சி. ஜெயபாரதன், கனடா [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர் தமது புதிய உறவைத் தம்தம் கோணங்களில் திருப்பப் பார்க்கிறார்கள். பிற கோணங்களைப் புறக்கணித்து நேர் கோணப் பாதையில் மலை ஏறும் போது, முள்ளும் கல்லும் குத்தும்! எதிர்த்துப் பனிப்புயல் அடிக்கும்! […]
-ஸ்ரீரங்கம் சௌரிராஜன். மனுஷ்ய புத்திரனின் பத்தாவது கவிதைத் தொகுப்பு ‘அருந்தப் படாத கோப்பை’. இதில் 60 கவிதைகள் உள்ளன. இவரது கவிதைகளின் சிறப்பம்சம் பாடுபொருள் ஆகும். அதைத் தேர்வு செய்வதில் காணப்படும் கூர்மை நிச்சயம் வாசகர்கள் கவனத்தை ஈர்க்கும். இவர் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையால் பல கவிதைகள் உரைநடையாய் நீர்;த்துப் போகின்றன. கவிதைகளின் எண்ணிக்கை அதிகமானால் தரம் குறைவது இயல்பு. விக்கிரமாதித்தன் கவிதைகளும் இப்படித்தான் பாதிக்கப்பட்டன. ‘தனிமை என்று எதுவும் இல்லை’ […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. கடுந்தவசிகள் கடிய நோன்பினைக் கடைப் பிடிப்பார் ! அதுபோல் காதற் துயரில் முறிந்து போய் நிரந்தரப் பிரிவில் இறங்க முனைந்து விட்டீர். புறக்கணித்து விடாதீர் , காதலை இழக்காதீர் . போலி உணர்வுக்கு காதலர் இரையாக வேண்டாம் ! உமது நெஞ்சங்கள் அமைதி அடையட்டும் பிரிவுத் துயரில் விடுபட்டு ! உள்ளெழும் புரட்சியி லிருந்து […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா http://www.nasa.gov/mission_pages/cassini/whycassini/cassini20130429.html [ NASA Probe Gets Close Views of Large Saturn Hurricane ] சனிக்கோளின் பூதப்புயலில் நீர், பனித்தூள்கள், அமோனியா வாயுக்கள் வெளியேறும் ! தரைத்தளம் கீறி, துணைக்கோளில் வரிப்புலி போல் வாய்பிளந்து முறிவுக் குழிகளில் பீறிட்டெழும் வெந்நீர் ஊற்றுக்கள் ! முகில் மூட்ட வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான […]
“வாம்மா, ராதிகா. வா.” ராதிகாவை எதிர்பார்த்து, வாசற்கதவைத் திறந்து வைத்துக்கொன்டு சிந்தியா அவளுக்காக்க் காத்திருந்தாள். அவள் தன் காலணிகளை உதறிய பின், அன்பு தோன்றச் சிரித்து, அவள் கைபற்றி வீட்டினுள் சிந்தியா அவளை இட்டுச் சென்றாள். அவளது அந்தத் தொடுகை ராதிகாவைச் சிலிர்க்க வைத்தது. “நீ எங்க வராம இருநதுடுவியோன்னு எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கையாத்தான் இருந்திச்சு. நல்ல வேளை. வந்துட்டே. என்ன சாப்பிட்றே?… முதல்ல உக்காரு.” ராதிகா உட்கார்ந்தாள்: “எனக்கு எதுவும் வேணாங்க. எங்க காலேஜ் காண்டீன்ல […]
ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி . நாட்கள் நகர்ந்து மாதங்களாகக் தினசரி காலண்டரில் தேய்ந்து கொண்டிருந்தது. பயத்தில் உறைந்து போயிருந்தாள் கௌரி. இன்னும் சிறிது நாட்களில் , இரண்டு குழந்தைகளை ஒரே சமயத்தில் பெற்றெடுக்க வேண்டும். ஒரு பக்கம் மகிழ்வாக இருந்தாலும், வயிற்றில் இருக்கும் இந்தச் சுமைகள் எப்படி வெளியேறும்..? இவளது பயம், இவளது படிப்பையும் புத்தியையும் கூட தள்ளி வைத்து பயம் காட்டியது. ஒருவேளை நான் செத்துப் போயிடுவேனோ….? எப்போதும் முகம் […]
அதிகாலை நேரம். சார்லஸ் தூக்கிக் கொண்டருக்கும் மகனின் பக்கம் சென்று, “பாவ் பாவ், விடிச்சிடுச்சு. எழுந்திரு, எழுந்திரு!” என்று உரக்கக் கத்தினார். பாவ்வுக்கோ நல்ல உறக்கம். எழலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையிலேயே, போர்வை வேகமாக இழுக்கப்பட்டது. பல முறை இப்படி இழுக்கப்பட்ட போது பாவ் தலை குப்புற விழுந்திருக்கிறான். பல முறை தலை தரையில் படாமல் தப்பிக்கப் பல சாகசங்களைச் செய்யதிருக்கிறான். இப்போது பழகிவிட்டிருந்ததால், தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு […]
மொழியாக்கம்-சத்தியப்பிரியன் பக்கிம் சந்திர சட்டர்ஜியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். பக்கிம் சந்திர சட்டர்ஜி துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்று புதல்வர்களில் கடைக் குட்டி..,1838ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம்நாள் கொல்கத்தா அருகில் உள்ள கந்தலபாறை என்ற இடத்தில் பிறந்தார். ஜாதவ் சந்திரர் ஒரு துணை நீதிபதி. நற்பண்பு நிறைந்தவர். பக்கிம்மின் மூத்த சகோதரரான சஞ்சீவ் சந்திரா ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அவருடைய பாலமோ […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோடடை E. Mail: Malar.sethu@gmail.com 24.மாடுமேய்த்த அறிவியல் மேதை அடடே….வாங்க….வாங்க ..என்னங்க சோர்ந்து போயி வர்ரீங்க…என்னது…சொல்லுங்க…நல்ல நண்பர்கள்கிட்ட மனசுவிட்டுப் பேசுறது எல்லா மனச்சுமையையும் குறைச்சிரும்…மனசு லேசாயிரும்..எதையும் மனசுக்குள்ளேயே வச்சு வச்சு மறுகக் கூடாதுங்க.. சொல்லுங்க.. அட அப்படியா?.. நீங்க நல்லது செய்யப் போயி உங்கள சரியாப் புரிஞ்சுக்காம மனசு நோகப் பேசிட்டாங்களா..? இங்க பாருங்க…. இந்த […]