ஆசை

ஆசை இல்லா உலகம்
புத்தனின் ஆசை

கடிவாளமில்லா கடிவாளம்
போகஸ் இல்லா போகஸ்
எனது ஆசை.

பாசத்திலிருந்து ஆபாசம்
ஆபாசத்திலிருந்து பாசம்
காதலர்களின் ஆசை.

உலகம் வேண்டும்
அலெக்சாண்டர் ஆசை
வியாபாரம் வேண்டும்
ஆப்பிள் ஸ்டீவ் ஆசை.

எல்லாம் அடைந்த இவர்கள்
வாழவில்லை!
எல்லாம் இழந்த புத்தன்
இன்றும் வாழ்கிறான்.

ஆடை துறந்தால் இன்பம்
ஆசை துறந்தால் பேரின்பம்

Sridhar.
China

Series Navigationஏன் பிரிந்தாள்?திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்