இயலாமை

Spread the love

தூங்க ஆரம்பித்த ஒரு மழை ஞாயிற்றுக்கிழமையின்
பின்னிரவு பொழுதில் மூன்றாம்
வீட்டிலிருந்து ஏதோ அலறல் சத்தம்
ஜன்னலை திறந்து அலறலை உற்றுக்கேட்டால்
யாருக்கோ மோசமான உடல்நிலை
திங்கள்கிழமை வேலைப்பளு நினைவுக்கு வர
ஜன்னலை சாத்தி போர்வையை
இழுத்துப்போர்த்தி நல்ல தூக்கம்
ரெண்டு நாளாச்சு
அவருக்கு என்ன ஆச்சு
யாரவது சொன்னால் தேவலை.

**********
அ.லெட்சுமணன்

Series Navigationநிலத்தடி நெருடல்கள்நெகட்டிவ்கள் சேமிக்கப்படும்