அசுர வதம்

அசுரனைக் கொல்வதா அசுர வதம்

அசுரன் கொல்வதும் அசுர வதம்

நமக்கு அவன் செய்வது தவறு எனில்

அவன் பார்வையில்

நாம் அவனுக்கு செய்வதும் தவறு

கொரோனா…

உருவானதோ உருவாக்கப் பட்டதோ

இவ்வுலகில் ஜனித்து விட்ட அதுவும் ஓர் உயிர்

ஜனித்த எந்த உயிருக்கும் வாழ உரிமையுண்டு

அடுத்தவர் வாழ்வை கெடுக்காதவரை

அடுத்தவர் வாழ்வில் புகாதவரை

ஜனித்த எந்த உயிருக்கும் மரணம் உண்டு

அதுவாய் நடக்கும் தருணம் வரை

மரணம் தருவிக்க உரிமையில்லை

அடுத்தவர் வாழ்வை கெடுக்காதவரை

அடுத்தவர் வாழ்வில் புகாதவரை

ஜனித்த எந்த உயிருக்கும் மரணம் உண்டு

அதுவாய் நடக்கும் தருணம் வரை

மரணம் வருவிக்க உரிமையில்லை

அடுத்தவர் வாழ்வை கெடுக்காதவரை

அடுத்தவர் வாழ்வில் புகாதவரை

ஊகான் விட்டு புறப்பட்டவன்

அவன் வழி போயிருந்தால்

யாருக்கும் கஷ்டமில்லை நஷ்டமில்லை

அடுத்த உயிரை நாடுவதேன்

அது தான் அதன் வாழ்வு

அடுத்ததைச் சார்ந்து…

இல்லையேல்… அது இல்லை.

அது அதன் பிறப்புரிமை

ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு பிறப்புரிமை

ஊர்வன, பறப்பன, நடப்பன, நீர் வாழ்வன

ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு பிறப்புரிமை.

ஜனித்த எந்த உயிருக்கும் வாழ உரிமையுண்டு

அடுத்தவர் வாழ்வை கெடுக்காதவரை

அடுத்தவர் வாழ்வில் புகாதவரை

உன்னை வளர்க்க…

நீ வாழ… வேறு வழி இருக்கும் போது

இன்னொன்றை அழிப்பதா உன்னுரிமை

சொல்லுவார் இல்லையேல் கேட்பார் இல்லை

சொல்லியும் கேட்பாரில்லையேல்…

புரியச் சொல்ல ஒருவர் தேவை

ஒன்று தேவை…

அதுவா கொரோனா?

எதிர்த்து நிற்போம், தடுத்துக் கொள்வோம்,

நமக்கு வலிமை உள்ளவரை, வலிமை பெறும் வரை.

இதுவா நியதி?

மெலியாரை வலியார் ஒடுக்கின்…

ஜனித்த எந்த உயிருக்கும் வாழ உரிமையுண்டு

அடுத்தவர் வாழ்வை கெடுக்காதவரை

அடுத்தவர் வாழ்வில் புகாதவரை…

ஜனித்தது மரணித்தால் சமனாகும்

ஜனனமும் மரணமும் சமமானால் சமனாகும்

சமனில்லையேல் நிலையில்லை…

மரணித்து மண் புதைத்தல்…

மரணித்து எரியூட்டல்…

மரணத்தில் கரைந்து படல்…

மரண சாசனங்கள்,

சமன் செய்யும் நிலைப்பாடுகள்.

ஜனனம் மட்டுமாய் மரணம் இல்லையேல்

ஜனனம் கூட்டி மரணம் இல்லையேல்

சமனில்லையேல் நிலையில்லை.

சமன் செய்ய செய்வதுவா…

தன்னூண் பெருக்கற்கு பிறிதூண் உண்பதுவும்…

இது மட்டும் போதாதென…

சமன் செய்ய வந்ததுவா ‘கொரோனா’

எனில்…

நடக்கும் சமனற்ற செயலுக்கு ஒரு அறிகுறி

இந்த கொரோனா…

எதிர் வரும் பகாசுர வதத்தின் அறிகுறி.

  • குணசேகரன்
Series Navigationயாம் பெறவேஇதயத்தை திறந்து வை