கொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…

Spread the love

தன்னில் பயணித்த நீரோடைகளின்
தடயங்களோடிருக்கும் மணல்பரப்பில்
திரண்டிருந்த ஆடுகளோடு உரையாடினார்
சிலுவையில் அறையப்பட வேண்டியவன்தான்
பாவிகளை ரட்சித்து
பாவமூட்டையின் சுமைதாங்கி நின்றேன்
என் வழித்தடங்கள் புனிதமாக்கப்பட
தேர்ந்த மேய்ப்பாளனானேன்
அப்பங்கள்களை சகலருக்கும் பகிர்ந்து
தொடுதலில் சுகப்படுத்தும்
சிகிச்சை நிபுணன்தான்
மனக்கசப்பும் வருத்தமுமின்றியே சுமக்கிறேன்
எனது ஜனன நாளில் அவதரித்து
என்பொருட்டு பலியான
சிசுக்களுக்காகவென்றார்
மேலிருந்து உதிரத்தொடங்கின
கொன்றைப் பூக்கள்…

Series Navigationகாந்திகிராம ஃபோட்டோ ஒன்று – அம்மா, மாமாஜி படம்உஷாதீபனின் “தனித்திருப்பவனின் அறை” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள் அளித்துள்ள முன்னுரை