சனநாயகம்:

Spread the love

தாத்தா
நினைவு தப்பி
தன்மை பிறழ்ந்து
முன்னிலை மறந்து
படர்கைகளை
பிழையாக அனுமானித்து
முதுமையை வாழுகையில்
பரிதாபமா யிருக்கும்

கட்டிக்
காலங்கழித்தப் பாட்டியையும்
பெற்றுப்
பேர் வைத்த அம்மாவையும்
பேரன்பு காட்டிய
எங்களையும்கூட
இதுதான் இவர்தான்
நான்தான் நீதான்
என
அடிக்கடி
அடையாளம் காட்டியே
பேச வேண்டியிருந்தது

தேர்தல் விழா
தேர்த் திருவிழாவென
படு விமரிசையாக
நடந்து முடிய

கட்சி சார்புக்கும்
ஆட்சி மாற்றத்திற்கும்
அவர்
சுய நினைவோடு
தீர்மாணித்திருக்க முடியா தெனினும்
தாத்தாவின்
சுட்டு விரலிலும்
சனநாயகக்
கரும் புள்ளி!

Series Navigationசரவணனும் மீன் குஞ்சுகளும்அழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை