அட்டாவதானி

Spread the love

சிலிக்கான் சில்லில் சேமித்து வைக்காத

எதுவும் நினைவிலிருப்பதில்லை

இரண்டையும் நான்கையும் கூட்ட கை

விரல்கள் நீட்டி யாரும் முயற்சிப்பதில்லை

மின்தூக்கிக்கென அரை மணி நேரம் காத்திருப்பினும்

நான்கே நான்கு படிகள் ஏறிச்செல்ல யாருக்கும் முடிவதில்லை.

ஃபேஸ்புக் நினைவூட்டாவிடில் தனது பிறந்தநாளை

யாரும் கொண்டாடுவதேயில்லை.

தீர்ந்துவிட்ட எரிவாயு உருளைக்கு பதிவு செய்ய

செல்பேசி நினைவூட்டாவிடில் இயல்வதில்லை

இவையெல்லாவற்றையும் அதிகாலையில்

நினைவூட்ட அலாரம் இன்றி எழ முடிவதில்லை

– சின்னப்பயல் ( chinnappayal@gmail.com )

Series Navigationஎப்போதும் புத்தாண்டே! என்றும் புத்தாண்டே!அம்மாவும் பூனக்குட்டியின் கனவுகளும்