ஆப்பிள் பெருநகரில் – 1 – கால் சராய் அணியாத பயணிகள்


ஆப்பிள் பெருநகர். பெரிய ஆப்பிள் என்று அழைக்கப் படும் நியு யார்க். ஒரிஜினல் தூங்கா நகரம். காலை இரவு என்று வேறுபாடில்லாமல் விளக்குகள் ஒளிர, மக்கள் நகரும் நகரம். சப்வே என்று அழைக்கப் படும் பாதாள ரெயில்கள். பாதாள என்பது வெறும் பெயரளவில் தான். தனக்கென்றே அமைந்த பாலங்களில் மேற்பரப்பிலும் நகரும் மின்வண்டிகள். இது ஒரு தனி உலகம். இரண்டே கால் டாலரில் நியு யார்க் நகரமெங்கும் சென்று வரலாம். பெருநகரங்களின் வெளியே இருப்பவர்களுக்கு அமெரிக்காவில் கார் தான் சின்ன வீடு. என்றால் பாதி வாழ்க்கை காரில்தான் என்பதால் காரே இரண்டாவது உறைவிடமாகி விடுகிறது. பெருநகரில் இருப்பவர்களுக்கு சப்வே தான் இரண்டாவது உறைவிடம். எல்லா மொழிகளும் பழகி வரும் நியு யார்க் சப்வேயில் பலதரப்பட்ட இசைக்கருவிகள் ஒரே பொழுதில் இசைக்கப்பட்டது போல மொழியின் ஜலதரங்க இசை கேட்கும்.

நியு யார்க் மக்கள் எதைக் கண்டும் வியப்படைவதில்லை என்று சொல்வார்கள். எல்லா தரப்பு மக்களும், எல்லா உடை மாற்றங்களும் கொண்டு பார்த்துப் பழகிவிட்ட மக்களை அதிர்ச்சி அடையச் செய்வது சாத்தியமேயில்லை. அதனால் தான் வேற்று கிரக மக்களை மையப் படுத்தி எடுக்கப் படும் திரைப் படங்கள் பலவும் நியு யார்க்கை மையப் படுத்தியவை. சமீபத்தில் வந்த “மென் இன் ப்ளாக் ” படங்களிலும் நியு யார்க் தான் நிலைகளன்.

சப்வே பயணிகள் இலையுதிர்காலத்தின் தொடக்கத்தைக் கொண்டாட தேர்ந்தெடுத்த வழியும் விநோதமானதாகவே இருந்தது. கால் சராய் அணியாமல் வெறும் உள்ளாடையுடன் பயணிகள் சப்வேயில் பயணித்தது பார்க்க விநோதமாக இருந்தது.

Series Navigationஒரு உண்ணாவிரத மேடையில்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)