முக்கோணக் கிளிகள் [3]

This entry is part 3 of 15 in the series 1 செப்டம்பர் 2013

  சி. ஜெயபாரதன், கனடா     [முன் வாரத் தொடர்ச்சி]   “காண்டேகரின் கிரௌஞ்ச வதம் நாவலை நான் படித்திருக்கிறேன். உணர்ச்சி பொங்கும் உயர்ந்த நாவல்! அவர் உன்னதக் காவியப் படைப்பாளர்” என்று மௌனத்தைக் கலைத்தான் சிவா. “ஏற்கனவே “கிரௌஞ்ச வதம்” நாவலை நான் மராட்டியில் படித்ததுதான்! இப்போது அந்த நாவலைத் தமிழில் சுவைக்கிறேன். அழகிய தமிழ் நடையில் கா.ஸ்ரீ.ஸ்ரீ காண்டேகரின் மனத்தை அப்படியே எடுத்துக் காட்டியிருக்கிறார்” என்று தனது தமிழ்ப் பற்றைக் காட்டினாள் புனிதா. […]

சாகச நாயகன் 5. என்டர் தி டிராகன் அனுபவம்

This entry is part 2 of 15 in the series 1 செப்டம்பர் 2013

    சான் புரூஸ் லீயுடன் நெருக்கமாகப் பழகாவிட்டாலும், அவர் செட்டில் நடந்து கொண்ட விதத்திலிருந்து, அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டான்.  அவருக்கு நெருக்கமானோர் மிகச் சிலரே.  ஏனென்றால் அவர் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தார்.  ஆனால் அவர் மிகச் சாதாரண ஸ்டண்ட் கலைஞர்களையும் மதிக்கும் குணம் பெற்றவர்.  அவர் தன்னுடைய முதலாளிகளை எதிர்த்தும் கூட, தன் கீழ் பணி புரியும் கலைஞர்களை நன்கு கவனித்துக் கொண்டாராம். பிஸ்ட் ஆப் புயூரி  படம் வெளிவந்த சில […]

7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில்

This entry is part 1 of 15 in the series 1 செப்டம்பர் 2013

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் செப்டம்பர் மாதக் கூட்டம் வரும் சனிக்கிழமை அதாவது 7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் பெரம்பலூர் சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பீ. ரகமத் பீபி அவர்கள் எல்லையொன்றின்மை எனும் பொருள் – என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து கலந்துரையாடல் நிழகஉள்ளது. அனைவரும் வருக.  

நான் இசைக்கும் ஒற்றைப்பாடல்

This entry is part 11 of 15 in the series 1 செப்டம்பர் 2013

    சந்திப்பதற்கான ப்ரியம் பச்சிலைகளிலாலான கிளியொன்றின் அசைவிலிருந்து ஆரம்பிக்கிறது உன்னிடம் பகரக் காத்திருக்கும் சொற்களையெல்லாம் தனக்குள் பதுக்கி வைத்திருக்கிறது அக் கிளி   ஒரு வாழைமரத்தைப் பிரதிபலிக்கிறது நீ பரிசளித்த அக் கிளி சிறகுகள் சுற்றிக் கட்டப்பட்ட அதற்குக் கனவுகளில்லை கிளையில்லை ; ஆகாயமில்லை ஒரு கூண்டு கூட இல்லை   நீ கவனித்திருக்கிறாயா விரல்களை அசைத்தசைத்து நான் ஏன் ஒற்றைப் பாடலை இசைக்கிறேனென   உனது கவனத்திற்கும் அப்பாலான எனது கனவிற்குள் நீயறியாதபடி இருக்கிறது […]

தாகூரின் கீதப் பாமாலை – 80 பருவக் கால மழை .. !

This entry is part 15 of 15 in the series 1 செப்டம்பர் 2013

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   அறிவேன், நான்  அறிவேன் தெரியாமல்   இப்பாதையில் நீ மறந்து போய் வழி தவறி   வந்து விட்டாய் என்று ! அப்படியே  இருக்கட்டும்,  ஆமாம் அப்படியே  இருக்கட்டும். திறந்து வைத்துள்ளேன் வாசல் கதவை !   ஆபரணம் எதுவும் நீ அணி யாமல்   வந்திருப்பதைக் காண்கிறேன். குலுங்கும்  பாதச் சிலம்பும் அணிய வில்லை  ! அப்படியே  இருக்கட்டும், […]