யாவரும் நலம் படத்திற்குப் பிறகு, நல்லதொரு திகில் படத்தைப் பார்த்த அனுபவம். பாடல்கள் மட்டும் இல்லாதிருந்தால், நல்லதொரு ஹாலிவுட் படத்தின் மொழி மாற்றம் என்றே சொல்லலாம். தேசிய விருதுக்கு தகுதியான நடிகைதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறார் பிரியா மணி. வாலி அஜீத்தை, பெண் பாத்திரமாகக் கற்பனை செய்து கொண்டால், அதுதான் லதா. அப்படியொரு வன்மம் கண்களில். சபாஷ். அமானுஷ்ய கதையில், வெறும் பயமுறுத்தலை மட்டுமே பிரதானமாகக் கொள்ளாமல், சில எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டு வந்ததற்கு, இயக்குனரைப் […]