அதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வு என்ன?

Spread the love

s_i26_99329204தலைநகரில் நடந்த அவலம் இந்திய மக்களின் உள்ளங்களை உலுக்கியிருக்கிறது. அதுவும், இளைஞர்களையும் இளைஞிகளையும் அச்சத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றிருக்கிறது. அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், காங்கிரஸ் கட்சி தலைமை தவித்திருக்கிறது.

இங்கே ஏராளமான தீர்வுகள் முன் வைக்கப்படுகின்றன. அதில் முக்கியமாக, இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்க கோரும் குரல்கள் உரத்து எழுகின்றன. தண்டனையை கடுமையாக்குவது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடி வழக்கை முடித்து தீர்ப்பு தருவது ஆகியவை ஓரளவுக்கு பயன் தரும் என்றாலும் அது தும்பை விட்டு வாலை பிடிப்பது. ஒரு குற்றம் நடந்த பின்னால், அந்த குற்றத்தை எப்படி தண்டிக்கிறோமோ அது எதிர்கால குற்றங்களை குறைக்க உதவும் என்ற பழங்கால நம்பிக்கை.

 

பாலியல் பலாத்காரக் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் பலரிடமிருந்து எழுந்திருக்கிறது. இந்த வாதம் கவர்ச்சியானதாக இருப்பினும் பிரசினையைக் குறித்து அலசாமல் உணர்வு பூர்வமாக எடுத்த தடாலடி தீர்வு என்று சொல்ல வேண்டும்.
பாலுறவு பலாத்காரம் செய்பவன், குற்றம் முடிந்ததும் ஓடத்தான் முயற்சி செய்வான். அதுவே இந்த குற்றத்து மரண தண்டனை என்றால், இந்த பெண் நம்மை காட்டி விட்டால் என்ன செய்வது என்று அந்த பெண்ணை கொலை செய்யத்தான் முயற்சி செய்வான். குற்றத்தை இந்த மரண தண்டனை அதிகரிக்குமே தவிர குறைக்காது. இப்போது பாலியல் பலாத்காரம் வன் புணர்வில் முடிகிறது. மரண தண்டனை என்று அறிந்தால் அந்த பாலியல் வன்முறை கொலையில் தான் முடியும். பெண் மீதான வன்முறைக்கு அதிக பட்சமான தண்டனை வழங்க வேண்டும் என்பதும் மரண தண்டனை ஒரு சமூகத்தில் தேவைப் படுகிற சந்தர்ப்பம் அரிதான வகையில் உண்டு என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால் பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை சரியல்ல. தீர்வும் அல்ல.

இன்னொரு பழங்கால அறிவுரை திருவள்ளுவரிடமிருந்து வருகிறது.

நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்.

இங்கே பரவி வரும் பாலுறவு பலாத்காரங்கள் ஒரு சமூக நோயாக பரவி வருகின்றன. இதற்கான காரணங்களை ஆராயாமல், அதன் தண்டனையை அதிகரிப்பதன் மூலம் இதனை தீர்த்துவிடலாம் என்று கருதுவது பேதமை.

பாலுறவு பலாத்கார குற்றங்கள் அதிகரிப்பதன் காரணம் என்ன?

என்னுடைய நோக்கில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் உப விளைவு இந்த பாலுறவு பலாத்காரங்கள் என்று கருதுகிறேன். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் நடந்துவரும் பொருளாதார சீர்திருத்தங்களும், அதன் விளைவாக அதிகரித்த வேலை வாய்ப்புக்களும், இன்று இந்தியாவை நகரமயமாக ஆக்கி வருகின்றன. இதன் காரணமாக ஏராளமான உபரி தொழிலாளர்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கும், ஏழை மாநிலங்களிலிருந்து பணக்கார மாநிலங்களுக்கும் வேலை தேடி வருகிறார்கள்.

இந்த உபரி தொழிலாளர்கள் தங்களுடன் குடும்பத்தை அழைத்துகொண்டு வருவதில்லை. தங்கள் குடும்பங்களை கிராமங்களிலேயே விட்டுவிட்டு நகரங்களுக்கோ, அல்லது வேறு மாநிலங்களுக்கோ சம்பாதிக்க தங்களது தனிமையை மட்டுமே துணைகொண்டு செல்கிறார்கள். இவர்களது வாழ்விடங்களை தெருக்களின் ஓரங்களில் உள்ள குடிசைகளிலும், தகர ஓடு வேய்ந்த தற்காலிக தங்குமிடங்களிலும் பார்க்கலாம். சென்னையில் தெருவோரங்களில் குடிசைகளை போட்டு வாழும் கிராமப்புற தமிழர்களை நாம் வெகுகாலம் பார்த்திருப்போம். இப்போது அந்த இடத்தில் ஒரிஸ்ஸா, பிகார், உத்தர பிரதேச தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவெங்கும் சாலைகளை போடுவதும், கட்டிடத்தொழிலாளர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். இதுவே இந்தியாவெங்கும். இந்த தொழிலாளர்கள் மிகக்குறைந்த சம்பளத்துக்கு உழைக்க தயாராக இருக்கிறார்கள். அதனால், கட்டிடம் கட்டுபவர்களுக்கு சிறப்பான தொழிலாளர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் பெறும் சம்பாத்தியம் ஒருவர் சென்னையில் வாழவே போதாது. இந்த லட்சணத்தில் இவர்கள் அந்த பணத்தை கிராமத்துக்கு அனுப்புவது எப்படி? இவர்கள் உதிரிகளாக ஆகிவிடுகிறார்கள்.

எங்கே இப்படிப்பட்ட migrant labourers அதிகம் ஆகிறார்களோ அந்த நகரம் குற்றங்களின் தலைநகரமாக ஆகிவிடுகிறது. டெல்லி மும்பை, சென்னை போன்ற நகரங்களில் சமீபத்தில் வெளிவந்த பல குற்றங்களில், இப்படிப்பட்ட உதிரி தொழிலாளர்கள் அதிகம் இருப்பதை பார்க்கலாம். இது ஒரு சில அரசியல்வாதிகளுக்கு உகந்த பிரச்னையாகவும் ஆகிவிடுகிறது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, சிவசேனையின் உதிரி மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனை (ராஜ் தாக்கரே) ஆகிய கட்சிகள் இந்தி பேசும் தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்த ஆரம்பிக்கின்றன. ஆனால், இந்த தொழிலாளர்களே மும்பையின் பொருளாதார முதுகெலும்பு என்பது இந்த போராட்டங்களில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும் என்பதுதான் முரண்நகை. ஆனால், இது போராட்ட வடிவத்தில் வரும்போது, மராத்தி மொழி என்றும், இந்தி மொழி என்றும், முஸ்லீம் மதம் என்றும் பல்வேறு வடிவங்களை பெற்று, அடிப்படை விஷயம் மறக்கடிக்கப்பட்டு இனவெறி /மதவெறி வடிவத்தை பெறுகிறது.

இந்த தொழிலாளர்கள் மட்டுமல்ல, இதே போன்ற பல லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் பல குடும்பங்களுக்கும், அந்தரங்கமான இடம் என்று எதுவும் கிடையாது. சாலையோரங்களிலும், ரயில் தண்டவாளங்களுக்கு அருகேயும் காலைக்கடன் கழிக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அநாகரிகத்தின் காரணமாக அங்கே காலைக்கடன் கழிக்கவில்லை. காலைக்கடன் கழிக்க அந்தரங்கமான இடம் ஒன்று இல்லாதததானாலேயே காலைக்கடனை அங்கே கழிக்கிறார்கள்.

காலைக்கடன் கழிக்க அந்தரங்கமான இடம் இல்லாதவர்கள் பாலுறவுக்கு அந்தரங்கமான இடத்துக்கு எங்கே போவார்கள்? காலைக்கடன் கழிக்க அந்தரங்கமான இடம் இல்லாதவர்கள், பாலுறவு வேட்கையை தணிக்கக்கூடிய சுயமைதுனம் போன்ற விஷயங்களுக்கு எங்கே போவார்கள்? சிக்கல் இங்கேதான் இருக்கிறது.

அய்யா கலாச்சார காவலர்களே, இது சினிமாவில் ஆபாசமாக ஆடுவதால், இவர்கள் பாலுறவு பலாத்காரம் செய்ய கிளம்பவில்லை. பெண்கள் குறைந்த ஆடை உடுத்துவதால் பாலுறவு பலாத்காரம் செய்ய செல்லவில்லை. ஒழுக்கம் சரியாக சொல்லித்தரப்படாததால் இவர்கள் பாலுறவு பலாத்காரம் செய்ய கிளம்பவில்லை. ஆணாதிக்க சிந்தனைகள் காரணமாக இவர்கள் பாலுறவு பலாத்காரம் செய்ய கிளம்பவில்லை. காதல் மனிதனை தெய்வீகத்துக்கு கொண்டு செல்கிறது. காமம் மனிதனை மிருகமாக்குகிறது. அந்த நடுநிசி நாய்களை வெற்றிகொள்வது அனைவருக்கு எளிதல்ல.

பாலுறவு பலாத்காரத்தை பொறுத்த மட்டில், இந்தியாதான் உலகத்தில் மிக மோசமான நாடும் கிடையாது.

http://en.wikipedia.org/wiki/Rape_statistics#UN_Rape_Statistics
http://www.unodc.org/documents/data-and-analysis/statistics/crime/CTS12_Sexual_violence.xls

இந்த விவாதங்களின் போது சிங்கப்பூரை பலர் உதாரணம் காட்டினார்கள்.
சிங்கப்பூரில், 2005இல் 100,000 பேருக்கு 2.7 பலாத்காரங்கள் நடைபெற்றிருக்கின்றன.
அதே வருடத்தில் இந்தியாவில் 1.6,
பங்களாதேஷில் 8.0
பூரூணை தாரஸ்ஸலாம் நாட்டில் 6.6.
குவாய்த்தில் 4.8
அமீரகத்தில் 1.5
பஹ்ரேனில் 3.4

ஐரோப்பா அமெரிக்க கண்டங்களில் வேறுவிதமான புள்ளிவிவரங்கள் வெளிவருகின்றன
கனடாவில் 1.8
அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் 31.8
மெக்ஸிகோவில் 12.7

இந்த புள்ளிவிவரங்களில் மறைந்திருக்கும் சில விஷயங்களை நாம் சிந்திக்க வேண்டும்.
முதலாவது இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் பெரும்பாலான பாலுறவு பலாத்காரங்கள் போலீஸிடம் தெரிவிக்கப்படுவதே இல்லை என்பது முக்கியமானது. பாலுறவு பலாத்காரம் செய்யப்படுவது என்பது அந்த பெண்ணுக்கே அவமானமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது என்பதால், பாலுறவு பலாத்காரத்துக்குள்ளான பெண் போலீஸ் மட்டுமல்ல, நெருங்கிய உறவினர்களிடம் கூட இந்த விசயத்தை தெரிவிப்பதில்லை. ஆகவே இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்ட செய்திகளை கொண்டுள்ளதாக இருப்பதால், அந்த பாலுறவு பலாத்காரத்தில் வன்முறை இருந்ததாலும், அதனால் படுகாயம் அடைந்ததாலுமே போலீஸிடம் இந்த செய்திகள் சென்றிருக்கின்றன என்பதை விளங்கலாம்.

 

சுமார் 90 சதவீத பாலுறவு பலாத்காரங்கள் போலீஸிடம் தெரிவிக்கப்படுவதே இல்லை என்பது ஆசிய கலாச்சாரத்தை குற்றம் சொல்வதாகவே எடுத்துகொள்ள வேண்டும்.

மேலும் பஹ்ரேன் போன்ற நாடுகளிலும் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் கலாச்சார ரீதியில் அவமானம் என்பதை தாண்டி, பாலுறவு பலாத்காரத்துக்கு உட்பட்டது பெண்ணின் குற்றம் என்பதாக எடுத்துகொண்டு, பலியான பெண்ணுக்கு சவுக்கடி வழங்குவதும் நடைபெறுகிறது. ஆகவே எந்த புத்தியுள்ள பெண், தான் பாலுறவு பலாத்காரத்துக்கு உட்பட்டதை போலீஸிடம் சொல்லுவார்?

உதாரணத்துக்கு இந்த செய்திகளை பார்க்கலாம்.

ஏழு பேர் கொண்ட கும்பலால் 14 தடவைக்கு மேல் பாலுறவு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு, அந்நிய ஆணுடன் இருந்ததற்காக 90 சவுக்கடிகள். இது சவுதி அரேபியா

http://www.guardian.co.uk/world/2007/nov/17/saudiarabia.international

 

The 21-year-old woman, who was 19 at the time of the attack and is known by the Saudi media as “the girl from Qatif”, was raped 14 times by a gang of seven. Although her attackers were found guilty and sentenced to between 10 months and five years last year, she was simultaneously sentenced to 90 lashes as punishment for riding in a car with a man who was not a relative.

சவுதி அரேபியாவில், பாலுறவு பலாத்காரம் செய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு 100 சவுக்கடிகள்.

http://trueslant.com/nealungerleider/2010/01/21/saudi-arabia-to-lash-filipino-rape-victim-100-times/

http://hotair.com/archives/2006/11/03/saudi-gang-rape-trial-ends-with-90-lashes-for-the-victim/

http://www.cbsnews.com/2100-202_162-3511560.html

 

நிலைமை இப்படி இருக்கையில்,  சவுதி அரேபியாவில் மிக மிகக்குறைந்த பாலுறவு பலாத்காரங்களே நடைபெறுகின்றன என்றால் சோகமாக சிரிக்கத்தான் முடியும்.

இந்தியாவிலும் போலீஸிடம் ஒரு பெண் தான் பாலுறவு பலாத்காரத்துக்கு உட்பட்டதாக தெரிவித்தால், அந்த பெண்ணை அவமரியாதை செய்யும் முதல் நபர்கள் அந்த போலீஸாரே என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

இதற்கு காரணம், பாலுறவு என்பதை ஒழுக்கரீதியாக பார்க்கும் படி நாம் வைத்திருப்பதுதான் என்று கருதுகிறேன். இதுவும் விபச்சாரத்தை சட்டத்துக்கு புறம்பானதாக ஆக்கிவைத்திருக்கும் சட்டங்களும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. அது பின்னொரு காலத்தில் விரிவாக எழுதப்பட வேண்டியது.

தற்போதைக்கு முக்கியமான விஷயம், விபச்சாரத்தை சட்டப்பூர்வமான ஒரு தொழிலாக அங்கீகரிக்காத பிரச்னையை பார்ப்போம்.

விபச்சாரத்தை சட்டப்பூர்வமான தொழிலாக விக்டோரியா காலத்தில் எழுதப்பட்ட இந்திய சட்டங்கள் அங்கீகரிப்பதில்லை. இதனால், பெண் துணையற்ற ஆண்களுக்கும் இப்படிப்பட்ட விளிம்பு நிலை உதிரி தொழிலாளர்களுக்கும் வடிகால் கிடைக்காமல் ஆகியிருக்கிறது. அப்படிப்பட்ட வடிகால் இல்லாமலில்லை. ஆனால், பொருளாதார ரீதியிலும், ரிஸ்க் ரீதியிலும், சுகாதார ரீதியிலும், பாலுறவு என்பது விலையுயர்ந்ததாக ஆகியிருக்கிறது.

விபச்சாரியிடம் செல்லக்கூடிய ஒரு விளிம்பு நிலை தொழிலாளி, ரகசியமாக செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்த்துக்கு உள்ளாகிறார். அதற்கு மேல், அந்த விபச்சாரிக்கு கொடுக்க வேண்டிய பணமும் அதிகம். மூன்றாவது அந்த விபச்சாரி பாலுறவு வியாதிகள் கொண்டவரா இல்லையா என்று அறியாததால், அதில் சுகாதார ரிஸ்கையும் அதற்கான விலையையும் அங்கு செல்பவர் தருகிறார்.

மேலும் விபச்சாரம் சட்டப்பூர்வமானதாக இல்லையென்றால், விபச்சாரி ஒரு தரகரின் கீழ் வருகிறார். தரகர் எடுத்துகொண்ட பணம் போக மிக சொல்பமே விபச்சாரிக்கும் வருகிறது. விபச்சாரி சுகாதார கேட்டில் விழுந்தால் அதற்கான மருத்துவம் செய்துகொள்வதோ அல்லது இலவச மருத்துவ உதவி பெறுவதோ கடினமாகிறது. விபச்சாரி தரகரின் கீழ் அடிமையாக நடத்தப்படுகிறார். விபச்சாரம் சட்டப்பூர்வமாக இல்லாத ஒரு நாட்டில், விபச்சாரிக்கு நடக்கும் வன்முறைகள் சட்டத்தால் அங்கீகரிக்கப்படுவதும் இல்லை. விபச்சாரிகளை தரகர்களே பல நேரங்களில் பாலுறவு பலாத்காரம் செய்கிறார்கள்.

நகரமயமாகும் இந்தியாவில் விபச்சாரத்தை தடுக்க முடியாது. விபச்சாரிகளே இல்லாத நாட்டை உலகத்தில் எங்கேயும் உருவாக்கவும் முடியாது.

ஆனால், விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக ஆக்குவது, பாலுறவு பலாத்காரங்களை குறைக்கிறதா?

இந்த இடத்தில் இருபக்கமும் வாதிட விஷயங்கள் இருக்கின்றன.

கனடாவில் விபச்சாரம் சட்டப்பூர்வமானது.
http://en.wikipedia.org/wiki/Prostitution_in_Canada

ஆனால், அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் (united states of America)அது சட்டத்துக்கு புறம்பானது
http://en.wikipedia.org/wiki/Prostitution_in_the_United_States

மெக்ஸிகோவில் விபச்சாரம் பல மாநிலங்களில் சட்டப்பூர்வமானது. பல மாநிலங்களில் சட்டத்துக்கு புறம்பானது
http://en.wikipedia.org/wiki/Prostitution_in_Mexico

இதனையும் அங்கு இருக்கும் பாலுறவு பலாத்காரங்களையும் கோர்த்து பார்க்க வேண்டுகிறேன்.

இதனால், அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் விபச்சாரத்தை அனுமதிக்க வேண்டும் என்று குரலும் எழுந்திருக்கிறது.
Kirby R. Cundiff, PhD, Associate Professor of Finance at Northeastern State University, wrote the Apr. 8, 2004 working paper entitled “Prostitution and Sex Crimes,” for the Independent Institute, that stated:
“It is estimated that if prostitution were legalized in the United States, the rape rate would decrease by roughly 25% for a decrease of approximately 25,000 rapes per year….

…[T]he analysis seems to support the hypothesis that the rape rate could be lowered if prostitution was more readily available. This would be accomplished in most countries by its legalization.”

நான் இங்கே சொல்வது politically correct அல்ல என்பது எனக்கு தெரியும். ஆனால், இங்கே நோய் நாடி நோய் முதல் நாட வேண்டுமென்றால், மத கண்ணாடிகளையும் ஒழுக்க கண்ணாடிகளையும் கழற்றிவிட்டுத்தான் பார்க்க வேண்டும்.
நான் எழுதிய கருத்துக்களை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,

1. உழைக்கும் மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான ஊதியத்தை அளியுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வாழ தேவையான பணத்தை அளியுங்கள். தகுந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள். அதே வேளையில், சுகாதாரமற்ற, தெருவோர குடிசைகளை அப்புறப்படுத்துங்கள். ஒவ்வொரு தொழிலாளியும் குடும்பத்தினர் என்பதாக கணக்கெடுத்து அவர் குடும்பத்துடன் வாழ வழி செய்யுங்கள். இப்படிப்பட்ட உதிரி தொழிலாளர்கள் தங்க அடுக்குமாடி குடியிருப்புகளை நகரத்தில் கட்டி அவர்கள் மரியாதையுடன் வாழ வழி செய்யுங்கள். ஒரு சிலர் அந்தரங்கமான இடமில்லாமல் பொதுவில் மலஜலம் கழித்தால், அவர்களை தண்டியாமல், அந்த இடத்தில் அந்தரங்கமாக மலஜலம் கழிக்க ஏற்பாடு செய்யுங்கள். எல்லா உணவு விடுதிகளிலும் மலஜலம் கழிக்கும் இடம் சுத்தமாகவும் நிறையவும் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை அமல் படுத்துங்கள். அங்கே யார் வேண்டுமானாலும் சென்று மலஜலம் கழிக்கலாம் என்று சட்டம் கொண்டுவாருங்கள்.

2. விபச்சாரத்தை சட்டப்பூர்வமானதாக அங்கீகரியுங்கள். விபச்சாரம் செய்பவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகளையும் சட்ட ஒழுங்குகளையும் பிரபலப்படுத்துங்கள். பாலுறவு சுகாதாரம் இலவசம் என்று அறிவித்து யார் வேண்டுமானாலும் அனானியாக வந்து சுகாதார வசதியை பெற்றுகொள்ளலாம் என்று அறிவியுங்கள். 18 வயதுக்கு குறைவானவர்கள் விபச்சாரம் செய்யக்கூடாது என்றும், அதில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டால், அப்படி ஈடுபடுத்தியவர்களை கடுமையாகவும் தண்டியுங்கள். விபச்சாரிகள் தங்கள் தொழிலை விளம்பரம் செய்ய அனுமதியுங்கள். இதன் மூலம் தரகர்களை ஒழியுங்கள்.

3. இதன் பின்னர், யாரேனும் பாலுறவு பலாத்காரம் செய்தார் என்று யார் வந்து சொன்னாலும், அது விபச்சார தொழிலில் இருப்பவரே வந்து சொன்னாலும், பதிந்துகொள்ளுங்கள். பாலுறவின் போது வன்முறையில் ஈடுபட்டால், அதனை வன்முறையாகவே பதிந்து தகுந்த தண்டனையை பெற்றுத்தாருங்கள்.

இவைகளே இந்த சமூக நோயை தணிக்கும் வழிகள். இவை நீக்காது. தணிக்கும் என்று கருதுகிறேன்.

 

Series Navigationஅன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்