கடந்து செல்லுதல்

Spread the love

சத்யானந்தன்

எப்போதோ அமையும்
மலைவாசம்
அப்போது மட்டும் அனுபவமாகும்
கடந்து செல்லும் மேகம்
குளிர்ந்ததாய்

வெப்பமாய்
பதின்களில்
கடந்து சென்றது
நாம் காதல் என்று
பெயரிட்டது

மாதக் கணக்கில்
உன் மௌனங்களை
நான்
கடந்து சென்றேன்

நீ வருடங்கள் தாண்டி
மௌனம்
கலைத்த போது
காலம்
கடந்து சென்றிருந்தது

நம்மூர்
பெரிய ஏரியின்
தெள்ளிய நீரில்
வடிவம் மாறி மாறிக்
கடந்து செல்லும்
மேகங்களின் பிம்பங்கள்

ரசனை இயலாமற் போனாலென்ன?
அங்கே குடியிருக்கும்
தவளைகளும்
மீன்களும்

Series Navigationஅழகின் விளிப்புஎன் பெயர் அழகர்சாமி