கல்லடி

 

 

அதிக நேரமொன்றும்

வித்தியாசமில்லை

வாய்க்காலிலிருந்து தவளை

வரப்பில் குதித்தது

மீண்டும் வாய்க்காலில்

 

பச்சோந்தி

மரமத்தியிலிருந்து

புல்லுக்குத் தாவி

பச்சையானது

 

அதிரும் காலடிச் சத்தம்

கேட்டதும்

ஆமை

ஓட்டுக்கு உள்ளே

ஒளிந்தது

 

வேட்டுச் சத்தம்

கேட்டதும்

யானைகள்

ஓடி

இடம் பெயர்ந்தன

 

கிரகணத்தில்

சூரியன்

மறைந்ததும் பறவைகள்

மரங்களுள்

தஞ்சமடைந்தன

 

இதில்

எதையுமே

பார்த்ததில்லை போலும்

அவன்

 

மூர்க்கத்துடன்

எறிந்தான்

என் மீது

முதல் கல்லை

 

பிறகென்ன?

நான் ரணமாகி

வீழ்ந்த பின்னும்

நிற்கவில்லை

கல்வீச்சு

 

சத்யானந்தன்

 

Series Navigationமகன்வினையா? அதன்வினையா?ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்”