என்ற தலைப்பில் ஒரு மாத இதழுக்கான கட்டுரைக்காக ஒரு நடிகரை தொடர்பு கொண்டேன். அவருடைய மனைவிக்கு பத்ரிக்கையில் வருவது பற்றிய ஆர்வமில்லை என்றார் அவர்.! . இன்னொரு பிரபலத்தை தொடர்பு கொண்டால் அவர் தன் மனைவியைப் பற்றிக் கூறியதை விட அவரின் மனைவி அவரைப்பற்றிக் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 50 பாகம் -1)

This entry is part 23 of 45 in the series 2 அக்டோபர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தோன்றியது முதல் இங்கிருக்கிறேன் முடிவு வரை நானி ருப்பேன் முடிவில்லை எனது வசிப்புக்கு ! படைப்பின் போது இறைவன் தன்னிட மிருந்து பிரித்து வைத்து ஒரு பகுதி எரிப்புத் தீப்பந்தம் இந்த மனித ஆத்மா ! கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ காதல் என்பது என்ன ? இதயத்தை ஊட்டும் அமுதமாய் காதலர் கண்களின் வழியே ஆன்மா வின் மதுவில் காதல் […]

முற்றும்

This entry is part 22 of 45 in the series 2 அக்டோபர் 2011

முன் பெற்ற காலமொன்றில் தன் நிலையினை  அளவிடுவதற்கு தூற்றும் நினைவினை கொண்டு எடுத்து ஆளும் நிறைவு உண்டு . முதல் அன்பின் வீச்சு பார்வையை கூச செய்த தன்மை இனி வருவதற்கில்லை இயங்கலாமல் போன காலமொன்றில் சேகரித்து வைக்கிறேன் முதலின் அனைத்தும் . இங்கு தான் முதன் முதலாக நியாயப்படுத்தி கொள்கிறது பல நிலைகளுடைய தன் சுய விருப்பங்கள் . நீள்கின்ற அவைகளை சுய தொன்மை சுருக்கி விட்டது பல மாலை பொழுதின் கண்ணீரோடு . இன்றளவும் நினைவின் வடுவும் உறுதி […]

மைலாஞ்சி

This entry is part 21 of 45 in the series 2 அக்டோபர் 2011

பேராசிரியர் நட.சிவகுமார் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதி தமிழ்வாசகர்களிடையே மிகுந்த கவனிப்பை பெற்ற மைலாஞ்சி(மருதோன்றி/மருதாணி) தற்போது நியூசெஞ்சுரி புத்தகநிறுவன மறுபதிப்பு வெளியீடாக வெளிவந்துள்ளது. நூலின் பதிப்புரையில் இருந்து சில குறிப்புகள்… தமிழ்சமுதாயத்தைதைசிந்திக்க வைக்கக் கூடிய ஆற்றல் தமிழ் கவிதைகளுக்குண்டு.அவ்வகையில்  கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் கவிதைகளுக்கு தனி இடமும் உண்டு…… மனிதன் ஓர் அதிசயப் பொருள். அதி சிறுகீறல் அல்லது ஒரு வடுவோ விழுந்திடாதபடிக்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்லும்தன்மை அல்லது உரிமை ஒவ்வொரு படைப்பாளனுக்கும் உண்டெனநிரூபித்துக் காட்டுகிரார் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்.ஏழைமக்களின் […]

இலக்கியங்களும் பழமொழிகளும்

This entry is part 20 of 45 in the series 2 அக்டோபர் 2011

நம்முன்னோர்கள் பன்னெடுங் காலமாகத் தங்களின் வாழ்க்கையில் கண்டு, கேட்டு, உணர்ந்து, அனுபவித்தவற்றை எல்லாம் ஒருங்குகூட்டி அவற்றைப் பின்வரும் தலைமுறையினருக்குப் புகட்ட வேண்டி பழமொழிகளாக ஆக்கி வைத்தனர். இப்பழமொழிகள் அனைத்தும் வாழ்வியல் உண்மைகளாகத் திகழ்கின்றன. இவை மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் பேரிலக்கியங்களாகத் திகழ்கின்றன. இதனை, ‘‘கலை நுட்பம் கொண்ட பேரிலக்கியங்களைப் பழமொழிகளின் விரிவாக்கங்களாகக் [provermbs writ large]கருதலாம் என்றும், பழமொழிகள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ளத்துணை செய்யும் கருவிகள் ஆகும்’’ என்பர் அறிஞர் கென்னத் பர்க். ஒரு சமுதாயக் கட்டமைப்பில் சிலவகைச் சூழல்கள் மீண்டும் மீண்டும் தோன்றும் போது மக்கள் அவற்றை அடையாளம்கண்டு அவற்றிற்கு உரிய பெயர் அளித்து அவற்றைக் கையாளுவதற்கான உத்திகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள் என அறிஞர் கென்னத் பர்க் (Kenneth Burke) தமது ‘வாழத்துணை செய்யும் கருவியாக இலக்கியம்’ [Literature as Equipment for Living, p., 944 ] எனும் கட்டுரையில் குறிப்பிடுகின்றார். கென்னத் […]

தங்க ஆஸ்பத்திரி

This entry is part 19 of 45 in the series 2 அக்டோபர் 2011

தண்ணி பிடிக்கிற இடத்தில, குளத்தில, காட்டுக்கு போற வழியில எல்லாம் இடத்திலும் கேட்டுப் பார்த்தாள் செல்லம்மாள். ராஜாத்தி மசியவே இல்லை. செல்லம்மாள் மட்டுமல்ல; மஞ்சுளா, அமுதா ரெண்டு பேரும் தனியா தனியா கேட்டுப் பார்த்தார்கள்.. ஒரு பதில் வராது ராஜாத்தியிடம் இருந்து.. வேற வழியே இல்லன்னு செல்லம்மாள், மஞ்சுளா, அமுதா மூணு பேரும் கூட்டு சேர்த்துப் போய் கேட்டகலாம்னு முடிவு பண்ணி சத்திரத்துகிட்ட நின்னார்கள். ராஜாத்தி தனியா ஆத்துல குளிச்சிட்டு வந்துக் கொண்டிருந்தாள். ஈரத்துணியை உடம்பில சுற்றிட்டு […]

கட்டுநாயக்க தாக்குதல் – இரு மாதங்களின் பின்னர்…

This entry is part 18 of 45 in the series 2 அக்டோபர் 2011

‘தம்பி இன்னும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறார். அவரால் கட்டிலிலிருந்து எழ முடியாதுள்ளது. இருக்கும் காணியை அடகுவைத்துத்தான் தம்பிக்குச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். அப்பாவும் தம்பியைக் கவனித்துக் கொள்ளவென கட்டுநாயக்கவுக்கு வந்து அறையொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார். எனது கணவர், கொத்தனார் வேலை செய்து உழைக்கும் நாட்கூலியில்தான் எல்லாவற்றுக்கும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.’ கட்டுநாயக்க தாக்குதலின் போது காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் மங்கள சம்பத் எனப்படுபவரது சகோதரியான சம்பிகா என்பவர்தான் மேற்கண்டவாறு எம்மிடம் தொலைபேசியில் […]

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி

This entry is part 17 of 45 in the series 2 அக்டோபர் 2011

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி அக்டோபர் 2, ஞாயிறு மாலை சரியாக 6.30 மணிக்கு. ஸ்பேசஸ், 1, எலியட்ஸ் பீச் சாலை பெசண்ட் நகர் தொடர்புக்கு: ஞாநி 9444024947 Pareeksha Tamil Theatre group will perform Badal Sircar’s Thedungal( michil) directed by Gnani on October 2, Sunday sharp at 6.30 pm at spaces, 1, Eliots beach road, Besant Nagar. […]

கள்ளன் போலீஸ்

This entry is part 16 of 45 in the series 2 அக்டோபர் 2011

நிலவும் நானும் கள்ளன் போலீஸ் விளையாடினோம் நான் போலீசாக நிலவு மேகத்தில் மறைந்து கொள்ளும் நிலவு போலீசாக நான் வீட்டில் மறைந்து கொள்ளுவேன் இப்படி மாறி மாறி இரவெல்லாம் விளையாட்டு சூரியன் தன்னையும் விளையாட்டில் சேர்க்க சொல்லி சண்டையிட எங்கள் விளையாட்டை கலைத்தோம் மற்றொரு நாளில் விளையாடுகையில் நிலவு மேகத்தில் மறைந்து போக்கு காட்டியது அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை போதும் விளையாட்டு வெளியே வா என அழைக்க நிலவின் ஒளிசத்தம் மட்டும் கேட்டது நிலவு வடித்த கண்ணீர் […]

பிரதியைத் தொலைத்தவன்

This entry is part 15 of 45 in the series 2 அக்டோபர் 2011

———————————————- அந்த எழுத்தாளர் மனமொடிந்து தன்னுடைய சோகக் கதையை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது நடந்தது சுமார் நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன் ஒரு மழை மூட்டமான மாலையில் என்று நினைக்கிறேன்……… “எனக்கு தற்கொலை செஞ்சிக்கலாமான்னு இருக்குது..” “ அய்யய்யோ…ஏன் ஸார் இப்படி நம்பி ஏமாந்து போனீங்க..” “ என்ன செய்யறது? என்னுடைய கெட்ட நேரம்…..” “ ஒங்க நாடகப் பிரதி எவ்வளவு பக்கம் இருக்கும்..?..” “ மொத்தம் முன்னூத்தம்பது பக்கம் இருக்கும்…கையொடிய நெஞ்சொடிய நானே ராத்திரியெல்லாம் […]