எதிர்பதம்

வெறுக்கப்பட்ட அத்தியாயங்களின் வழியே
ஊடுருவும் ஒரு வெறுப்பு இன்றைய பொழுதினை
நிலைகொள்ளாமல் செய்யும் வலிமை கொண்டது.

மேலெழும் உவர்ப்பின் சுவையை ருசிபார்க்க
ஆவல் கொள்கிறது கண்கள்,காரணம் அறிந்த
மனமும் அதி தீவிரமாய் எதையெதையோ,

மற்றவர்கள் சுடும் சொற்களுக்கு இடையே
அமைதியாய் நகர்கிறது நாட்கள் ,இடையேனும்
நற்செய்தி கிடைக்குமா என்று செவிப்பறைகள்
தங்களின் கூர்மையை சோதித்து கொள்கின்றன.

எதிர்பார்ப்பின் தீவிரம் தன் இருப்பை ஒரு
பொழுதேனும் மாற்ற முயற்சிக்கிறது ,
விடைகள் அனைத்தும் ஏமாற்றம் எனும்
முடிவை மட்டுமே தருவதால் அப்படியே.

இருப்பினும் வேட்கையின் தீவிரம் இனி
வரும் காலங்களில் வெளிப்படும் பொழுது
அனைத்தும் தூள் தூளாக்கப்படும் அந்நேரம்
என் தோல்விகள் அனைத்தும் வெட்கி தலைகுனியும்.,

அந்நேரம் நான் என் தன்னம்பிக்கையோடு
விளையாடிக்கொண்டிருப்பேன் என்பதில் ஐயமில்லை.

– ச.ஹரிஹரன்.

Series Navigationபேசும் படங்கள் – பிரிஸ்பேன் ஆஸ்திரேலியாகதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்