சமூக வரைபடம்

Spread the love

 

எழுத்தின் வளைவுகள்

நெளிவுகள்

மையப்புள்ளியாய்

 

தொனியில் அழுத்தத்தில்

மழுப்பலில்

சொற்கள்

சொற்றொடர்கள்

கூர் முனையில் நீளத்தில்

பயன்பாட்டில்

வேறுபடும்

கருவிகளாகும்

ஆயுதங்களுமாகும்

 

மண் வாசனை

வர்ணாசிரம சுருதி

அதிகார அடுக்கின்

அழுத்தங்கள்

ஏழ்மையின்

இயலாமைகள்

இவற்றுள் ஒன்று

தொனிக்காத

சொற்களுண்டா?

 

வர்க்கங்களின்

காப்புரிமை

உடைய

சொற்களுண்டு

 

விற்பவர்

மட்டுமல்ல

வலை விரிப்பவர் மட்டுமல்ல

தூண்டில் வீசுவோர்

சொற்களின் இடையே

ஒர் ஆயுதக் கிடங்கை

மாயமாய் மறைக்க வல்லார்

 

அரசியலின்

சொல்லாடல்கள்

பெரிதும்

நம் கவனத்தில்

 

சொல்லாடல்கள்

ஊடான

அரசியலே

சமூக வரைபடம்

Series Navigationமரபு மரணம் மரபணு மாற்றம் – இரண்டாம் மற்றும் இறுதி பாகம்“ கவிதைத் திருவிழா “-