இராத்திரியின் சக்கரங்கள்

இன்று, இப்பொழுது, இங்கு

இயந்திரத்தின் மனசாட்சி ஒன்றை

ஒளியில் ஒட்டி

எனக்கு முன் வைத்தது

மின்னணுக்களின் அசுரப் பயணங்கள்

 

அதை

அழுது தீர்த்திராத இந்த இரவின் தனிமையிலிருந்தவாறு

என்னுடனே வந்து கொண்டிருக்கும்

இருளிற்கு பரிசளித்தபடி

யாத்திரைகள் நீடிக்கின்றன

 

வேகமாகச் சுழலும் இரு சக்கரங்களை

எனது கட்டுப்பாட்டில்

வைத்திருக்கிறேன்

 

பாதுகாவலற்ற

மனதின் இன்பத்தையும்

இனம் புரியாததொரு பயத்தையும்

இந்த இரவிற்கு வரமெனக் கொடுத்தது யார்..?

 

பார்வையற்றிருக்குமிந்த

கொடூர இராத்திரியின் சக்கரங்கள்

ஓய்வற்று சுழல்கின்றன …

***

கலாசுரன்

Series Navigationநம்பிக்கை ஒளி! (8)பாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை