எங்கிலும் அவன் …


எங்கிலும் அவன் ஒளிந்தே இருக்கிறான்

காலை பொழுதின் கதிரினூடே கிளம்பி
மாலை மயங்கியும் கூட
அவனின் உறக்கங்கள் துவக்கபடவேயில்லை
அடர் வனங்களின் தருவின் இடுக்குகளில்
வீழ்ந்து கிடந்த இலையொன்று
கதைத்து கரைத்தது அவனின் எண்ணற்ற
வெற்றி பொழுதுகளை
சுழன்றடித்த பெருங்காற்று
கிளப்பியது எரிந்து போன சாம்பல் நினைவுகளை
பெருந்தீவின் பாரமென
ஒளிந்து நின்ற பெருங்கனவின்
சார்பை ஒத்தே இருந்தன அந்த
இலையின் ஒரு புறம் ..
மறு புறமோ  எங்கோ வழக்கொழிந்த அவன்
ஒட்டிக்கொண்டு இருக்கிறான்..
மரணமென !…..
ஷம்மி முத்துவேல்
Series Navigationமாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழாமுன்னறிவிப்பு