உறையூர் தேவதைகள்.

Spread the love

தினம் தினம் தேடப்படும் நினைவுகளின்

வழியே ஊடுருவிசெல்லும் பார்வைகள்
அவளுடயதாகின் நேரங்கள் பார்வைக்கு
சற்று அப்பாற்பட்டவையாக தோன்றுகின்றன.

கரையும் நேரங்களின் கடைசி துளியின் ஓரத்தில்

தேடப்படும் அவளின் முகங்கள் ஓவியதீட்டை
போலவே இருக்கின்றன கனவா எனும் சொல்லை
கூட யோசிக்க நேரமில்லாமல் அவளை பார்கிறேன்
மெய்மறப்பது என்பது இதுதானோ.,


அவள் அருகில் இருப்பதாக பெறப்படும் கற்பனையே
அன்றி இது வேறு என்னவாக இருக்ககூடும்.
இருப்பினும் பார்வைகள் அடிக்கடி அவளை
நோக்கியே செல்லும் இது விசித்திரமான நோயாக
இருக்க கூடாதென்பதற்காகவே  அவளை
பார்க்க வேண்டிஇருக்கிறது,

இலக்கணப்பிழை ஏதும் இன்றி படைக்கப்பட்ட பொருளை
பார்ப்பது அரிது எனில் அவள் அரிதாக இருக்க கூடும்.
என்பதற்காக மட்டும் அவளை நோக்குவதில் இருந்து,
மனதில் எழும் பட்டாம்பூச்சிகள் அனுமதி எதுவும்
வாங்காமல் பறக்கின்றன ., 

தரிசனம் என்பது கோவில்களில் கானப்படுபவையாகின்
அது நிதர்சனமான உண்மை.தேவதைகள் கோவில்களில்
மட்டுமே உலாவருகிறார்கள்.திரும்பிபார்க்கும்
நேரங்களை தவிர்த்து வீட்டிக்கு செல்ல மனம்
ஒருகணம் யோசிக்கிறது காரணம் வயது என்கிறார்கள்.

நண்பர்கள் அருகில் இருக்கும் களங்களில் தங்களின்
பார்வைகளை தேவதைகள் வீசிசெல்லும் போது
நண்பர்கள் மேல் ஏற்படும் உணர்ச்சி பொறாமை
என்பதை சொல்லவேண்டுமா.

கடைசியாக சொல்ல விரும்புவது  ஒன்றே

எக்காலத்திலும் பெண்கள் தேவதைகளாகவே
இருக்க விரும்புகிறார்கள்,
ஆண்களின் நிலை கேள்விக்குறிகளால் …….

சி ஹரிஹரன்

Series Navigationசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி