பாவண்ணன் குடும்ப வாழ்க்கையைப்பற்றி என் மனம் வரைந்துவைத்திருக்கிற சித்திரம் மிக உயர்வானது. என் கல்லூரிக்காலத்தில் அது இன்னும் உயர்வானதாக, லட்சியபூர்வமானதாகவும் இருந்தது. ”நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு”, “நீயாகியர் என் கணவன், ஞானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” என்பவைபோன்ற வரிகள் ஊட்டிய மன எழுச்சியால் என் மனச்சித்திரம் மேலும்மேலும் அழுத்தம் பெற்றிருந்தது. ஆனால், எதார்த்த உலகில், எங்கள் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் கணவன்மார்களிடம் அடிவாங்கிய வேதனையில் ஒப்பாரிவைக்கிற, கலங்கிய கண்களோடு கைப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அகால […]
அக்டோபர் 6, 2011 ஆப்பிள் விரும்பிகளுக்கு ஒரு சோகமான நாள். 27 ஆண்டுகளாக ஒரு ஆப்பிள்-ஐ அழுகாமல் வைத்துக் கொண்ட புதுமை கடவுள் மறைந்த நாள். தன்னுடைய வித்யாசமான யோசனைகளால் கணினி மற்றும் செல்பேசி தொழில் நுட்பத்தை அழகுபடுத்தியவர் என்ற முறையில், உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் ரசிகர்கள், அவருக்காக பிராத்தனை செய்கின்றனர். அவர் உருவாக்கிய பல பொருட்களைப் பற்றித் தான் சில நாட்களாக அதிகம் கூகுள் செய்யப் படுகிறது. அவர் இறந்தது எப்படி? அவர் சாதனைகள் என்ன? அவருடைய […]
பழக்கப்பட்ட உடல்களைப் போலிருந்தன அவை செய்கையும் செய்நேர்த்தியும் எத்தனை சிற்பியோ.. விரிந்தும் குறுகியும் அகண்டும் பருத்தும் ஆதிமூர்க்கங்களின் விலாசங்கள் அறிகுறிகளின் கையெழுத்தோடு. நிராசையோ., நிரந்தரச் சுவையோ., நேர் நேர் தேமாவென ஒற்றைச் சாளரம் வழி வழிந்து பெருகியது காற்றில் ஓரிதழ் தாமரையென. ஒன்றிணைந்து மிதந்து கொண்டிருந்தன.. நிறை நேர் புளிமாவிலிருந்து முற்றிலும் ஒதுங்கி.
”மம்மி.. ஷாம்பூ போடுங்க.. சீயக்கா வேணாம். கண் எரியும்.” சிணுங்கினாள் மீத்து. ”அம்மம்மாகிட்ட கேளு.சீயக்காய்தான் நல்லது. “ அம்மா ரேச்சல். “ஷாம்பூவே போடு. அதென்ன அம்மம்மாகிட்ட கேக்கிறது..” தன் அதிகாரத்தை நிலைநாட்டியபடி நகர்ந்தாள் மீத்துவின் தாதி ப்ரேம். டில்லிக்கு வேலை நிமித்தம் வந்தபோது பஞ்சாபின் திலீப் சர்மாவை காதல் மணம் செய்தவள் கேரள ரேச்சல். கேரளாவின் சிவப்பரிசிச் சோறு., குழாய்ப்புட்டு., கடலைக்குழம்பு., சாப்பிட்டு வளர்ந்த ரேச்சல் மாமியாருக்காக ரோட்டி., காலிதால் மாக்னி., பஞ்சாபி பனீர்., ஆலு கோபி., […]
மிக உன்னதமான ஒன்றைப் போன்ற பாவனைகளுடன் எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வார்த்தைகளும் மிக எளிமையான ஒன்றைப் பற்றி. புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் அயற்சி ஏற்படுத்தும் ஒவ்வொரு நிமிடங்களும்’ அதன் மதிப்பை அதிகப்படுத்துகின்றன. அயர வைப்பதுபோல் தோன்றினாலும் மலையிலிருந்து ஒரு கல் மடுவிலிருந்து கொஞ்சம் சேறு பனியிலிருந்து சிறு பாறை காட்டிலிருந்து ஒரு சுள்ளி என பொறுக்கிச் சேர்க்கும் கலவை பல் நீட்டிக் கொண்டிருக்கிறது. சரளமற்ற ஒன்றை சர்வதேசத்தரம் என்ற சங்கப்பலகை போன்றதான மிதக்கும் பீடத்தில் சுமப்பவர்கள் சாதாரணரர்களைக் […]
அகம் சார்ந்த வாழ்வை பழித்து விடப்பட்டிருக்கிறது ஆதலால் முன்னோர்களின் வழியின் திறவுக்கோல் வைத்து சரிப்பார்த்துக்கொள்ள முடிகிறது நான் எதிர் கொள்ளும் அனைத்தின் விளைவுகளும் . இதில் திறவுக்கோல் அளவுகள் பரிசோதிக்க அவசியம் இருக்கவில்லை அனைத்துக்குமான நிறைவை உள்ளடக்கியது இவை . என் அகம் பிரபஞ்ச தொன்மையில் தொலைந்து போயிந்த ஒன்று வார்த்தையின் தேடல்களில் அவை சிக்குவதில்லை மன உணர்வின் அதிர்வுகளும் அறிவதில்லை . கிடைக்க பெறாத எதுவுமே நம்பிக்கையாக்கப்படுவதால் அவ்வண்ணமே நானும் ஆக்கப்பட்டேன் . கொடுர நம்பிக்கை […]
பேச வேண்டுமென நினைக்கும் வார்த்தைகள்.. உள் மடங்கி குறைப்பிரசவமாய்! ஜீரணிக்க முடியா நிகழ்தலில்.. காதலுக்கான குறியீடுகள்! கவிதையின் உப்பில் உள்ளளவும் நன்றி மறவா கண்ணீர் படிமங்கள்!!! -மணவை அமீன்.
ஊரைவிட்டு விலக்கி வைத்தனர் என்னை நீரைவிட்டு நிலத்தி லிட்டனர் மீனை ஊரினம் யாவரும் ஓரின மாயினர் எனக் கெதிராய் காரண மாயிரம் தோரண மாயின சீர்திருத்தம் சொன்னவரை பெரியார் என்றனர் சிறுதிருத்தம் சொன்ன எனை பிரிந்துபோ என்றனர் பஞ்சாயத்தில் புலிவேஷத்துடன் பத்தாயத்து எலிகள்… படிப்பறிவு இன்றியே ஒரு பிடி பிடித்தன பிஞ்சுகள் இருவர் பிழை செய்தனர் விடியோ விளையாட்டென வாழ்க்கயை எண்ணினர் வாழத் தலைப்பட்டு வீடுகள் துறந்தனர் ஓடிப் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா அசலான பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்பது சமூகம் அனைத்துகும் நலம் படைத்துக் குடியரசு முறையில் செயற்பட்டு வரும் ஒன்றே ஒன்றுதான் என்பது தெரிகிறது.. ஜார்ஜ் பெர்னாட் ஷா (Everybody’s Political What is What ?) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation […]
(ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை. மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அதுபோல் ஓர் […]