கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

இரவு வானம்

சூரியன்-
பகலில்
மத்தாப்பெரிக்கிறான்.
நெருப்பு பொறியில்
துளைகளாகி போகிறது
இரவு வானம் .

களவாணி

இதமான மௌனத்தை பெயர்த்து
களவாடத் தூண்டும்
இரவு வானில்
சிதறி கிடக்கம்
நட்சத்திரங்கள்

மனசுக்காக …

இருபதாயிரம்
துளைகள்
வியர்வை சொரிய
எங்கேனும்
இரு துளையுண்டா?
இனியவளின்
இதயம் நுழைய …

நிலா முத்தம்

கிண்ணம் நிறைய
நீரெடுத்து
கால்கள் நனைத்து
கொள்கிறேன்
நழுவி விழுகிறது
நிலா !

புத்தகம்

நல்ல புத்தகம் தேடி
நாமெல்லாம் அலைகிறோம்
வளர்த்தவர்கள் புத்தகங்களேனும்
வெகுமதியை தொலைத்துவிட்டு!

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6ஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்