அட்ஜஸ்ட்

Spread the love

காதலியோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
அவளுக்கே கணவனா ஆகியிருக்கலாம்,
வாத்தியாரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
இந்நேரம் டிகிரி முடிச்சிருக்கலாம்,
கூட்டாளிகளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
பிஸினஸ்ல இன்னும் நல்ல ப்ராஃபிட் பாத்திருக்கலாம்,
பங்காளிகளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
சொத்தில கொஞ்சமாவது அனுபவிச்சிருக்கலாம்,
ஊர்க்காரனுங்களோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
கண்ட ஊருக்கும் போயி வேலைக்கி அலையாம இருந்துருக்கலாம்,
பேங்க் மேனேஜரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
தலயில துண்டப்போடாம கெளரவமா திரிஞ்சிருக்கலாம்,
மேலதிகாரியோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
இந்நேரம் பதவி உயர்வு வாங்கிருந்திருக்கலாம்,
பக்கத்து வீட்டுக்காரனோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
மாத்து சிலிண்டராவது கெடச்சிருக்கலாம்,
ஆடிட்டரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
நிறைய டாக்ஸ் சேவ் பண்ணிருக்கலாம்,
பதிப்பாளரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
இந்நேரம் கவிதைத்தொகுப்பு வெளியிட்டிருக்கலாம்
நண்பர்களோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
இப்படித் தனியா பொலம்பாமயாவது இருந்திருக்கலாம்
கடவுளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
பொறக்காமலேயே இருந்திருக்கலாம்.
என் மொழியோட நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா
இந்த முழுக்கவிதை(?)யையும் வாசிச்சிருக்கலாம்,

– சின்னப்பயல் ( chinnappayal@gmail.com )

Series Navigationயாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்சுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு