காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் – புதிய பரிமாணங்கள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்

Spread the love

அன்புடையீர் வணக்கம்கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் நம் கம்பன் கழகத்தின் வழியாக மீண்டும் நாம் அனைவரும் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 4,5,6 ஆகிய நாட்களில் காரைக்குடியிலும், 7ஆம் நாள் நாட்டரசன் கோட்டையில் வழக்கம் போல்கம்பன் திருவிழா நடைபெற உள்ளது. இந்நாட்களில் 5 ஆம் தேதி அன்று ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பெற்றுள்ளது. அவ்வறிப்பின் திருந்திய வடிவம் இதனுடன் இணைத்துள்ளோம். தாங்கள் கட்டுரை தந்து நான்கு நாட்களும் கலந்து கொண்டுச் சிறப்பிக்க வேண்டுகிறோம். முன் அனுப்பிய அறிவிப்புமடலில் குறிப்பிட்டுள்ள வங்கி எண் மாற்றம் பெற்றுள்ளதால் இவ்வழகிய அறிவிப்பு மடல் அம்மாற்றத்துடன் வருகிறது. எனவே பணம் அனுப்பும் நிலையில் இவ்வறிக்கையில் குறிப்பிடப் பெற்றுள்ள வங்கிக் கணக்கு எண்ணைப் பயன்படுத்தவும். அன்புடன் மு.பழனியப்பன். பொருளாளர் கம்பன் கழகம்காரைக்குடி

Series Navigationஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்