Art of Living Course Course: Art of Living Course Venue: Art of Living Metuchen Address: 212 Durham Avenue Metuchen, NJ 08840 Map Start Date: Oct 12, 2011 End Date: Oct 16, 2011 Weekday Timings: 7:00pm – 9:30pm Weekend Timings: 6:30am – 9:30am Status: Active Teacher: Abitha Narayanan Contact Name: Abitha Narayan Contact Phone: 2012081381 Contact […]
சத்யானந்தன் இரு நண்பர்கள். இருவரில் யார் அதிக சுயநலவாதி என்று சொல்வது கடினம். அவர்கள் ஊர் மலைகளுக்கும் காடுகளுக்கும் நடுவே இருந்தது. காட்டின் நடுவே செல்லும் ஒரு நதிக்கரையில் ஒரு நாள் பகலில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தார்கள். நதி நல்ல வேகத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. நதியில் ஒரு பெரிய கம்பளி நூல் மூட்டை மிதந்து சென்று கொண்டிருந்தது. மலை மேல் செம்மறி ஆடுகள் நிறைய உண்டு. யாரோ ஒரு ஆட்டுக்காரரின் நூல் மூட்டை தவ்றி நதியில் விழுந்து […]
தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், கெளரவிக்கவும் தமிழக அரசு உடனடியாக தமிழ் சாகித்ய அகாதெமியை ஏற்படுத்த வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார். நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில், எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். 23 எழுத்தாளர்களுக்கு ரூ. 3.4 லட்சம் பரிசு எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சார்பில் சிறந்த நூல்களைப் படைத்த எழுத்தாளர்கள் […]
மலர்மன்னன் “பிறர் கட்டுரைகளுக்கு மறுமொழியாக உனது கருத்துகளைத் தெரிவிப்பதைவிடத் தனிக் கட்டுரைகளாகப் பதிவு செய். ஏனெனில் காலப் போக்கில் பிறர் கட்டுரைகளுக்கு அடியில் மற்றவர்களின் மறுமொழிகளுக்கு இடையே உனது மறுமொழிகள் புதைந்து மறைந்துபோய்விடுகின்றன. மேலும் உனது பல கருத்துகள் மறுமொழி வடிவில் அமைவதால் கவனத்திற்கு வராமலும் போய்விடுகிறது. வந்தாலும் சேகரித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை” என்று சில நண்பர்கள் எழுதுகிறார்கள். யோசிக்கும் வேளையில் அவர்கள் சொல்வது சரியாகவே படுகிறது. திண்ணை இணைய இதழின் அக்டோபர் 2, 2011 தேதியிட்ட […]
மழைக்கால இரவு கொசுக்களின் படையெடுப்பில் உடலிலிருந்து அரை அவுன்ஸ் இரத்தம் குறைந்தது வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்தின் உள்ளே இரண்டு சடலங்கள் பயங்கரத்தை ஞாபகப்படுத்தும் மேகத்தின் கறுமை நிறம் காற்றின் வேகத்தால் மரங்கள் பேயாட்டம் போடும் இடி தாக்கியதில் கோயில் மதில் சுவரில் விரிசல் விழுந்திருக்கும் ஆளரவமற்ற வீதியை மின்னல் படமெடுக்கும் ஆறு உடைப்பெடுத்ததை அறியாமல் ஊருசனம் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்.
___ ரமணி நானறிந்த நிகரற்ற நட்சத்திரங்களின் ஞாபகத்தோடு வானின் தொலைதூரத்திலெரியும் சூரியனை என் ஒளியிழந்த கண்கொண்டு பார்க்க விழைகிறேன். நீண்ட வெளியின் மையத்தையும் முடிவையும் காணத்துடிக்கும் மனதின் வீண்முயற்சியின் அடித்தளத்தில் தகிக்கும் அடையாளமற்ற வெற்றுப்பார்வையில் என் சிறகுகள் கட்டவிழ்கின்றன. ஆனந்தத்தின் அடர்த்தியில்லாது கடந்துபோன வாழ்வை எரித்து என் கல்லறையாகக் காத்துக்கிடக்கும் பள்ளத்தாக்கிற்கு என் பெயரைச் சூட்ட நினைக்கிறேன்.
__ ரமணி இரவின் மிச்சம் இன்னும் ஜன்னல் கண்ணாடிகளுக்குப்பின் மயங்கிக் கொண்டிருக்கிறது. எது எரிந்து இப்படி சாம்பலாய்ப் பூத்துக்கொண்டிருக்கிறது? கண்களுக்குள் இன்னும் கனவு முட்டைகள் உடையாதிருக்கின்றன. முட்டைகள்! துராக்ருத முட்டைகள்! ஒரு கோப்பை காப்பித்திரவத்தால் அவற்றைக் கலைத்துவிடமுடியாது! பகலின் நெரிசலில் வாழ்க்கை வர்த்தகங்கள் சிதறடித்து விரட்ட எங்கோ மாயமறைவில் ஓடி ஒளிந்தாலும் இருளின் பதுங்கு குழிக்குள் எப்படியோ மீண்டும் சூல்கொண்டுவிடும் ஒவ்வொரு பொழுதிலும் மனக்கண்ணாடி உடைந்து அவஸ்தையாய் உயிர்த்திரவம் பெருகும்.
இந்தநாள் இனிய நாள் என்ற உற்சாகக் குரலுக்குச் சொந்தக்காரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். எளிமையான வார்த்தைகளில் தினம் ஒரு தகவல் பகிரும் இவரின் புத்தகம் சிறகை விரிப்போம். SIXTH SENSE PUBLICATIONS. வெளியீடு. விலை ரூ 100. தினமணியில் (வானொலி, தொலைக்காட்சி, பத்ரிக்கை ஆகியவற்றில்) வந்த தொடர் இது. சிகரம் தொடக்காத்திருக்கும் வாசகர்களின் சிறகுகளைத் தடவிக் கொடுத்து வானமே எல்லை என அவர்களைத் தயார்ப்படுத்துகிறது நூல். மதச்சார்பற்று எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கொள்கைகளைக் கருத்துக்களைப் பகிர்ந்து […]
தொழுகைத் தொப்பி புனிதநூல் பிரதி பேரரசன் உடுப்பிற்கும் உணவிற்கும் நெய்தபடி இருந்தார். மலை எலிகளை விரிந்த நாகங்களை விக்கிரங்களை உடைத்து பள்ளிகளை எழுப்பினார். டாரா ஷிக்கோ புறச்சமயியானான், அவனோடு ஷூஜா, முராட், சர்மட்டை சிதைத்தார் வாழும் புனிதர். மதமெனும் மதுவில் மூழ்கியவர் வீராபாயையும் இழந்தார் தந்தையின் அன்பையும். தீன் இலாஹியோடு கிளைத்தார், டாரா ஷிக்கோவின் வழித்தோன்றலாய் மனித நேயர். — நன்றி குஷ்வந்த்சிங்கின் ஔரங்கஷீப் ஆலம்கீர் ஹிந்துஸ்தான் பேரரசர்.
அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத் தோன்றியது. இடது கையை மடக்கி இடது தொடையில் நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். வலது கையில் செங்கோல். காலம் என் கையில் கொடுத்த நீதி. நீதான் ஆளத்தகுந்தவன். நிமிர்ந்து சபையை நோக்கினார். இந்த மக்கள் மனதில்தான் […]