எல்லார் இதயங்களிலும்

கர்ப்பிணிக்கான
சிறப்பு இருக்கையில்
அந்த மனிதர்

நின்று கொண்டிருந்த
கர்ப்பிணி கேட்டார்
‘இது கர்ப்பிணிக்கான இருக்கை
அமரவிடும் என்னை’

அவர் ‘மன்னிக்க வேண்டு’ மென்றார்
மரியாதையாய் நின்றார்

பிறவிக் குருடர் அவரென்று
நின்றபின்தான் தெரிந்தது

‘முந்நூறு நாள்தான் கரு வாழ்க்கை
உங்களுக்கோ
மொத்த நாளும் இருள் வாழ்க்கை
அமரும் அருகதை உங்களுக்கே’
என்று\ கர்ப்பிணி எழுந்தார்

கர்ப்பிணிக்காக
எல்லாரும் இடம் தர
அமர்ந்து கொண்டார் அவர்
எல்லார் இதயங்களிலும்

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationகவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதுஇருள்