இப்படியும்… பேசலாம்…..!

உலகம்
என்பது
என்னுள்
சுழல்வது….
——————————-

என்னை …
அறியவா…
எனக்கு இந்தப்
பிறவி..!

——————————
இந்த உடல் ..
வாடகை வீடு…
காலியாகி விடும்…….!
உயிரே…புரிந்துகொள்..
இப்படிக்கு….
ஆன்மா..!

———————————-
விதை தரும்….
விருக்ஷமும்…
மண்ணுக்குள்
அன்று….
விதையாகத்
தான்..!
——————————————–
கைப்பிடி ….
மூளைக்குள்
அனந்தகோடி
அறைகள்…!
——————————–
அளவில்லாததை….
“இதயம்”
என அளந்து…
வைத்தான்.!
———————————–
பூஜ்ஜியமும்
இல்லை
ராஜ்ஜியமும்
இல்லை…
எதற்கு எல்லை..?
————————————–
ஒன்றும்
இல்லாத
பரவெளிக்கு……?
பந்தல் எதற்கு…!
பகட்டு எதற்கு..?
——————————————
எங்கும்…..
நான்…..!
எங்கும்…
நீ..!
யாரங்கே…?
கடவுளா..!!!
——————————————-
மௌனத்திற்கு
மொழி
எதற்கு..
மொழியே
மௌனமான போது…!
————————————————–
காற்றில்….
கதவு தான் சாற்றியது….!
ஜன்னல்…. தானே,…
திறந்து கொண்டது..!
———————————————————
வாசல் முன்னே….
யார்…வரவுக்கெனக்…
காத்திருந்தது..
கோலம்,,!
—————————————————–
பட்டம்…வாலோடு..
பறந்தது….!
நூலையும்…
இழுத்துக்கொண்டு ..!
—————————————————-
ஆர்ப்பரிக்கும்…
கொந்தளிக்கும்…
நீலக் கடல்….
அடித்தளத்தில்…
மகாமௌனம்…..!
மனித மனங்கள்..!
—————————————————–
காலையில்…அவளது
பின்னலோடு சேர்ந்து
சிரித்தது..ரோஜா…!
மாலையில்…?
கதிரோடும்…காற்றோடும்..
சதிராடி..சருகானது..!
—————————————————-
சந்தையில் விற்காத
பானைகள்…!
எழுத்தைத்
தாங்கத் துடிக்கும்..
காகிதங்கள்…!
முகவரி தேடும்..
முதிர் கன்னிகள்..!
———————————————————–
எண்ணமும்….
பேனாவும்..
இசைய…
கவிதை …
பிரசவம்..!
——————————————————–
மீனுக்குப் பொரி…!
வாலைமீன்களே ..!
வலைகள்…விழும்..
ஜாக்கிரதை….!
—————————————————-
கண்பார்வை…..
இருந்தால் தான்
கண்ணாடியும் …
பேசும்..!
———————————————————
மேடு….பள்ளங்கள்
இருந்தாலும்..
வாழ்க்கைப்
பயணம்
தொடரும்..!
———————————————
நானே..பல….
உருவங்களில்…..
இதில் எது…நான்…
எதில்….நான்…?
காலத்தின் கோலமாகப்..
புகைப்படங்கள்…!
—————————————————-
நிலம்
காத்திருந்தது…
மேகமும்
காத்திருந்தது..!
மரமும்
காத்திருந்தது…!
மழைக்காக…!
——————————————————-
பெட்டியைத் திறந்தபோது..
கண் சிமிட்டி அழைத்தன
வண்ணக் கற்கள்….
அள்ளிக்கொள்…அப்படியே..
பெருங்கூச்சல்…..!
பெரும்பொருள் உலகமிது…!
ஆசை காட்டி அழைத்தது…
தொடாமல்….மனதை..
அழுத்தி சாத்தினேன்….!
அமைதி மனதை.. நிறைந்தது…!
——————————————————
ஜெயஸ்ரீ ஷங்கர்.

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -58)முன்னணியின் பின்னணிகள் – 24