எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

மாணவர்களின் பெயர், எந்த மாநிலம், அவர்களுடைய சொந்த முகவரி, தொலைபேசி எண்கள், எந்த பாடப்பிரிவுகளில் படிக்கின்றனர், கல்லூரி விடுதியில் தங்கியிருக்கின்றனரா, வெளியில் தங்கியிருக்கின்றனரா, அப்படி வெளியில் தங்கும் மாணவர்கள் என்றால், அவர்களுடைய செயல்பாடுகள் என்னென்ன, அவர்கள், யார், யாரை சந்திக்கின்றனர், கல்லூரிகளில் வெளி
மாநில மாணவர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரிக்க உத்தரவு உள்ளது. விவரங்களுடன், மாணவர்களின் புகைப்படங்களும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கென புகைப்படம் எடுத்தால், மாணவர்கள் மத்தியில் பிரச்னை ஏற்படும் என்பதால், ஆவணங்களில் உள்ள புகைப்படங்களை நகல் எடுத்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தினமலரில் வெளிவந்திருக்கும் செய்தி.

இந்தியா என்ன சீனா ஆகிவருகிறதா? அங்கே தான் ஒரு மானிலத்தில் இருப்பவர்கள் இன்னொரு மானிலத்திற்குப் போக வேண்டுமென்றால் யதேச்சாதிகார கம்யூனிஸ்ட் கட்சி வாசலில் போய் நின்று லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்க வேண்டும்.

குற்றம் புரிந்தவனைத் தேடுங்கள் என்றால் குற்றம் புரிந்தவனின் ஜாதி குலம் கோத்திரம் மானிலம் என்று முத்திரை குத்தி குற்றப் பரம்பரைச் சட்டத்தை மறு பிறப்பு எடுக்க வைக்கிறார்களா இந்த புத்திசாலிகள்?

இது மாதிரி பைத்தியக்காரத்தனம் செய்ய யாருக்கு யோசனை வந்திருக்கும். மதுரைக் காரர் திருச்சியில் படித்தால், அவர் குற்றம் செய்தால், திருச்சியில் படிக்கும் மதுரைக் காரர்களைப் பற்றி சென்சஸ் எடுப்பார்களா?

****

Series Navigationஜென் ஒரு புரிதல்- பகுதி 33பூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் அணு உலைக் கதிரியக்கக் கழிவுகள்