என்னவென்று அழைப்பது ?

எழுதியவன்
தமது குறைகள் எதையும்
சொல்ல விழையாத
நாட்குறிப்பு போல
உன் பேச்சு இன்று
செயற்கையாக இருக்கிறது

பலநாட்கள் தூசி
படிந்து திடீரெனப்பெய்த
மழையில் கழுவிவிடப்பட்ட
இலைகள் போல
உன் பேச்சு இன்று
இயற்கையாக இருக்கிறது.

நாட்குறிப்பின் பக்கங்கள்
போலிருக்கும் இலைகளை
அந்த மரம் உதிர்த்து விடும்
பொழுது உன்னிலையை
என்னவென்று அழைப்பது ?

– சின்னப்பய

Series Navigationபேனா பேசிடும்…”கீரை வாங்கலியோ…கீராய்…!”