தொடு நல் வாடை

This entry is part 12 of 29 in the series 9 அக்டோபர் 2016

  ===ருத்ரா இ பரமசிவன். {இது எனது சங்கநடை செய்யுட் கவிதை) வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்துளி  வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த தண்புரை இதழும் மெல்லிய சூட்டின் மெய் அவிர் பாகம் உள்ளம் காட்டும் உவகை கூட்டும். கழை சுரம் புகுதரும் கடும்பனித்தூவல் பொறிமா போர்த்த வெள்ளிய காட்சி அணியிழை அகல்விழி அந்தணல் ஆர்க்கும். பண்டு துளிய […]

கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya bharathi and other Legends of Carnatic Music’ எனும் நூலின் அறிமுகமும், இன்னிசை நிகழ்வும்

This entry is part 13 of 29 in the series 9 அக்டோபர் 2016

அன்புடையீர். வணக்கம். எதிர்வரும் 22/10/2016 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு எமது மகளும், ‘இசைக்கலைமணி’, ‘கலாவித்தகர்’ திருமதி. சேய்மணி. சிறிதரனின் மாணவியுமான கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya bharathi and other Legends of Carnatic Music’ எனும் நூலின் அறிமுகமும், இன்னிசை நிகழ்வும் Akshyis Events Hall, Southend Road, East Ham, E6 2AA மண்டபத்தில் இடம்பெறும். அவ்விழாவில் தாங்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களின் வரவை எதிர்பார்த்து.. இ.மகேந்திரன் (முல்லைஅமுதன்) […]

கவர்ச்சி

This entry is part 14 of 29 in the series 9 அக்டோபர் 2016

அழகர்சாமி சக்திவேல் நான்கு முறை கல்யாணம் செய்து கொண்டவன் கூட நடிகையின் போஸ்டரை வெறிக்கப் பார்த்தால் “அது இயற்கைக் கவர்ச்சி” …அனுமதிக்கும் ஆண் சமூகம்.. பெண் ஆணை வெறிக்கப் பார்த்தால்.. “இவள் ஒரு மாதிரியானவள்”… பரிகசிக்கும் ஆண் சமூகம் ஓரின ஆண் வெறிக்கப் பார்த்தாலோ உடனே காறிக் காறித் துப்பும் ஆண் சமூகம்   எறும்பு இனிப்பு நாடுவதும் இரும்பு காந்தம் நாடுவதும் இயற்கை சொல்லும் கவர்ச்சி இலக்கணங்கள்… பூமி நம்மைக் கவராவிட்டால் வானத்திலேயே வட்டமிட்டுக் கொண்டிருப்போம் […]

குடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல்

This entry is part 15 of 29 in the series 9 அக்டோபர் 2016

குடிக்க வேண்டாம் என்று அப்பாக்களை கேட்டு காலைப்பிடித்து மாணவர்களை கதறச் சொல்லி ஒரு பள்ளி அறிவுறுத்துவது பற்றி அறிந்த போது அதிர்ந்து விட்டேன். பள்ளி மாணவர்களுக்கான “ கதை சொல்லி.. “ சிறுவர் கதை எழுதும் போட்டியில் அப்பள்ளியின் 4  மாணவர்கள் பரிசு பெற்றிருந்ததையொட்டி பரிசளிக்க அப்பள்ளிக்குச் சென்றிருந்தேன். ( சில தனிப்பட்ட காரணங்களால் அப்பள்ளியின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை )ஆண்டுதோறும் ” கனவு “ அமைப்பு  பள்ளி மாணவர்களுக்கு கதை எழுதும் போட்டியை நடத்திப் […]

காமிக்ஸ் – பியூர் சினிமா புத்தக அங்காடி

This entry is part 16 of 29 in the series 9 அக்டோபர் 2016

சினிமாவின் காட்சி மொழிக்கு உறுதுணையாக இருக்கும் உப கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற மற்ற தலைப்புகளிலும் தற்போது பியூர் சினிமாவில் புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. காமிக்ஸ் புத்தகங்களை சிறுவயது முதலே படிக்க தொடங்கினால் காட்சி மொழி வளரும். எனவே நண்பர்கள் தங்களால் காமிக்ஸ் புத்தகங்களை படிக்க இயலவில்லை என்றாலும், தங்கள் குழந்தைகள் அல்லது பள்ளி சிறுவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். சினிமா எடுக்க விரும்பும் உதவி இயக்குனர்கள், ஆர்வலர்கள் அவசியம் காமிக்ஸ் புத்தகங்களை படிக்க வேண்டும், ஷாட் […]

எலி வளைகள்

This entry is part 17 of 29 in the series 9 அக்டோபர் 2016

சோம. அழகு காலி டப்பாக்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, விதவிதமான வண்ணங்கள் பூசி, ஆங்காங்கே சாளரங்களுக்காகத் துளையிட்டு….. அட! அடுக்குமாடிக் குடியிருப்புகளைத்தான் சொல்கிறேன். சென்னையிலும் உலகமயமாக்கலுக்கு வளைந்து கொடுக்கும் இன்ன பிற பெருநகரங்களிலும் இடப்பற்றாக்குறை காரணமாக ‘இவ்வகைக் குடியிருப்புகள் சகஜம்’ என நியாயம் கற்பிக்க முனையும் போதே, ஏரிகளுக்கும் குளங்களுக்கும் சமாதியாய் இவை எழுவது மனதைச் சமாதானம் செய்வதாய் இல்லை . மேலும் நிறைய இடம் இருக்கும் என் ஊரில் சமீப காலமாக முளைத்துள்ள இந்த […]

கதை சொல்லி (சென்றவாரத் தொடர்ச்சி) – 3

This entry is part 18 of 29 in the series 9 அக்டோபர் 2016

பியர் ரொபெர் லெகிளெர்க்   இடது பக்கம் கத்தீட்ரல, வலது பக்கம்  சேன்-போல் தேவாலயம்; நேர் எதிரே அவர் தீவு என்று குறிப்பிட்ட நதி. தம்மை அவர்கள் கடந்துசெல்லும் ஒவ்வொருமுறையும்கையை அசைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார். அவர்கள் சுற்றுலா பயணிகள், படகில் நகரைச் சுற்றிப் பார்ப்பவர்கள். அறை எண் 243, பால்கணியில் நிற்கிறார். இப்படியொரு அதிசயத்தை அவருக்களித்த அல்லாவிற்கு மாத்திரமின்றி, ஒருவகையில் இந்த அதிசயத்திற்குப் பங்களித்த சகோதரர் நஃபிசாட்டு, அவர் பேரன் அப்துலயே, வெகுதொலைவில் இருக்கிற உமார் […]

வண்டுகள் மட்டும்

This entry is part 19 of 29 in the series 9 அக்டோபர் 2016

  அந்த மரம் கனி செய்தது   வேர்கள் கிளைகள் இலைகள் எல்லாமும் கனிக்காகவே உழைத்தன   வண்டுகள் மட்டும் கூலிக்காக உழைத்தன   அமீதாம்மாள்  

புரிந்து கொள்வோம்

This entry is part 20 of 29 in the series 9 அக்டோபர் 2016

  உரமற்ற மண்ணில் துளையற்ற தொட்டியில் துளசி அழுகும் ********   எரியாத மெழுகு ஒளிராது *******   பூமிக்குத் தேவையில்லை பிடிமானம் *******   வேர்களின் தேடல்கள் வெளியே தெரிவதில்லை ********   விஷமுள்ள பாம்புகள் அழகானவை *******   ஏறவும் இறங்கவும் தெரிந்தால் மட்டும் போதும் மின் தூக்கிக்கு ****** முட்கள் கொண்ட பூக்கள் அழகாய் இருக்கலாம் ஆபத்தில்லை   அமீதாம்மாள்

அழகு

This entry is part 21 of 29 in the series 9 அக்டோபர் 2016

         நீ   மின்னிச்சிரிக்கிறாய்   சிரித்து அழைக்கிறாய்   பூத்து மணக்கிறாய்   மணந்து ஈர்க்கிறாய்   கொடுத்துச் சிறக்கிறாய்   சிறந்து கொடுக்கிறாய்   பெய்து நனைக்கிறாய்   நனைத்துச் செழிக்கிறாய்   காய்த்து கனிகிறாய்   கனிந்து சொரிகிறாய்   இருப்பிலும் இழக்கிறாய்   இழப்பிலும் இருக்கிறாய்   உடுத்தலில் தெரிகிறாய்   உதிர்தலில் விழிக்கிறாய்   வீழ்தலில் எழுகிறாய்   உன்னைப்   பார்த்து ரசிக்கிறேன்   […]