ஒத்திகைகள்

 

 

தூக்கம் கலையாத

குழந்தையை அம்மா

சீருடை மாட்டி

பள்ளிக்கு இழுத்துப் போகிறாள்

 

நாளை

ஊடக அதிர்வுகள்

அடங்காமல்

சாலை நெருக்கடியில்

புகுந்து புறப்பட்டு

பணியிட பரப்பரப்பை

நோக்கி விரைய

இது ஒத்திகை

 

வேட்கை வேட்டை

துரத்தல் வீழ்த்தல் வழி

வெற்றிக்கு விதைகளாய்

கல்வி வளாக

அடக்குமுறை மிரட்டல் வசவு

தண்டனை

 

தேடும் போது வெளிப்படும் கூர் நகம்

ஒலியில்லாமல் கிழிக்காமல்

ஊடுருவி

உருக்குலைக்கும் நுண் ஆயுதம்

எது தான் சாத்தியமில்லை

இணைய வெளியில்?

 

மாலை மங்குகிறது

வீடு சேர்க்கும் ஊர்திக்காய்

காத்திருக்கும் பெண் குழந்தை

கவலையின்றி விளையாடும்

ஆண்பிள்ளைகளை அவதானிக்கிறாள்

மௌனமாய்

Series Navigation“நியாயம்”“ஒரு வார்த்தை ஒரு லட்சம்”