ஆணோ பெண்ணோ உயிரே பெரிது

     பாலியல் வன்முறைகள் எதனால் என்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.கடும்தண்டனைகள் அவற்றை வெகுவாக குறைத்து விடும் என்ற வாதமும் பலரால் வைக்கபடுகிறது .கடும் தண்டனை வழங்கப்படும்  நாடுகளில்  பெண்களின் நிலை மிகமோசமாக ,அடிமைகளின் நிலையை ஒத்திருப்பதையும்,மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாடுகளில் பெண்கள் தைரியமாக பல்வேறு வேலைகளில் பணிபுரிவதையும்,அவர்கள் விருப்பத்திற்கேற்ப வாழும் நிலையை கண்கூடாக பார்க்கும் போது இந்த வாதத்தின் அர்த்தமற்ற தன்மை தெளிவாக தெரிகிறது.
    டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு அதன் கொடூரத்தால் தன உயிரையும் இழந்த பெண்ணின் உடன் இருந்த தோழர் வெளிநோயாளியாக தான் வைத்தியம் பார்க்கப்பட்டார்.அவருக்கு காயங்கள் வெகு குறைவு.இதே போல மக்களின் கவனத்தை  ஈர்த்த மும்பையில் நடந்த பாலியல் வன்முறையில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண் சில நாட்களுக்குள் முற்றிலும் குணம் அடைந்து மறுபடியும் வேலைக்கு திரும்பி உள்ளார்.அவரை வன்முறைக்கு உட்படுத்திய குற்றவாளிகள் அதே இடத்தில பலரை வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்திகள் வர துவங்கியுள்ளன

டெல்லியில் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் குற்றவாளிகளின்  பாலியல் இச்சைகளுக்கு/விருப்பத்திற்கு எதிராக தீவிரமாக போராடியதால் தான் உயிரை இழக்கும் அளவிற்கு வன்முறைக்கு ஆளாகி  இருக்கிறார்.
இதற்கு முன் அந்த கும்பல் ஒரு ஆணை பணத்தை பிடுங்கி கொண்டு கீழே தள்ளி இருக்கிறது.நம்மில் 100இல் 99 பேர் உயிருக்கு பயந்து இருப்பதை எல்லாம் கொடுத்து விட தயங்க மாட்டோம்.ஒட்டு துணி  கூட விடாமல் அனைத்தையும் பிடுங்கி கொண்டாலும் உயிர் பிழைத்ததே மகிழ்ச்சி என்று ஓடி வந்து விடுவோம்.
காவல்காரர் நண்பர்களோடு இருக்குமிடத்தில் போதை மருந்து விற்கபடுகிறது,rave  பார்ட்டி நடக்கிறது என்ற சந்தேகத்தில் கைது செய்து சந்தேக வழக்கில் கூட்டி சென்று காவல் நிலையத்தில் நிர்வாணமாக நிற்க வைத்து கேள்வி கேட்டாலும் ,அடித்து உதைத்தாலும் விட்டு விட்டால் மகிழ்ச்சி தான்.அதனால் மாறாத ரணம் எனபது ஆண்களுக்கு கிடையாது.
பல லட்சக்கணக்கான ஆண்கள் காவல்துறையினரால் ஆணுறுப்புகளில் மின்சாரம் பாய வைக்கப்பட்டு துன்புருத்தபட்டிருக்கிரார்கள்.நிர்வாணமாக நாள் கணக்கில் அடி,உதைகள் வாங்கி இருக்கிறார்கள்.ஆசன வாயில் லத்தியை வைத்து குத்தப்பட்டு கேள்வி கேட்க்கபட்டிருக்கிரார்கள்.

அவர்களில்  லட்சத்தில் ஒருவர்,இருவரை தவிர்த்து யாரும் அதை நினைத்து ,மாறாத ரணம் ஏற்பட்டு விட்டது,என் கற்பை இழந்து விட்டேன்,திருமண வாழ்க்கைக்கான தகுதியை இழந்து விட்டேன் என்று வருந்துவது கிடையாது.
ஆனால் பெண்கள் மட்டும் பெரிய இழப்பை சந்தித்தது போல ஆணாதிக்க சமூகத்தால் பார்க்கும் நிலையில் வைக்கபட்டிருக்கிறார்கள்.என்னை நாலு பேர் கட்டி போட்டு ,அடி அடி என்று அடித்தாலும்,ஆசன வாயில் கட்டையை விட்டு குத்தினாலும் உயிரோடு தப்பித்தால் பெரும் மகிழ்ச்சி தான்.காயங்கள் ஆறிய பிறகு சில நாளில் பழைய நிலைக்கு திரும்புவதற்கு பெரிய மன தடைகள் கிடையாது.
என் மகள்கள்,மனைவி,தாய்,பெண்,ஆண் நண்பர்கள் அனைவருக்கும் சொல்வது இது தான். மானமாவது ,மயிராவது,உயிர் தான் முக்கியம்,ரொம்ப ரொம்ப முக்கியம்.திருடர்கள் மிரட்டும் போது நகைகளை கழட்டி கொடுப்பது எப்படி புத்திசாலித்தனமோ,அதே போல எதிர்ப்பில்லாமல்  எல்லா வன்முறைகளையும் தாங்கி கொண்டு உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்.,காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்.உயிரை விட முக்கியமானது ஒன்றும் கிடையாது.ஏதோ இழந்து விட்டோம் என்ற நினைப்பு மிக பெரிய தவறு.
எனக்கு என் குடும்பத்தவரின்,நண்பர்களின்  உயிர் தான் முக்கியம்.உயிரை இழந்தாவது  மானத்தை காப்பற்றி கொள்ள வேண்டும் என்று எண்ணுவதை விட  முட்டாள்தனம் கிடையாது என்பதை தான் வலியுறுத்துவேன்.
இது வன்முறை நிறைந்த உலகம்.இங்கு ஆண் சந்திக்கும் வன்முறைகளுக்கு குறைவு கிடையாது.அவனுக்கு கற்பு,பயிர்ப்பு  ஒன்றும் கிடையாது என்பதால் அவன் அவன் மேல் விழும் வன்முறைகளை எளிதாக தாண்டி செல்கிறான்.அதே மனநிலையை பெண்களும் வளர்த்து கொள்ள வேண்டும்
கல்லூரியில் ராக்கிங் போது உடைகளை கழட்டு
என்று மிரட்டப்படும் போது மிகவும் தயங்கும்,அழுது கெஞ்சி,மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மாணவன் தான்  ,மன,உடல் ரீதியான  அதிக ராக்கிங்கிர்க்கு உள்ளாக்கபடுபவன்.சொல்லி முடிக்கும் முன்பே இந்தாடா என்று உடைகளை கழற்றி எறிபவன் தப்பிப்பது எளிது.
தன்னை காயபடுத்திய காவலர்களையோ,கயவர்களையோ,காமுகர்களையோ பழிவாங்க,சட்டத்தின் முன் தண்டனை பெற செய்ய கூட உயிர் முக்கியம்.பெண் என்பதால் இழக்க கூடாத ஒன்று இருக்கிறது ,அதை இழப்பதை விட உயிரை விடுவது மேல் என்ற எண்ணத்தை பெண்கள் கைவிடும் போது அவர்களை பார்த்து பயம் வர,குற்றங்கள் குறைய வாய்ப்புகள் அதிகம்.
உயிரை விட பெரியது  ஒன்றும் கிடையாது.அதை கொண்டு சாதிக்க முடியாதது என்றும் எதுவும் கிடையாது.
Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 45 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சுதந்திரமாய் நீயும் நானும் .. !கண்ணீர் அஞ்சலிகளின் கதை