அந்தக் காலத்தில்

 

எல்லாம் நன்றாக

இருந்த காலத்தில்

 

கைக்குத்தல் அரிசிதான்

கைத்தறித் துணிதான்

 

கட்டை மாட்டு வண்டி

காத்துக்குப் பனை ஓலை

விசிறி

 

தொலைபேசி திரைப்படம்

தொலை நோக்கி விமானம்

பேனா குண்டூசி

எதுவுமில்லை

 

விதவைக்கான இருளைக்

கண்டு பெண்கள்

உடன் கட்டை ஏறி

எரிந்து மறைந்தார்கள்

 

மனைவி இறந்தால்

பன்னிரண்டு வயதில்

மணப்பெண் உண்டு

விதவனுக்கு

 

புகைப்படம் எடுப்போருக்கு

அடுப்புக்கரி ரசயானக்

கலவையை

 

ஆகாய விமான

ஆராய்ச்சிக்கு உதவியாக

புஷ்பக விமானத்தின்

பௌதிகக் கணிதங்களை

 

எபோலா வைரஸுக்கான

மருந்தை

 

செவ்வாய் கிரகத்துக்குக்

காத்தாடி விடும்

வித்தையை

எல்லாம்

பனை ஓலைகளில்

எழுதி வைத்துப்

புதைத்து விட்டார்கள்

 

புதையல் கிடைத்தால்

மின்னஞ்சல் அனுப்புக

 

நம் இருவருக்கும்

உறுதி

முனைவர் பட்டம்

Series Navigationமே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழாவயசு