எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

 

எஸ்ராமகிருஷ்ணனுக்கு விருது கிடைத்ததற்காக பாராட்டு விழாவில் தமிழகக்த்தின் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டார். பெருமைக்குரிய விஷயம் தான் இது. எழுத்தாளனுக்கு இப்படி ஒரு கௌரவம் தமிழ் நாட்டில் என்ன தவம் செய்தனை என்று பாடலாம்.

ஆனால் அந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஞானசம்பந்தம் இன்ன பிற பிரபலங்கள் எஸ் ராமகிருஷ்ணன் படைப்பை ஆழப் படித்து ஆய்வு செய்து பெருமை கொண்டாட வந்தார்களா அல்லது சூப்பர் ஸ்டாரின் அருகாமையில் நானும் இருக்கிஏன் என்று ஆஜர் கொடுக்க வந்தார்களா?

ஏனென்றால் இவர்களில் பலரும் ரஜனியின் திறமைகளைப் பாராட்டிப் பேசினார்களே தவிர எஸ் ராமகிருஷ்ணனைப் போனால் போகிறது என்று தொட்டுக்கொண்டார்களே அது ஏன்?

ஆக பாராட்டு விழா எஸ் ராமகிருஷ்ணனுக்கா அல்லது ரஜனிக்கா?

**

நாற்பது வருஷமாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் வெங்கட் சாமிநாதனின் எழுத்துலகப் பங்களிப்பை பாராடி எடுத்த விழாவிற்கு சரி ரஜனி தான் வரவில்லை, ஒரு நாற்பது பேர் கூட வரவில்லையே அது ஏன்?

*****

Series Navigationவரலாற்றை இழந்துவரும் சென்னைஅணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள்