ஓய்வும் பயணமும்.

நடைப்பாதைப் பயணத்தில்
வெள்ளையடிக்கப்பட்ட மதகடியில்
ஓய்ந்தமர்ந்தேன்.

கரண்டுக் கம்பங்களில் காக்கையும்
மதகடி நீரில் கொக்கும்
வயல் வரப்புக்களில் நாரையும்

நெத்திலிகள் நெளிந்தோட
குட்டிச் சோலையாய்
விளைந்து கிடந்தது வாய்க்கால்.

தேன்சிட்டும் மைனாவும்
ரெட்டை வால் குருவியும்
குயிலோடு போட்டியிட்டு

தட்டாரப்பூச்சிகளும்
வண்ணாத்திப் பூச்சிகளுமாய்
நிரம்பிக்கிடந்தது மாமரம்.

மஞ்சள் வெயில் குடித்து
பச்சை இலையாய்த்
துளிர்த்துக் கிடந்தது நிலம்.

நெடுஞ்சாலை அரக்கனாக
ஒற்றை லாரி என்னைப்
புகையடித்துக் கடந்து செல்ல

அள்ளியணைத்த அனைத்தையும்
அனாதையாய்ப் போட்டுவிட்டு
பயணத்தைத் தொடங்கினேன்.

சரளைக் கற்களும்
கருவை முட்களும்
தொடர்ந்து பயணப்பட.

Series Navigationதகுதியுள்ளது..அமுத பாரதியும் நானும் சிறகு இரவிச்சந்திரன்