சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 45

This entry is part 45 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

  

இந்த வாரம் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினை பற்றித் தெரிந்துகொள்வோம்.

वर्तमानक्रियापदेन सह ’ स्म ’ इत्येतत् यदा युक्तं भवति तदा भूतकालार्थः दृश्यते।तात्कालिकभूतकालार्थे एतादृशः प्रयोगः विशेषतः क्रियते। (vartamānakriyāpadena saha sma ityetat yadā yuktaṁ bhavati tadā bhūtakālārthaḥ dṛśyate |tātkālikabhūtakālārthe etādṛśaḥ prayogaḥ viśeṣataḥ kriyate |) நிகழ்கால வினைச்சொல்லுடன் ’ स्म ‘ (sma) என்ற சொல் சேரும்போது இறந்தகாலத்தில் நடந்ததை புலப்படுத்துகிறது. குறிப்பாக இறந்தகாலத் தொடர்வினை / செய்வது வழக்கம்  (Past Continuous/ used to) போன்ற  சமயங்களில் இப்படிப்பட்ட உபயோகங்கள்  செய்யப்படுகின்றது. स्म (sma) என்பது எப்போதும் நிகழ்கால வினைச்சொல்லின் பின்சேர்க்கையாக இருப்பதை கவனிக்கவும். (You must note that ‘ स्मis always suffixed to a Present tense form)

 

उदा   –  श्रीरामः अरण्ये सञ्चरति स्म।

udā       śrīrāmaḥ araṇye sañcarati sma |

ஸ்ரீராமர் காட்டில் நடந்துகொண்டிருந்தார்.

 

राक्षसाः जनान् पीडयन्ति स्म।

rākṣasāḥ janān pīḍayanti sma |

அரக்கர்கள் மக்களைத் துன்புறுத்திக்கொண்டிருந்தார்கள்.

 

बाल्ये अहं सर्वदा क्रीडामि स्म।

bālye ahaṁ sarvadā krīḍāmi sma |

சிறுவயதில் நான் எப்போதும் விளையாடிக்கொண்டு இருந்தேன்.

 

अभ्यासः  (abhyāsaḥ 1 )

एतत्सम्भाषणम्उच्चैःपठन्तु  अवगच्छन्तु

etat sambhāṣaṇam uccaiḥ paṭhantu  avagacchantu ca

இந்தஉரையாடலைஉரத்துப்படித்துப்புரிந்துகொள்ளவும்.

 

 

आचार्यः –   भोः छात्राः। अद्य भवन्तः किं ज्ञातुम् इच्छन्ति ?

ācāryaḥ    – bhoḥ chātrāḥ | adya bhavantaḥ kiṁ jñātum icchanti ?

ஆசிரியர்  –  மாணவர்களே ! இன்று நீங்கள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் ?

छात्राः   –  श्रीमन्। अद्य वयं श्रीकृष्णस्य विषये ज्ञातुम् इच्छामः।

chātrāḥ   – śrīman | adya vayaṁ śrīkṛṣṇasya viṣaye jñātum icchāmaḥ |

மாணவர்கள் –  மதிப்பிற்குரியவரே ! இன்று நாங்கள் ஸ்ரீகிருஷ்ணருடைய விஷயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

 

आचार्यः  –  उत्तमम्। भवन्तः प्रश्नान् पृच्छन्तु अहम् उत्तरं वदामि।

ācāryaḥ –  uttamam | bhavantaḥ praśnān pṛcchantu aham uttaraṁ vadāmi |

ஆசிரியர்  –  நன்று ! நீங்கள் கேள்விகளைக் கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன்.

 

राजेशः –    प्रियच्छात्राः। श्रुण्वन्तु। श्रीकृष्णः बाल्ये अतीव चञ्चलः आसीत्। सः बहु क्रीडति स्म , प्रतिदिनं वनं ग्च्छति स्म , धेनूः चारयति स्म।

rājeśaḥ –     priyacchātrāḥ | śruṇvantu | śrīkṛṣṇaḥ bālye atīva cañcalaḥ āsīt | saḥ bahu krīḍati sma pratidinaṁ vanaṁ gcchati sma dhenūḥ cārayati sma |

ராஜேஷ் –   இனிய நண்பர்களே ! கேளுங்கள் .  கிருஷ்ணர் சிறுவயதில் அங்குமிங்கும் சென்றுகொண்டிருந்தார். அவர் வெகுநேரம் விளையாடிக்கொண்டிருந்தார், தினமும் காட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.

ममता  –   सः अन्यत् किम् इच्छति स्म ?

mamatā –  saḥ anyat kim icchati sma?

மம்தா  –  அவர் வேறு என்ன விரும்பி இருந்தார் ?

 

आचार्यः  –  कृष्णः नवनीतं बहु इच्छति स्म। सः प्रतिदिनं नवनीतं खादति स्म।

ācāryaḥ  – kṛṣṇaḥ navanītaṁ bahu icchati sma | saḥ pratidinaṁ navanītaṁ khādati sma |

ஆசிரியர்  – கிருஷ்ணருக்கு வெண்ணெய் மிகவும் பிடித்திருந்தது. அவர் தினமும் வெண்ணெயை சாப்பிடுவது வழக்கம்.

 

 

 

रजनीशः –   श्रीमन्। मम माता वदति यत् श्रिकृष्णः मृत्तिकाम् अपि खादति स्म।

rajanīśaḥ –  śrīman | mama mātā vadati yat śrikṛṣṇaḥ mṛttikām api khādati sma |

ரஜனீஷ்  –  மதிப்பிற்குரியவரே ! என்னுடைய அம்மா கிருஷ்ணர் மண்ணைக் கூட  தின்றுகொண்டிருந்தார் என்று சொன்னார்.

 

आचार्यः  –  सत्यं भोः। सः मृत्तिकाम् अपि खादति स्म किन्तु तदा माता यशोदा कृष्णं तर्जयति स्म।

ācāryaḥ –   satyaṁ bhoḥ | saḥ mṛttikām api khādati sma kintu tadā mātā yaśodā kṛṣṇaṁ tarjayati sma |

ஆசிரியர்  – உண்மைதான் . அவர் மண்ணைக்கூட சாப்பிட்டுக்கொண்டிருந்தார் ஆனால் அப்போது அம்மா யசோதா கிருஷ்ணரை கோபித்துக்கொண்டார்.

 

गीताञ्जलिः  – तस्य विषये अन्यः कोऽपि विशेषः ?

gītāñjaliḥ  –   tasya viṣaye anyaḥ ko’pi viśeṣaḥ ?

கீதாஞ்சலி –  அவருடைய செயலில் வேறு ஏதாவது குறிப்பிடத்தக்கது இருக்கிறதா ?

 

आचार्यः  –  एकः मुख्यः अंशः नाम सः सर्वदा वेणुं वादयति स्म।तस्य वेणुनादं श्रुत्वा सर्वे मोहिताः भवन्ति स्म ,  अतः तस्य एकं नाम मोहनः इति अपि अस्ति। अस्तु अद्य पर्याप्तम्। श्वः पुनः नूतनं विषयं ज्ञास्यामः।

ācāryaḥ  –  ekaḥ mukhyaḥ aṁśaḥ nāma saḥ sarvadā veṇuṁ vādayati sma |tasya veṇunādaṁ śrutvā sarve mohitāḥ bhavanti sma  ataḥ tasya ekaṁ nāma mohanaḥ iti api asti | astu adya paryāptam | śvaḥ punaḥ nūtanaṁ viṣayaṁ jñāsyāmaḥ |

ஆசிரியர் – ஒரு முக்கியமான செயல் அவர் எப்போதும் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார்.  அவருடைய  புல்லாங்குழலின் இசையைக் கேட்டு அனைவரும் தன்னிலை மறந்திருப்பது வழக்கம்  அதனால் அவருக்கு ‘மோகன்’ என்று கூடப் பெயர் உள்ளது. சரி இன்று போதும். நாளை மீண்டும் புதிய விஷயம் தெரிந்துகொள்வோம்.

 

उपरितनंसम्भाषणंपठित्वाप्रश्नानाम्उत्तराणिलिखन्तु

uparitanaṁ sambhāṇaṇaṁ paṭhitvā praśnānām uttarāṇi likhantu –

மேலேயுள்ளஉரையாடலைப்படித்துகீழேயுள்ளவினாக்களுக்கானவிடைகளைஎழுதுங்கள்.

 

 

१.  श्रीकृष्णः प्रतिदिनं कुत्र गच्छति स्म ?

śrīkṛṣṇaḥ pratidinaṁ kutra gacchati sma?

ஸ்ரீகிருஷ்ணர் தினமும் எங்கு சென்றுகொண்டிருந்தார் ?

 

२.  कृष्णः काः चारयति स्म ?

kṛṣṇaḥ kāḥ cārayati sma?

கிருஷ்ணர் எவற்றை(பெண்பால்) மேய்த்துக்கொண்டிருந்தார் ?

 

३.  सः प्रतिदिनं किं खादति स्म ?

saḥ pratidinaṁ kiṁ khādati sma?

அவர் தினமும் என்ன சாப்பிட்டுக்கொண்டிருந்தார் ?/சாப்பிடுவது வழக்கம் ?

 

४.  कृष्णः किं वादयति स्म ?

kṛṣṇaḥ kiṁ vādayati sma?

கிருஷ்ணர் எதை வாசித்துக்கொண்டிருந்தார் ? / வாசிப்பது வழக்கம் ?

 

५ . माता किमर्थं तर्जयति स्म ?

mātā kimarthaṁ tarjayati sma?

அம்மா எதனால் கோபித்துக்கொண்டார் ?

 

६.  कृष्णः किम् अपि खादति स्म ?

kṛṣṇaḥ kim api khādati sma?

கிருஷ்ணர் எதைக்கூட சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ?

 

 

 

 

 

अभ्यासः  (abhyāsaḥ  2)

 

सुन्दरेशः बन्धुगृहं गत्वा आगतवान्।तत्र कः कः किं करोति स्म इति सः मातरं वदति !

sundareśaḥ bandhugṛhaṁ gatvā āgatavān |tatra kaḥ kaḥ kiṁ karoti sma iti saḥ mātaraṁ vadati!

சுந்தரேசர் உறவினர் வீட்டிற்குச் சென்றுவந்தார். அங்கு யார் யார் என்ன  செய்துகொண்டிருந்தார் என்று அவர் அம்மாவிடம் சொன்னார்.

 

 

 

 

 

 

 

१.  मातामहः ध्यानं करोति स्म।

mātāmahaḥ dhyānaṁ karoti sma |

தாத்தா (அம்மாவின் தந்தை) தியானம் செய்துகொண்டிருந்தார்.

 

२.  मातुलानी —————————–।

mātulānī —————————– |

மாமி _____________________  !

 

३.  मातुलः —————————-।

mātulaḥ —————————- |

மாமா ____________________ !

 

४.  रमा ———————————।

ramā ——————————— |

ரமா ———————————— !

 

 

५.  सुधा ——————————-।

sudhā ——————————- |

சுதா  ———————————– !

 

६.  रमेशः ——————————-।

rameśaḥ ——————————- |

ரமேஷ் ———————————- !

 

७.  लीला ——————————–।

līlā ——————————– |

லீலா ——————————- !

 

८.  मातामही ———————————-।

mātāmahī ———————————- |

பாட்டி (அம்மாவின் தாயார்) _________________________ !

 

 

விடைகள்

अभ्यासः 

 

२.  मातुलानी पाकं करोति स्म।

mātulānī pākaṁ karoti sma |

 

३.  मातुलः पूजां करोति स्म।

mātulaḥ pūjāṁ karoti sma |

 

४.  रमा शयनं करोति स्म।

ramā śayanaṁ karoti sma |

 

५.  सुधा पुस्तकं पठति स्म।

sudhā pustakaṁ paṭhati sma |

 

६.  रमेशः योगासनं करोति स्म।

rameśaḥ yogāsanaṁ karoti sma |

 

७ . लीला सम्मार्जनं करोति स्म।

līlā sammārjanaṁ karoti sma |

 

८.  मातामही पौत्रीं लालयति स्म।

mātāmahī pautrīṁ lālayati sma |

 

 

அடுத்த வாரமும் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினை பற்றி படிப்போம்.

 

 

 

Series Navigationகார்ட்டூன்குணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….
author

ரேவதி மணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *