அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’

Spread the love

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி (27.10.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு EPPING MEMORIAL HALL (827  HIGH STREET, EPPING, VIC 3076 – Melway :-  182 B10 ) இல் நடைபெறும். விழாவில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி, கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘மறுவளம்’ நூல் வெளியீடு, ‘வண்ணம்’ வெளியீட்டாளர் சிவா முனியப்பன் அவர்களின் ’ஒன்லைன் புத்தகங்கள் & ஒலிவடிவப்புத்தகங்கள்’ பற்றிய ஒரு கலந்துரையாடல், ‘பாரதம் தந்த பரிசு’,  ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’, ’ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்’ நூல்கள் அறிமுகம். ’பாலகாத்தான்’ (காத்தவராயன்)கூத்து மற்றும் கானமழை (இன்னிசை நிகழ்ச்சி) என்பவை இடம்பெறும்.

அன்று நடைபெறும் ’அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சியில்’ உங்கள் புத்தகங்களும் இடம்பெறவேண்டுமாயின் – நீங்கள் புலம்பெயர்ந்த்தன் பிற்பாடு எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களின் பிரதி ஒன்றை அனுப்பி வைக்கலாம். இந்தப்புத்தகங்கள் மீள உங்களுக்கு கையளிக்கப்படமாட்டாது. அவ்வப்போது நடைபெறும் புத்தகக்கண்காட்சிகளில் அவை காட்சிப்படுத்தப்படும். தொடர்புகளுக்கு

தலைவர் – சு.ஸ்ரீகந்தராஜா (03)94651319 / 0478060366

செயலாளர் – கே.எஸ்.சுதாகர் (03)83618265 / 0431038728

மின்னஞ்சல் முகவரி –  atlas2001@live.com.

Series Navigationஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.