இங்கே..

.

பொய்கள் எல்லாம்
மெய்யென்று
மேடையேறி நடிப்பதாய்..
புரியாத வாக்குறுதிகள்
புதிதுபுதிதாய்
அரசமைத்திட ஆதாரமாய்..
ஏமாற்றுதல் என்பது
ஏகமனதாய்
ஏற்றுக்கொண்ட கொள்கையாய்..
ஏணிகளை எட்டி உதைப்பது
என்றும் காணும் காட்சியாய்..
சுரண்டல் என்பது
சுதந்திரத்தின் ஒரு பாகமாய்..
சூழ்ச்சியுடன்
காலை வாருதல்
கைவந்த கலையாய்..
எல்லாம் நடப்பது
இங்கே அரசியலில்தான்…!

-செண்பக ஜெகதீசன்…

Series Navigationஅதில்.குடை ரிப்பேரும் அரசியல் கைதும்