கவிதை

எச்சத்தாற்காணப்படும்

உட்கார
உறங்க
களிக்க
இசை பாட
கூடு கட்ட
முட்டையிட்டு
குஞ்சு பொரிக்க
உணவுகொடுத்து
பசியாற்றிய
மரம்,
விழுங்கிய
பழத்தின்
விதையை
பிறிதொரு இடத்தில்
எச்சம் வழி
ஊன்றச்செய்த
பறவை.

—————-

உருப்படியான கவிதை

சலவைக்குச்சென்று
திரும்பிய துணிகளில்
போடாத என்
உருப்படியைத்தேடுவது போல
இதழ்களுக்கு அனுப்பாத
என் கவிதைகளை
அதன் பக்கங்களில்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

— சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 15கால காலன் “நெருஞ்சி” கவிதைத் தொகுதி எனது பார்வையில்